ஓ காதல் கண்மணி

okkanmani3feb2கடைசியாப் பாத்த மணிரத்னம் படம் வீர தீர சூர மொக்கையான ராவணன். கடைசியா பாத்துப் பிடிச்ச மணிரத்தம் படம் கன்னத்தில் முத்தமிட்டால். ஆயுத எழுத்துல அங்கங்க சில காட்சிகள ரசிச்சாலும் மொத்தமா பாத்தா ரசிக்காத படம் தான்.

இதுல ஓகே கண்மணி பாட்டுகள் வந்தப்போ பெண் பாடும் மனமனமன மெண்டல் மனதில் பாட்டு நல்லாருக்கு. மத்ததெல்லாம் ஒன்னும் தோணலன்னு நண்பர்கள் கிட்ட சொல்லியிருந்தேன்.

அதுக்கும் மேல புதன் கிழமைக்கு டிக்கெட் எடுத்தா, திரைல இருந்து மூனாவது வரிசை. போகனுமா வேண்டாமான்னு யோசனை. ஆனாலும் போயாச்சு.

படத்துல பிரகாஷ்ராஜ், துல்கர், நித்யா தான் தெரிஞ்ச முகங்கள். துல்கரோட அண்ணியா வர்ரவங்களும் டிவிபுகழ் ரம்யாவும் சொல்லலாம். மத்ததெல்லாம் புதுப்புது முகங்கள். அறிமுகமா controversial லீலா சாம்சன் வேற.

”எனக்கு ஞாபக சக்திதான் கொறப்பு போச்சு. நான் முட்டாளாயிடல”ன்னு லீலா சாம்சன் சொல்றப்போ பிரகாஷ்ராஜோட நடிப்பும் மறுமொழியும் கலக்கல்.

படத்துல ரொம்பப் பிடிச்சது பிரகாஷ்ராஜும் நித்யா மேனனும் தான். பாத்திரமாவே மாறிட்டாங்க. பாட்டுப் பாடி முடிச்சிட்டு குள்ளக் கத்திரிக்காயா நித்யா எந்திரிச்சு வந்து பிரகாஷ்ராஜுக்குக் கை கொடுக்குற காட்சியை ரொம்பவே ரசிச்சேன். நித்யாவோட தமிழ் உச்சரிப்பு செம செம.

துல்கர்… நல்லா நடிச்சிருக்காரு. ஆனாலும் திரும்பவும் சொல்றேன். அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் வர்ரது அபூர்வம். தமிழ்நாட்டுக்கான நிறம் இருந்தாலும் ஏதோ ஒன்னு பொருந்தல. மலையாள தேசத்துல நல்லா முன்னேற வாய்ப்பிருக்கு.

இந்தப் படம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பத்தின்னு பொதுவா எல்லாரும் சொல்றாங்க. அந்தப் பாத்திரங்களும் அப்படித்தான் சொல்லுது. ஆனா அது உண்மையில்லைன்னு நெனைக்கிறேன்.

கிட்டத்தட்ட களவுமணம் செஞ்சிக்கிட்ட காதலர்கள் மாதிரித்தான் தெரியுறாங்க. அவங்க பாசம் புரியுறப்போ எடுக்குற முடிவுதான் படத்தின் முடிவு. இது உண்மையான லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பா இருந்திருந்தா இவ்வளவு பாசம் இருந்திருக்காதுன்னு தோணுது. அதுல வெவ்வேறு பிரச்சனைகள் வந்திருக்கும்.

பாட்டெல்லாம் படம் பாக்குறப்போ ரொம்பவே பிடிச்சிருந்தது. எல்லாப் பாட்டுகளையும் ரசிச்சேன். தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை-ங்குற வரிய தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை-ன்னு எழுதியிருந்தா இன்னும் அமுதமா இருந்திருக்கும்.

படத்துல நான் ரொம்ப ரசிச்ச விஷயங்கள் ரெண்டை குறிப்பிட்டேயாகனும். படத்தோட எழுத்து போடும் காட்சிகள். அதே மாதிரி படம் முடியும் போது எழுத்து போடும் காட்சிகள். அவங்க என்ன ஆனாங்கன்னு அழகா கார்டூனா காட்டியிருந்தது ரொம்ப நல்லாருந்தது. I always love happy ending. 🙂

அல்சைமர் நோயைப் பத்தி இதுவரைக்கும் தமிழ்ல படம் வந்திருக்கான்னு தெரியல. ஆனா அந்த நோயைக் கொஞ்சம் கொஞ்சமா அறிமுகப் படுத்தி அதனால உண்டாகும் பிரச்சனைகளைக் காட்டியிருந்த விதம் நல்லாருந்தது. வருத்தப்படவும் வெச்சது. கண்ணீர் விடவும் வெச்சது.

படம் பாக்குறப்போ பலர் ரொம்பச் சிரிச்சாங்க. இன்றைய இளைஞர்கள் போல. நான் அந்தக் காட்சிகளை நல்லாவே ரசிச்சேன். ஆனா சிரிப்பு வரல. ஆனா ஒரு காட்சில சிரிச்சிட்டேன். அது ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட்டை நித்யா துல்கரிடம் கொடுக்கும் இடம்.

இன்னோன்னு சொல்லியே ஆகனும். “ஏன்? முடியல? பிடிக்கல. மாட்டேன்”ன்னு எரிச்சல் படுத்தும் ஒரு சொல் வசனங்கள் படத்துல இல்ல. தெளிவாக் காதுல வசனங்கள் கேக்குது. வசனம் யாருன்னு தெரியல. நல்லாருந்தது. அதே மாதிரி இருட்டுக்குள்ள உக்காந்து படம் பாக்குற மாதிரியும் இல்ல. பி.சி.ஸ்ரீராம் காட்சிகளை அழகாக் காட்டியிருக்காரு. மும்பையையும் அகமதாபாத்தையும்ம் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி காட்டியிருக்காரு.

மொத்தத்துல எதையும் யோசிக்க விடாத காட்சியமைப்பு. நல்ல பாடல்கள். மகிழ்ச்சியான முடிவு. ரசிக்கத்தக்க படம். இன்னும் கொஞ்ச நாளைக்கு தாராவும், ஆதியும், கணபதியும், பவானியும் மண்டைக்குள்ள ஓடிட்டு இருப்பாங்க.

இனிமே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை வெச்சு தமிழ்ல சிலபல படங்கள் வர வாய்ப்பிருக்கு.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to ஓ காதல் கண்மணி

 1. Saba-Thambi says:

  Thanks for the review. DVD எப்ப கிடைகுமோ அப்போ நிச்சயம் பார்ப்பேன்.

  PS
  “கடல்” படம் வசூலில் தோல்வி என்றாலும் relatively சுமாரான படம்.

  • GiRa ஜிரா says:

   கண்டிப்பா பாருங்க. நல்ல படம்.

   கடல் படம் நான் பாக்கல. ஏதோ ஒரு பயம் 🙂

 2. anbesivam says:

  enna ellame ok nu sollitinga…. oru negative kooda sollaliye ;-))) ayudha yezhuthai muzhusaa pudikkala nu sollittu okk va romba rasichaa yeppudi ;-))))

  • GiRa ஜிரா says:

   படத்துல தோண்டிப் பாத்தா நெகட்டிவ்கள் இருக்கும். ஆனா படம் பாக்குறப்போ அது தோணாம இருக்கனும். ஓகாதல்கண்மணில அது தெரியல. ஆயுத எழுத்துல சிட இடங்கள்ள பிரேக் போட்ட மாதிரி இருந்தது. அதான் 🙂

 3. abdul khalid says:

  விமர்சனம் டபுள் ஓகே ஜி.ரா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s