ம்ருத்துஞ்சய பகபகபகபக

Uttama-Villain-Posters-2ரொம்ப நாளா எதிர்பாத்த படம். எதிர்பார்ப்பை முழுமையா நிறைவேத்தலைன்னாலும் படத்துல பேசப்பட வேண்டியவை நெறைய இருக்கு. அதுதானாலதான் இந்த விமர்சனம்.

நல்ல நடிகர்கள் படம் முழுக்க வரவேண்டியதில்ல. அப்பப்ப வந்தாலும் அட்டகாசம் பண்ண முடியுங்குறதுக்கு ஊர்வசியும் எம்.எஸ்.பாஸ்கரும் எடுத்துக்காட்டு. ஊர்வசிக்கெல்லாம் நாலு காட்சிகள்தான் மொத்தப் படத்துலயும். சொக்கு aka சொக்கலிங்கம் செட்டியாரா வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு கூட ஏழெட்டு காட்சிகள் தான். அதுலயும் சொக்கு வேலைய விட்டுப் போறேன்னு சொல்லும் காட்சி. அடடா. இவங்க நடிப்பு கண்ணுக்குள்ளயே இருக்கு.

ஜிப்ரான்… கலக்கல் மச்சி. சமீபத்துல ரசிக்க வைக்கிற இசை உங்களோடதுதான். நல்லதா ரெண்டு கமர்ஷியல் படங்கள் கெடைச்சா பெரியாளா வர்ரதுக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கு. God bless you. கொஞ்ச நாளாக் காதக் கழட்டி வெச்சிட்டுத்தான் படம் பாக்க வேண்டியிருக்கு. உத்தம வில்லன்ல அந்தக் கவலை இல்லாம நிம்மதியாப் படத்தைப் பாத்தேன். அருமை. அருமை.

பார்வதி மேனன்… சூப்பரம்மு. கமலை முதன் முதலாச் சந்திக்கிற காட்சியில் கமலை சாசேஜ் மாதிரி ஹாட்டாக் பிரட்டுக்குள்ள வெச்சித் தூக்கிச் சாப்பிட்டியே! இப்படியெல்லாம் நடிச்சா தமிழ்ல வாய்ப்புத் தர மாட்டாங்களேம்மா!

கமலோட மகனா வர்ர பையன் யார்னு தெரியல. என்னை +2 படிக்கிறப்போ பாத்தது மாதிரியே இருந்ததுன்னு குடும்பத்து மக்கள் சொன்னதுனாலயே யார்ரா அதுன்னு படத்தைப் பாத்தேன். சாயல் இருக்குது. நல்லா நடிச்சிருக்கான் பையன்.

இதுவரைக்கும் நான் மேல சொன்னவங்கள்ளாம் கமலை விட படத்துல நல்லா நடிச்சவங்க பட்டியல். இனிமே கமலையும் சேத்து மத்தவங்களையும் பாப்போம்.

பாலச்சந்தரைத் திரையில் பாத்தது சந்தோஷம். நடிச்சது பாலச்சந்தரா நாகேஷான்னு சந்தேகம் வந்தாலும் பாலச்சந்தர் சொல்லித்தானே நாகேஷ் நடிச்சார்னு தெளிஞ்சு புரிஞ்சிக்கிட்டேன். கே.விஸ்வநாத்துக்கு ரொம்பவே வயசாயிருச்சு. இனிமே ஓய்வுதான் தேவை.

கலைவாணர், கண்ணதாசன், எம்.எஸ்.வின்னு பெரிய பெரிய லெஜண்டுகள் கூட வேலை செஞ்ச சுப்பு ஆறுமுகத்தை ஒரு காட்சில சுருக்கமாக் காட்டினாலும் படத்துல பாக்குறதுல ஒரு மகிழ்ச்சி.

நாசரை நல்லாவே வீணடிச்சிருக்காங்க படத்துல. கு.ஞானசம்பத்தையும் சினிமாவுக்குள்ள இழுத்தாச்சு. சண்முகராஜன் வழக்கம் போல வீணாக்கப்பட்டிருக்கிறார். ஜெயராமுக்கு நல்ல பாத்திரம். ஆனா நடிக்கிறதுக்கு அவ்வளவா வாய்ப்புகள் இல்லை.

ஆண்டிரியா… பெரிய பாத்திரம் கிடையாது. ஆனா படம் முழுக்க வரும் டாக்டர் பாத்திரம். நடிக்க பெருசா காட்சிகள் இல்லைன்னாலும் இரண்டாம் பாதியில் அடக்கி வாசிச்சதே அருமை. பூஜா குமார் கிளாமர் காட்டாம நடிச்சிருந்திருக்கலாம். பாக்குறவன் பாவம்யா.

யாரையோ மறந்துட்டேனே. ஆ… படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். ஹிஹிஹி. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் படத்துல எறக்கீட்டீங்க போல?

ஐயோ! படத்தின் பேர் முதல் வணக்கம் வரை படத்தில் நீக்கமறை எங்கும் நிறைந்த சர்வாண்டவியாபியான கமலைப் பத்திப் பேசாம மத்தவங்களைப் பத்திப் பேசிக்கிட்டேயிருக்கோமே! அது பாவமாயிறாதா!

கமல் சார், இனிமே டூயட்டெல்லாம் ஆட வேண்டாம். போதும். ஒரு கிஸ்சுக்கே பாட்டெல்லாம் யோசிக்காம வெட்டி எறிஞ்சிருக்கலாம். அதுவும் படம் தொடங்குனதும் அப்படியொரு பாட்டைப் போட்டா படம் பாக்குறவன் டர்ராக மாட்டானா?

பூர்வாசிரமப் பேர் தமிழ்ப் பேரா இருக்கனும்னா ஆறுமுகம்னு எங்கப்பன் முருகன் பேரைத்தான் வைக்க வேண்டியிருக்கு. 🙂

மனோரஞ்சன் பாத்திரப் படைப்பு அருமை. மொதல்ல தொய்வா இருந்தாலும் ரெண்டாம் பாதியில் மனோரஞ்சன் பகுதிகள் பிரம்மாதம். படத்துல நான் ரொம்ப ரசிச்சதே மனோரஞ்சன் பகுதிகள்தான். மிகப்பிரபல நடிகரா வர்ர முதல் பதினைந்து நிமிடங்களை விட அதுக்கப்புறம் வர்ர பகுதிகள் மிகப்பிரமாதம். இதையே முழுக்கதையா எடுத்திருக்கலாம்.

உத்தமன் கதை. வரலாற்றுப் பகுதிகள்ள தேவை நல்ல கத்தரிக்கோலும் நல்ல வசனகர்த்தாவும். கமல், என்னைய எழுதச் சொல்லியிருந்தாக் கூட இந்தப் பகுதிகளுக்கு நல்லா வசனம் எழுதிக் கொடுத்திருப்பேன். வில்லுப்பாட்டு தெருக்கூத்துன்னாலே வசனத்துல ஒரு நையாண்டித்தனம் இருக்கனும். இதுல நையப் புடைச்ச ஆண்டித்தனம் தான் இருந்தது.

கிராபிக்ஸ் எல்லாம் காசுக்கேத்த பிட்சான்னு தெரியும். அதுனால அதுல எதுவும் நான் குறை சொல்லல.

அதெல்லாம் சரி. அந்த யாமினி யாமினின்னு பேசிக்கிறாங்களே, அது பிரபல அபூர்வ இராகக் கண்ணழகி நடிகைதானே? அப்போ மனோண்மணி யாருன்னு படம் பாத்த இரசிகர்கள் கேக்குறாங்க. நமக்கெதுக்குன்னு நான் கண்டுக்கலை.

சரி. கமல். ஒரு அருமையான கதைக்களம் முழுமையான நல்ல படமா வளராததுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க? நீங்க என்ன வேணாலும் நெனச்சிக்கோங்க. எனக்குத் தோணுனதச் சொல்றேன். நான் சொல்றது சரியாத் தப்பான்னு உங்க மன முடிவுக்கே விட்டுர்ரேன். நான் வெறும் வெளிப்பார்வையாளந்தான்.

1. நீங்க சொல்றது சரியில்லைன்னு அடிச்சுச் சொல்ற ஆட்களைப் பக்கத்துல வெச்சுக்கோங்க.
2. எல்லாத்துக்கும் தலையாட்டும் நண்பர்களை விட, தவறுகளைச் சுட்டும் எதிரிகள் உதவி செய்வார்கள். அவங்க சொல்றதைக் கேட்டுக்கிற மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒங்களுக்குத் தெரியும்.
3. படம் முழுக்க எல்லாக் காட்சிகள்ளயும் வரனும்னு தேவையே இல்லை.
4. ரொம்ப குளோசப் காட்சிகள் வேண்டாம். உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கும்.
5. உங்க படத்துல வழக்கமா வர்ர சிலரைக் கழட்டி விட்டுருங்க.
6. திரைக்கதை எழுதவும் வசனம் எழுதவும் புது ஆட்களை உதவியாளர்களா வெச்சுக்கோங்க.

இடிப்பாரை இலாத ஏமரா க(ம்)மல்
கெடுப்பா ரிலானுங் கெடும்!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to ம்ருத்துஞ்சய பகபகபகபக

 1. ammuthalib says:

  சிங்கிள் கிஸ்கே லௌவ்வான்னு கேட்டது ஆண்ரியாவ பாத்தாமே, கழுகார் சொல்றார்

 2. Sudhir says:

  First time seeing a situational kural! Nice 🙂
  Valara vaalthukal…

  Sudhir

 3. படத்த பார்த்துட்டுதான் ஈராஸ், திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ஸ்டுடியோ க்ரீன், சூர்யா 2டி இத்தனை கைமாறியிருக்கும் போல. உத்தமனும் நானே வில்லனும் நானேனு கமல் சொன்னதுல ப்ரொடியூஸர்ஸ்க்கு இன்டைரக்ட் மெசேஜ் இருக்கும் போல.

  கவிதாலயா படம்னா ஆரம்பத்துல குறள் போட்டு ஆரம்பிப்பாங்க. கவிதாலயா ஓனரே நடிச்ச இந்த படத்த உங்களோட இந்த குறள வெச்சு முடிச்சுருக்கலாம் 🙂

 4. Eakalaivan says:

  சூப்பரப்பு.

 5. Eakalaivan says:

  சூப்பரப்பு. 🙂 🙂

 6. johnlinson says:

  liked your views and sugessions! agree that he must have some one in team to tell strongly if something is wrong and polish the things to suit majority people.
  and the duet is intentionaly made to mocary the masala films..which u missed out.. next time watch his sons reaction and his phone conversation and kamals reaction. thanks for your views. john

 7. yarlpavanan says:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 8. Pandian says:

  அவசரகதியில் முடித்திருப்பார்கள் போல.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s