ஆஸ்பித்திரி வத்தல்

ஒரு ஆஸ்பித்திரியில் கம்பவுண்டர் வத்தல் வடகம் விக்கிறதா எழுத்தாளர் பாரா சொல்லியிருந்தாரு. ஸ்பெஷல் தரிசனத்துல டாக்டரைப் பாக்குறதுக்கு டோக்கன் குடுக்குறதோட ஒரு கம்பவுண்டரோட வேலை முடிஞ்சிருச்சா என்ன!

இருக்குற வேலைய விட்டுட்டு நோயாளிகளை அக்கறையோட கூட்டீட்டு வரும் மக்களுக்கு எதாச்சும் பொழுது போக வேண்டாமா? எல்லா ஆஸ்பித்திரிலயும் இப்ப டிவி போட்டு விட்டுர்ராங்க. ஆனா பாருங்க.. நமக்குப் பிடிச்ச நிகழ்ச்சி மட்டும் அதுல வரவே வராது. ஆஸ்பித்திரிக்குப் போய் ரிமோட் எங்கன்னு கேக்கவும் முடியாது.

இப்பிடியான பிடிக்காத டிவி போட்டுக் கொடுமைப் படுத்துறத விட வடகம் வத்தல் விக்கிறது நல்லதுதானே. ஆயிரம் எடத்துக்குப் போனாலும் ஒரு கடைக்குள்ள போய் பலதரப்பட்ட விதவிதமான தின்பண்டங்களப் பாக்குற மகிழ்ச்சி வேறெதுலயாச்சும் வருமா? வாங்குறதெல்லாம் ரெண்டாம் பட்சம். திங்குறதெல்லாம் மூனாம் பட்சம்.

சரி. இதுவோ ஆஸ்பித்திரி. இங்க விக்கிற வத்தல் வடகமெல்லாம் சாதாரண வத்தல் வடகமா இருக்கக்கூடாது. மருத்துவ குணம் வாய்ந்த வத்தல் வடகங்களா இருந்தா வசதி. டாக்டரும் கோவிச்சுக்க மாட்டாரு. வாங்குறவங்களுக்கும் “ஆஸ்பித்திரிலயே விக்கிற மருந்து வத்தல்”னு ஒரு திருப்தி இருக்கும்.

அதுக்குதான் இந்தக் கட்டுரையையே எழுதுறேன். சமையல் அரசனான நளமகாராஜன் என் ஞானக்காதுகளில் சொன்னதையெல்லாம் வெச்சு இந்தக் கட்டுரையை எழுதுறேன். படிக்கும் கம்பவுண்டர்கள் பயன்பெற்றுக் கொள்ளவும். வத்தல் விற்பனை ராயல்டியெல்லாம் எனக்கு வேண்டாம். எல்லாம் நளமகாராஜனுக்கே சொந்தம். அவரும் வேண்டாம்னு சொல்லிட்டாரு.

காய்ச்சல் இருக்குறவங்களுக்குப் பொதுவா வாய்க் கசப்பு இருக்கும். எதக் குடுத்தாலும் வாய்க்குப் பிடிக்காது. அவங்களுக்குத் தொட்டுக்க வேப்பிலைக்கட்டி இருந்தா ரெண்டு வாய் ரசம் விட்டுப் பிசைஞ்ச சோறு திருப்தியா எறங்கும். அதுனால வேப்பிலைக்கட்டி விக்கலாம்.

வேப்பிலைக்கட்டியில வேப்பிலை இருக்குமான்னு கேட்டா… இருக்காது. அதுல நார்த்தை இலைதான் இருக்கும். சிலர் எலுமிச்சையிலைலயும் செய்றதுண்டு. காய்ச்சல் இருக்குறவங்க மட்டுமில்லாம எல்லாருமே சாப்பிடலாம். தயிர்ச்சோற்றுக்கு ஊறுகாய்க்குப் பதிலா சுர்ருன்னு இருக்கும்.

நம்ம ஆஸ்பித்திரியில் இருக்கோம்னு நம்ப வைக்கிறதே இருமல் சத்தந்தான். வாயைப் பொத்தி இருமல், பொத்தாமல் இருமல், கர்ச்சீப் இருமல், மாஸ்க் போட்டு இருமல், கையை மைக் மாதிரி வெச்சு இருமல்னு பலவகை இருக்கு. அடுத்த என்ன இசையமைக்கிறதுன்னு தெரியாமத் தவிக்கிற இசையமைப்பாளர்கள் இருமலை வெச்சு பாட்டுப் போடலாம்.

இந்த இருமலுக்குத் தூதுவளை சூப்பர் மருந்து. தூதுவளை வடகம் போட்டா இருமலுக்கு நல்லா இருக்கும். தூதுவளை இலைல அடிப்பகுதில முள்ளிருக்கும். அந்த முள்ளைக் கிள்ளி எடுத்துட்டு நல்லாக் கழுவி நிழலில் ஈரம் போக உலத்திக்கனும். அதைப் பொடிப்பொடியா நறுக்கி கூழ்வடகத்துக்குக் காய்ச்சும் போது சேத்துக் காய்ச்சி வடகம் போடனும். அவ்வளவுதான். இருமல் ஓடியே போயிரும்.

இதே போல உடம்பு வலிக்குக் கண்டந்திப்பிலி வடகம், காயங்கள் சிரங்குகளுக்குக் குப்பைமேனி வடகம், மஞ்சள் காமாலைக்குக் கீழாநெல்லி வடகமெல்லாம் போடலாம்.

ஆஸ்பித்திரிலயே விக்கிறதுன்னு ஆயாச்சு. ஏன் வடகத்தோட நிறுத்தனும்? என்னதான் சொல்லுங்க… ஊறுகாய் மாதிரி வருமா? ஒடம்பு சரியில்லாதவங்களுக்கு ஊறுகாய் யாராவது குடுப்பாங்களா? நோயாளிகளுக்கும் குடுக்குற மாதிரி ஒரு மூலிகை ஊறுகாய் போட்டா என்ன?

கீழாநெல்லி, குப்பைமேனி, முருங்கை, அருகம்புல், ஆடுதொடாயிலை ஆகிய ஐந்து மூலிகை இலைகளை எடுத்துக் கழுவி நிழலில் உலர வைக்கனும். உலர்த்திய இலைகளை பொடிப்பொடியா நறுக்கி வெச்சுக்கனும். முழுநெல்லிக்காயை கொட்டையில்லாம சுளைசுளையா எடுத்துக்கனும். இதையெல்லாம் ஒன்னாக் கலந்து இட்டிலிக் கொப்பரைல ஆவியில் வேக வைக்கனும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊத்தி கடுகு சீரகம் தாளிச்சு, வேகவைத்த கலவையைப் போட்டு வதக்கனும். ருசிக்குத் தக்க மொளகாப் பொடி உப்பு பெருங்காயம் போட்டு சுருள வதக்கினால் மூலிகை ஊறுகாய் தயார். இதுல நெல்லிக்காய்க்குப் பதிலாக புளிக்கரைசல் ஊற்றியும் சுருள வதக்கலாம்.

இது மாதிரி நளமகராஜன் என் ஞானக்காதுக்கு ஓதிய இன்னும் நூத்துக்கணக்கான மூலிகை வடக ஊறுகாய் செய்முறைகள் எனக்குத் தெரியும்னு தன்னடக்கத்துல தலைகால் புரியாமச் சொல்லிக்கிறேன். இருந்தாலும் நீங்க உங்க மூளையைப் பயன்படுத்தி இன்னும் நிறைய கண்டுபிடிச்சா எல்லாருக்கும் நல்லது.

நூடுல்ஸ்ல கெமிக்கல் இருந்தா அரசாங்கம் தடை பண்ணுது. மருந்து மாத்திரைல மட்டும் கெமிக்கல் இருக்கலாமா? அதுனால கெமிக்கல் இருக்கும் மருந்துகள விட இந்த மாதிரி இருமல் இலைவடகம், தலைவலி வத்தல், வயித்துவலி வடகம், காய்ச்சல் தொக்கு, ஷுகர் சுண்டைக்காய் ஊறுகாய்ன்னு வாங்கிச் சாப்பிட்டா எல்லாம் இயற்கையா நடக்கும். ஒங்க நன்மைக்கு மட்டுந்தான் சொல்றேன்னு புரிஞ்சு நடந்துக்கோங்க.

நளமகராஜாய வித்மஹே! சைட்டிஷாய தீமஹி! தினமும் தின்னா பிரசாதம்யா!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in சமையல், நகைச்சுவை and tagged . Bookmark the permalink.

3 Responses to ஆஸ்பித்திரி வத்தல்

 1. திருட்டு,பிச்சை எடுக்கறத தவிர எதுவுமே தப்பில்லை, தாராளமா அனுமதிக்கலாம். என்ன அந்த வடகத்துனால நோய் தொத்தாமயிருக்க இன்னும் ஏதாவது ஒரு மூலிகைல லேக்கியம் ஃப்ரியா கொடுக்கலாம், ஏன்னா வடகம் விக்கற இடம் ஆஸ்பத்திரி 🙂

 2. amas32 says:

  இது ரொம்ப நல்ல பிசினஸ் ஐடியாவா இருக்கே ஜிரா! super 🙂

  //நளமகராஜாய வித்மஹே! சைட்டிஷாய தீமஹி! தினமும் தின்னா பிரசாதம்யா!//
  விவிசி

  amas32

 3. வணக்கம் ஜிரா…

  ஜி+ உங்களுக்கு ஒரு பாட்டு பகிர்ந்து இருக்கிறேன்…நேரம் கிடைக்கும் போது பாருங்கள். ;))

  CSK படத்தின் டைட்டில் பாடல் 😉

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s