ஜார்ஜ் குட்டியா சொயம்புலிங்கமா?

திருஷ்யம் படம் வந்தப்போ அதை அவ்வளவு ரசிச்சு விமர்சனம் எழுதுனேன்.

அந்த விமர்சனத்தை இப்பிடி எழுதி முடிச்சேன். சந்தேகம் இருந்தா அந்தப் பதிவுல படிச்சுப் பாருங்க. 🙂

கமல் நடிக்கப் போறாராம். இது கமலுக்கான படமே அல்ல. சத்தியராஜ் மிகப் பொருத்தமா இருப்பாரு. பிரபு கூட பொருத்தமா இருப்பாரு. ஆனா… கமல்… பாக்கலாம் எப்படி அமையுதுன்னு.

ஆனா… அன்னைக்கு நான் சொன்னது தப்புன்னு கமல் நிரூபிச்சிட்டார். என்னுடைய கருத்து தோத்துப் போச்சுன்னு நான் பெருமையாவே சொல்லிக்கிறேன்.

Papanasam-2015-film-Posterதிருஷ்யம் பாத்தப்பவே தமிழ்ல யார் யாருக்கு எதெதுன்னுன்னு நண்பர்கள் பேசிக்கிட்டோம்.
மோகன்லான் – சத்தியராஜ்/பிரபு
மீனா – மீனா/அபிராமி
கான்ஸ்டபிள் சகாதேவன் – கலாபவன் மணி
ஐஜி கீதா பிரபாகர் – ஆஷா சரத்/உமா ரியாஸ் (ஆனா ஆஷா சரத் மட்டுந்தான்னு என் மனம் சொல்லுச்சு)

இதுல நாங்க நெனச்சபடி பொருந்தி வந்தது கலாபவன் மணி தான். ஆனா அவருடைய நடிப்பு எனக்குப் பிடிக்கல. அந்தப் பாத்திரத்து மேல இருக்கும் வெறுப்பு மட்டுமல்ல.. பொதுவாகவே கலாபவன் மணியோட நடிப்பு எனக்குப் பிடிக்கிறதில்ல.

கமல் ஹாசன்னு பேர் போடுறப்போ கொஞ்சப் பேர் கை தட்டுனாங்க. கமல் இரசிகர்களா இருக்கும்னு நெனச்சிக்கிட்டேன். ஆனா நான் கீழ சொல்லப் போற காட்சிகள்ள மொத்த தேட்டருமே கை தட்டுச்சு.

1. மனைவி மகள்களுக்கு கமல் சொல்லிக் கொடுக்கும் கட்டங்கள்
2. ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொருவரையும் மீண்டும் சந்தித்து நினைவில் பதிய வைக்கும் கட்டங்கள்
3. தோண்டி எடுத்து ஏமாந்து எல்லாரும் திரும்பிக் கமலைப் பார்க்கும் போது கமலின் முகபாவம். என்னன்னு சொல்றது அந்த முகபாவத்தை? மலையாள நடிகர்களே கொஞ்சம் கத்துக்கோங்க தமிழ்நாட்டுல இருந்துன்னு கத்தனும் போல இருந்துச்சு.
4. கடைசியில் எல்லாத்தையும் இழந்துவிட்டு வந்து நிற்கும் பெற்றோரிடம் பேசும் காட்சி. மோகன்லால் ஒரு செயற்கையான இயல்புத்தனத்தோட பேசியிருப்பாரு. கமல் கலக்கிட்டாரு. கமல் நடிச்சதுதான் எனக்கு இயல்பாத் தெரிஞ்சுச்சு. தேட்டர் முழுக்க கைதட்டல்.

ஒரு நடிகன் பஞ்ச் டயலாக் பேசுனா கை தட்டும் கூட்டமா ஒரு நடிகன் நல்லா நடிச்சதுக்கும் கை தட்டுதுன்னு கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். சந்தோஷப்பட்டேன்.

மோகன்லாலா கமலான்னு கேட்டா… கமல்னு யோசிக்காமச் சொல்வேன். அதுக்குக் காரணம் என்னென்ன?

1. ஒரு பாத்திரத்த மொதல் மொதல்ல நடிச்சு உருவாக்குறது நல்ல நடிகனோட திறமைதான். அதான் மோகன்லால் செஞ்சது. ஆனா அதை மறக்க அடிக்கிற அளவுக்கு ஒருத்தர் நடிக்க முடியும்னா… அதைத்தான் சிறந்த நடிப்புன்னு என் அறிவு சொல்லுது. அதைக் கமல் செஞ்சிட்டாரு. கமலா இந்தப் பாத்திரத்திலன்னு பழைய பதிவுல கேட்ட அதே வாய்தான். 🙂

2. படம் முழுக்க அவர் நடிச்ச காட்சிகளையெல்லாம் விடுங்க. மேல நான் சொன்ன நாலு கட்டங்கள்ள மூனாவது நாலாவது காட்சிகள் போதும்.

ஒரு சாதாரண சினிமா இரசிகனான எனக்கே கமல் நடிப்பு பிடிச்சிருக்குன்னா… கமல் இரசிகர்கள் எந்த அளவுக்கு இரசிச்சிருப்பாங்கன்னு என்னால நெனச்சுப் பாக்க முடியுது.

கௌதமி பொருந்துவாரான்னு மொதல்ல யோசிச்சேன். அவருக்குக் கொடுத்த வேலையைச் செஞ்சிருக்காரு. பின்னணி பேசுனது யார்னு தெரியல?

இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் வழக்கம் போல சிறப்பாச் செஞ்சிட்டாங்க.

ஜிப்ரான்… சூப்பரப்பு. மலையாளப் படத்துல பாட்டுகள் மனசுல நிக்கல. தமிழ்ல ரெண்டு பாட்டுமே அருமை.

படத்துல குறைன்னு இல்ல… சின்னச் சின்ன விஷயங்கள்ள மிஸ் பண்ணதைச் சொல்லனும். இதை நான் கவனிச்சது எனக்கே ஆச்சரியம்.

1. சன் டிவில பாசமலர் படம் பாக்கும் போது அதுல ராஜ் விடியோ விஷன் லோகோவும் தெரியுது. டிவிடில இருந்து எடுத்திருப்பாங்க போல.

2. சன் டிவில படம் முடிஞ்சதும் சேனலை மாத்துறாரு. மறுபடியும் சன் டிவில மிட்நைட் மசாலா பாட்டுகள் வருது.

3. தென்காசி பத்திரகாளியம்மன் கோயிலுக்குப் போனதாச் சொல்றாங்க. ஆனா பெருமாள் கோயில்ல உக்காந்து சாமி கும்பிடுறாங்க. இதுல பெருமாளை வேற திரும்பத் திரும்பக் காட்டி அது பெருமாள் கோயில்தான்னு உறுதிபடுத்துறாங்க. தென்காசி காசிவிசுவநாதர் கோயில் பிரபலம். அங்க போனதாக் காட்டியிருக்கலாம். கதைக்களனையும் சமூகத்தையும் வைச்சுப் பாக்குறப்போ பொருத்தமாவும் இருந்திருக்கும்.

முடிக்கும் போது கருத்து சொல்லித்தான் முடிக்கனும்.

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல இனிமே ஆண்பிள்ளைகளையும் வீட்டுல ஒழுங்கா வளக்கனும். பெற்றோர்களுக்கு அது புரியனும். இப்பப் புரியலைன்னா அடுத்துத் துன்பப் படப் போறது அந்தப் பெற்றோர்கள் தான். கீதா பிரபாகர் நிலை நல்ல எடுத்துக்காட்டு.

காவல் துறை மேலயும் அரசாங்கத்து மேலயும் மக்களுக்கு நம்பிக்கை கொஞ்சமும் இல்லைங்குறதுதான் மக்களை கமல் செய்யும் செயல்களைச் சரின்னு ஏத்துக்க வைக்குது. காவல்துறையும் அரசாங்கமும் மக்களை விட்டு விலகி எங்கயோ போயாச்சு. அவங்கவங்க அவங்கவங்கள திறம்படப் பாத்துக்கனும். அவ்வளவுதான்.

பாபநாசம் – கண்டிப்பா ஒரு சிறந்த ப(பா)டம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

10 Responses to ஜார்ஜ் குட்டியா சொயம்புலிங்கமா?

 1. kanapraba says:

  அட்டகாசம் ஜிரா

 2. பெருமாள் கோவிலா? அப்பக் கட்டாயம் ஒருக்கா பார்க்கத்தான் வேணும். த்ருஷ்யம் நாங்களும் பார்த்தோம். இப்ப கமல் பார்க்கக் கொஞ்சநாள் செல்லும். ஆகட்டும். பார்க்கலாம்:-)
  ரொம்ப நேர்மையா எழுதுன நடுநிலை பதிவு! பாராட்டுகள்!

  • GiRa ஜிரா says:

   டீச்சர், பாபநாசமும் பாத்துருங்க. அங்க ரிலீஸ் ஆகுமான்னு தெரியலையே.

   • அதெல்லாம் நம்மூரில் ரிலீஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. த்ருஷ்யம் ஹிந்தி (இதுக்கு என்ன பெயர் வச்சுருக்காங்க?) ஒருவேளை ஆக்லாந்தில் ரிலீஸ் ஆகலாம்.

 3. amas32 says:

  சூப்பர் ஜிரா. ரொம்பப் பிடிச்சுது உங்க அலசல் 🙂 திரும்பப் படம் பார்த்த உணர்வு 🙂

  amas32

 4. நீங்க சொல்றதையும் ஏற்று கொள்கிறேன்.
  என்னை கேட்டால் கதைதான் முக்கிய அம்சம். யார் நடித்திருந்தாலும், அவர்களுக்கே உரித்தான டிரேட் மார்க் நடிப்பில் அசத்தியிருப்பார்கள். கமல், கேக்கவே வேண்டாம். அசத்திபோடுவார்.
  மோகன்லால் & கமல் : ஒருத்தர் மல்கோவானா ஒருத்தர் இமாம்பசந்து.
  ஒருத்தர் திருநெல்வேலி அல்வானா ஒருத்தர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவைதானே.
  நன்றி. அருமையா அலசியிருக்கீங்க வாழ்த்துகள் 🙂

  • GiRa ஜிரா says:

   மோகன்லாலைக் குறைத்துச் சொல்ல வரவில்லை. மோகன்லாலின் நடிப்பையும் மிகவும் ரசித்தேன். அப்படிப் பட்ட நடிப்பையே மறக்க வைத்துவிட்டார் கமல் என்றுதான் சொல்ல வந்தேன். பொதுவா ரீமேக்ல அவ்வளவு திருப்தி இருக்காது. ஆனா இது விதிவிலக்கா நின்னுருச்சுன்னு சொல்ல வந்தேன். 🙂

 5. Glive Ahilan says:

  இது ‘பாபநாசம்’ படத்தைப்பற்றிய கருத்தல்ல:
  பொதுவாக, கமல் போன்ற முதல் நிலை நடிகர்கள் மோகன்லால், நஸிருதீன் ஷா போன்ற வேற்று மொழி முதல் நிலை நடிகர்களின் படங்களை ரீமேக் செய்து நடிப்பது தவறு என்று சொல்வதை விட நல்லதல்ல,நாகரிகமல்ல எனச் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில்,
  1. Comparisons (இணை மதிப்பீடு?)-ஐ தவிர்க்க முடியாது. மற்றவர்களை விடக் கமல் நடிப்புதான் சிறந்தது என நாம் சொல்லுவோம்(நம்மவராச்சே!). அப்படியே நிஜமாகவே சிறப்பாக இருக்கக் கூடினும் அது original படத்தில் நடித்தவரின் மகிமையைப் பாதிக்கவே செய்யும். என்னதான் இருந்தாலும் Original படத்தில் நடித்தவர் ‘creator’ ஸ்தானத்தில் இருப்பவர் என்பதையும் Remake படத்தின் நடிகர் ‘re creator’ ஸ்தானத்தில்தான் இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.(காப்பி அடிப்பது என்பது கொச்சைப்படுத்துவது!).
  2. கமல் போன்ற நடிகர்கள் ரீமேக் படங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவரைப்போன்ற முழுமையான கலைஞர்கள் பல்வேறு புதுப்புதுப் பாத்திரங்களை உருவாக்க வேண்டுமேயொழிய ஏற்கனவே ‘ஹிட்டடித்த’ பாத்திரங்களை காப்….(ச்சே!) recreate செய்யக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.
  3. அப்போ யார்தான் ‘recreate/remake’ செய்து பணம் சம்பாதிப்பது?!
  வளரும் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். அது அவர்களின் Skill மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையும் கூட. கமல் போன்றவர்கள் அதைச் செய்வது Reliance (fresh) காய்கறி வியாபாரத்தில் ‘இறங்குவது’ போன்றதற்கு ஒப்பாகும்.
  பி.கு:
  ஷாஜஹானின் தாஜ்மஹால்தான் என்றைக்கும் Original.
  என்னதான் Las Vegas-ல் அதை ‘Recreate’ செய்திருந்தாலும் அல்லது
  ஷாஜஹானே வந்து அதைத் திருப்பிக் கட்டினாலும்
  Original Original தான்.

  தங்களின் நேரத்திற்கும் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் நன்றி!
  😊🙏😊

  • GiRa ஜிரா says:

   நல்ல அழகான நீண்ட பின்னூட்டம். ரசித்துப் படித்தேன்.

   ரீமேக் படங்கள்ள ரவிச்சந்திரன் கன்னடத்துலயும் வெங்கடேஷ் தெலுங்குல செஞ்சதையும் தான் பாத்தோமே. இதுல விசு நடிச்சிருந்தாக் கூட படம் ஓடியிருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு. உண்மைதான். ஆனா சரியான நடிகர்கள் நடிக்கும் போது பாத்திரம் மெருகேறுதுன்னு தோணுது. நல்ல கதை எங்கிருந்தா வந்தா என்ன… நல்லபடி நடிச்சா நமக்கு நல்ல படம் கிடைக்குதுல்ல. 🙂

   அப்புறம் திருஷ்யமே ஒரிஜினல் இல்ல. காப்பிதான். Suspect Xஐயும் ஒரு மெக்சிகன் மூவியையும் (பேர் சட்டுன்னு நினைவுக்கு வரலை) சரியாக் கலந்து கட்டியதுதான்.

   திருஷ்யம் எனக்கு இன்னமும் பிடிச்ச படம். மோகன்லாலின் நடிப்பும் எனக்குப் பிடிச்சிருந்தது. மோகன்லால் மலையாளியா நடிச்சிருந்தாரு. கமல் தமிழனா நடிச்சிருந்தாரு. ஒரு தமிழனா கமலோட நடிப்பை என்னால நல்லா உள்வாங்கிக்க முடிஞ்சது. இதுதான் நான் சொல்ல வந்த கருத்து.

   மலையாளப் படத்தையோ மோகன்லாலின் நடிப்பையோ குறை சொல்லும் விதமாகத் தோன்றியிருந்தால் மன்னிக்க. 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s