பொயட்டு ஜிரா

வெறும் ஜிரா.. பொயட்டு ஜிரா ஆன கதையைத்தான் நீங்க இப்பப் படிக்கப் போறீங்க.

சென்னை சிங்கப்பூர் படத்துக்குப் புது பாடலாசிரியர்கள் வேணும்னு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு போட்டி வெச்சிருந்தாரு. மூனு காட்சிகளைக் கொடுத்து அதுக்குப் பாட்டு கேட்டிருந்தாரு.

இதெல்லாம் நமக்கு எதுக்குதுன்னுதான் இருந்தேன். கம்பன் கவிமன்றக் கவிஞர் வீரபாகு எழுதுறதாச் சொன்னதும் நானும் எழுதிப் பாக்கலாமேன்னு தோணுச்சு. விதி வலியது பாருங்க.

இன்னைக்கு நாளைக்குன்னு சோம்பலா நாளக்கடத்தி.. போட்டி முடியுற கடைசி நாள் மாலைல (ஆபிஸ் வேலையெல்லாம் அப்படிச் செஞ்சுதானே பழக்கம்) உக்காந்து எழுதி அனுப்பினேன்.

பாடல்களைத் தேர்ந்தெடுத்தவங்கள்ளாம் பாவம். இதையெல்லாம் படிக்க வேண்டிய ஹெட் லெட்டர்ஸ் அவங்களுக்கு. நல்ல வேளையா நல்லா பாட்டெழுதுறவங்க வெற்றி பெற்றுட்டாங்க. அவங்களுக்கு என் வாழ்த்துகள்.

சரி.. அப்படியே பொயட்டு ஜிரா எழுதிய பாட்டுகளையும் படிச்சிட்டுப் போயிருங்க. திட்டுகளும் வரவேற்கப்படும் 🙂

மொதல் ரெண்டு பாட்டு காதற் பாட்டுகள். சென்னை இளைஞனின் காதல் பாட்டுகள். மூனாம் பாட்டு கெட்டது செஞ்ச வில்லனுக்கே ஆப்பு வெச்சுட்டு ஹீரோ பாடும் பாட்டு.

இந்தப் பாட்டுகளைப் படிக்கிறப்போ.. நீங்க ஏற்கனவே கேட்ட பழைய பாட்டுகள் நினைவுக்கு வந்தா அதையும் சொல்லுங்க 🙂

your time starts now.. 🙂

பாடல் – 1
கருப்பு வெள்ளை கிளாசிக் கண்கள்
சென்னை வெயில் போல் மின்னும் வண்ணம்
இவளைப்…..
பார்த்த கண்கள் எல்லாம் கொஞ்சுமே
அட .. நானும் கொஞ்சினேன்
ஏனோ.. கொஞ்சம் அஞ்சினேன்

பீச்சும் நானும் காத்திருக்கிறோம்
பேச்சும் மூச்சுமாய் பொழுது போக்க
அலையும் நானும் காத்திருக்கிறோம்
கொலுசுப் பாதம் தொட்டுப் பார்க்க
இன்னும் சொல்ல ஆசை உள்ளதே … ஹோ
சொல்லிப் பார்க்க கூச்சம் வந்ததே… ஹோ .. (கருப்பு வெள்ளை…

விரலும் விரலும் சேர்த்துக் கொண்டு
விடியும் வரைக்கும் பேசித் தீர்க்க
உலகம் முழுதும் காதல் உண்டு
நமக்கும் வருமோ முத்தம் கொண்டு
இன்னும் சொல்ல ஆசை உள்ளதே … ஹோ
சொல்லிப் பார்க்க கூச்சம் வந்ததே… ஹோ .. (கருப்பு வெள்ளை…

பாடல் – 2
சிறுதுளி மழையே
ஒருதுளி வெயிலே
வெண்ணிற மயிலே
இதயத்தில் நுழைந்தாயே
என் உணர்வினில் உறைந்தாயே

பருவத்தில் வருகின்ற காதல்
உருவத்தில் வருவதைக் காணடி
சிரிக்கும் விழிகளும்
சிலிர்க்கும் முடிகளும்
முறுக்கிடும் தோளும்
காதலைக் காட்டுமடி
என் காதலைக் காட்டுமடி
உன் பூமுகம் தேடுமடி (சிறுதுளி

விடியலில் மறைகின்ற நிலவு
முகத்தினில் வருவதைக் காணடி
பூக்கும் மலரும்
தூக்கும் மணமும்
தாக்கும் நிறமும்
காதலைக் கூட்டுதடி
என் காதலைக் கூட்டுதடி
உன் கூடலை நாடுமடி (சிறுதுளி

பாடல் – 3
தொகையறா
ஆட்டமா ஆடுறவனுக்கும்
அவன் பின்னால ஓடுறவனுக்கும்
ஊரை ஏமாத்தும் உத்தமனுக்கும்….

ஆப்புதாண்டா டாப்பு
அத.. வெச்சடிச்சேன் டீப்பு
இனி … உன்னால ஒன்னும் ஆகாதுடா
அட… தன்னாலே பாவம் போகதுடா (ஆப்புதாண்டா

அடிச்சுப் பிடிச்சு ஒதச்சுத் திருடும்
வழக்கத்த மாத்தி
ஹைஃபை வைஃபை ஹைடெக் சீட்டிங்
செய்யும்
உன்னைப் போல ஆளுக்கெல்லாம்
என்னைப் போல ஹானஸ்ட் ஹீரோ
ஆப்படிக்கனும்டா
மக்கள் பாத்து ரசிக்கனும்டா (ஆப்புதாண்டா டாப்பு

பாவத்தைக் கழுவ சோப்பு இல்ல
பாவ மன்னிப்பும் ஒனக்கு இல்ல
கூந்தலக் கழுவும் ஷாம்பு எதுக்கு
மூளையைக் கழுவ வேஸ்டு ஒனக்கு
கண்ணுக்கு கண்ணு
பல்லுக்குப் பல்லு
நீ வெச்ச ஆப்புக்கு ஆப்பே பதிலு (ஆப்புதாண்டா டாப்பு

அன்புடன்,
பொயட்டு ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள். Bookmark the permalink.

7 Responses to பொயட்டு ஜிரா

 1. good effots G Ra. Hope you remember me.. coming here after a very long gap (may be after few years!)… I liked the 1st one 🙂

 2. இப்ப நான் என்ன சொல்லணுமுன்னு சொல்லுங்க!

  • :)))))))))))))))))))))))))))))))))))))))))))

   இன்னும் சொல்ல ஆசை உள்ளதே… ஹோ
   சொல்லிப் பார்க்க கூச்சம் வந்ததே… ஹோ
   = இந்த “ஹோ” ஒன்னே போதும்.. சினிமாப் பாட்டு-ன்னு சொல்லிச் சிறப்பிக்க:)

   அந்த மூனாம் பாட்டு மட்டுமே not so to the mark:) இன்னும் தெறிச்சி அடிச்சாத் தானே பயம் வரும் Hero மேல?
   வல்லின ஒற்று மட்டுமே போட்டு பாட்டு செஞ்ச அருணகிரி Style, You shd follow Poet Gira:))))

   நடுவிற் பெண்பிள்ளை போல், நடுப்பாடல் தான் ரொம்ப அழகா இருக்கு!
   /சிறுதுளி மழையே
   ஒருதுளி வெயிலே/
   வெயிலை இதுவரை யாரும் துளி என்றதில்லை; இல்பொருள் உவமை போல் அழகா வந்துருக்கு!

   //தூக்கும் மணமும்
   தாக்கும் நிறமும்
   காதலைக் கூட்டுதடி
   கூடலை நாடுமடி//
   அழகான முடிப்பு; இப் பாடலைக் காட்சிப்படுத்தினா, எப்படி முடிப்பாங்க?-ன்னு யோசிக்கிறேன்….

 3. subbuthatha says:

  முருகா !!
  இந்த பாட்டை பாடலாமா?
  பாடலாமா வா? நீ இந்தப் பாடலைப்
  பார்த்ததே தப்பு.

  அதுக்குப் பிராயச் சித்தமா,
  அவர் எழுதிய முருகா பாடலை
  எனக்குப் பிடித்த ஷன்முகபிரியா ராகத்தில்
  நீ பாடுவாய். என்னை மகிழ்விப்பாய்.

  சரி முருகா. நீ
  சிரி முருகா

  சுப்பு தாத்தா.
  http://www.subbuthathacomments.blogspot.com
  http://www.kandhanaithuthi.blogspot.com

 4. raj says:

  நல்லாத்தானே இருக்கு ஜிப்ரனுக்கு ஒரு கண்டன கடிதம் அனுப்புகிறேன்

 5. இந்த பாடல்களின் மூலமாக ஒரு விஷயம் புலப்படுது 🙂
  உனக்கு லவ்வு நல்லா வருது.. ஆக்‌ஷன் சரியா வரலை.. 😉
  மூணாவது பாட்டு படிக்கறப்போ ஏனோ டி.ஆர் ஞாபகம் வராரு 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s