புலி

puliமொதல்ல நான் நன்றி சொல்லனும். யாருக்கா? படம் வந்த ரெண்டு மூனு நாளா கொடூரமாக் கழுவி ஊத்தியவங்களுக்குதான்.

இவங்கள்ளாம் கழுவி ஊத்தலைன்னா இந்தப் படம் எனக்கு முழுக்கவே பிடிக்காமப் போயிருக்கும்.

அப்போ எனக்குப் படம் பிடிச்சிருந்ததான்னு கேக்குறீங்களா? இவ்வளவு கழுவி ஊத்திய அளவுக்கு மோசமில்லைங்குறது என் கருத்து.

நல்லா வந்திருக்க வேண்டிய படம். திரைக்கதைல திரை கிழிஞ்சிட்டதால இந்த அளவுக்கு அடி வாங்குது.

ஆனா குழந்தைகள் கண்டிப்பா படத்தை ரசிப்பாங்க. குழந்தைகளோட போறதுன்னா கண்டிப்பா படத்துக்குப் போங்க.

பாகுபலியோட இந்தப் படத்தை ஒப்பிடுறதெல்லாம் டுபாக்கூர்த்தனம். பாகுபலியே டென் கமாண்ட்மெண்ட்ஸ்ல இருந்து பல காட்சிகளை உருவிய படம்.

கிராபிக்ஸ்லாம் பெருசா கொறை சொல்ல மாட்டேன். பட்ஜெட்டுக்குத் தக்க வந்திருக்கு. அவ்வளவுதான். அரங்க அமைப்புகளும் அவ்வண்ணமே.

விடுதலைப்புலிகளின் அழிவுங்குற சோகத்துல இருந்து சிம்புதேவன் இன்னும் வெளிய வரலைன்னு தெரியுது. படம் எடுக்குறப்போ சொந்தக் கருத்தை உள்ள திணிச்சா அது படத்தோட ஒட்டாம துண்டாத் தெரியும். இந்தப் படத்துலயும் அப்படியே.

நான் ரசிச்ச சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லிர்ரேன் மொதல்ல.

1. படம் எடுத்த எடங்கள்ளாம் கண்ணுக்குக் குளுமை
2. பேசும் பறவை, பேசும் ஆமை, ஒற்றைக்கண் அரக்கன், சித்திரக் குள்ளர்கள்னு அம்புலிமாமத்தனமான பாத்திரங்கள்
3. புதிர்களை விடுவிக்கிற காட்சிகள்
4. ஸ்ரீதேவி வரும் சில காட்சிகள்

யோசிச்சா இவ்வளவுதான் தோணுது.

அதெல்லாம் சரி. இதுதான் தமிழ்ல முதல் ஃபேண்டசி படம்னு யார் சொன்னா? ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வேதாள உலகம், பாசவலை, கணவனே கண் கண்ட தெய்வம்லாம் எந்த வகையோ!

படம் வெளிய வர்ரதுக்கே இவ்வளவு பிரச்சனைகள் வருது. இதுல அரசியல் மசாலா தடவிய வசனங்கள்ளாம் தேவையா? கண்டிப்பா தவிர்த்திருக்கலாம். தன்னைத் தானே திருப்திப் படுத்திக்கிறதுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தா ஒன்னும் பண்ண முடியாது.

கெட்டப் மாத்துறதெல்லாம் தனக்குப் பொருந்தலைன்னு விஜய் இப்பவாச்சும் புரிஞ்சுக்கனும்.

நகைச்சுவை நடிகர்களுக்கு நாட்டுல பஞ்சம் வந்திருச்சுங்குறது உண்மைதான் போல.

இசை… இம்சை.

இந்தப் படத்தோட ஸ்ரீதேவி நடிப்பை நிறுத்திக்கிட்டா நல்லது. இன்னும் நடிக்கனும்னு ஆசைப்பட்டா வயசுக்குத் தகுந்த பாத்திரங்கள்ள நடிக்கனும்.

படம் பாக்குறப்போ இந்தச் சிந்தனைகள்ளாம் தோன்றுவதைத் தடுக்க முடியல.

1. படப்பிடிப்பில் விஜயகுமாரைச் சந்திச்சப்போ வணக்கத்துக்குரிய காதலியே, பகலில் ஒரு இரவு படங்கள்ள ஜோடியா சேந்து நடிச்சதெல்லாம் ஸ்ரீதேவிக்கு நினைவுக்கு வந்திருக்குமா?
2. சுருதியைப் பாக்குறப்போ கமல் கூட நடிச்சது பழகுனதெல்லாம் மனக்கண்ல ஓடியிருக்குமா?
3. கத்திச் சண்டையெல்லாம் போட்டப்போ தேவியின் திருவிளையாடல் பாலநாகம்மா படங்கள்ள இராணியா நடிச்சதெல்லாம் நினைவுக்கு வந்திருக்குமா?
4. பாட்டுப் பாடும் போது டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டெல்லாம் மூளைக்குள்ள மணியடிச்சிருக்குமா?

இதுக்கெல்லாம் ஸ்ரீதேவிதான் பதில் சொல்லனும். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

2 Responses to புலி

 1. subbuthatha says:

  ஜிரா என்றாலே சத் விஷயங்களைப் பற்றி பேசுவார் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

  சத் என்று நீங்கள் நினைப்பதிலே ஸ்ரீதேவியும் இருக்கிறார் (ள் )
  என்று புரிகிறது.

  வாசகர் வட்டம் அதிகமாக இருக்கணும் அப்படின்னு முடிவோட தான் வந்திருக்கிங்க போல.

  சுப்பு தாத்தா.
  http://www.subbuthathacomments.blogspot.com

 2. ஹாஹா…. உண்மையை இப்படித் தேங்காய் உடைச்சதுபோலத் தெளிவா சொல்லிட்டீங்களே!!!!!!

  இதேதான் இன்னும் சில நடிகைகளுக்கும் இன்னும் ஒரு நடிகருக்கும்! வயசுக்குத்தகுந்த பாத்திரத்தில் நடிச்சா தேவலை.

  இல்லைன்னா முழு க்ரெடிட்டும் மேக்கப்காரருக்கு!!!!!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s