சென்னையில் ஒரு மழைக்காலம்

கவுதம் வாசுதேவ் மேனன் எடுக்காட்டி என்ன… நம்ம எழுதுவோம் சென்னையில் ஒரு மழைக்காலம்.

அதுக்கு முன்னாடி…

ஒருவேளை (நீங்கள் அரசியல் சார்புடையவரா?
இந்தக் கட்டுரை குறிப்பிட்ட அரசியல்வாதியைத் திட்ட/பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறவரா?
எந்த அரசியல்வாதியைப் பற்றியும் குறிப்பிடாவிட்டால் நடுநிலைப் போலி என்று நினைப்பவரா?)
{
இதுவொரு சாமானியனின் அனுபவம்;
இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்;
}
இல்லையென்றால்
{
கட்டுரையைப் படிக்கலாம். விமர்சிக்கலாம்;
}

எனக்கு மழை பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். முதல் மழைன்னா தூத்துக்குடி புதுக்கிராமத்துல பின்கட்டுல வரியா இருக்கும் கம்பிகளைப் பிடிச்சிட்டு பெய்யும் மழையை ரசிச்சதுதான் நினைவுக்கு வருது. அந்தப் பழக்கம் தான் பெங்களூர்ல இருந்தப்போ மழைல பைக் ஓட்ட வெச்சது.

இந்த வாட்டி சென்னைல மழையே இல்லையேன்னு நெனச்சப்போ வந்தது பாருங்க மழை. அதை மழைன்னு சொல்றத விட மழ்ழ்ழ்ழ்ழைன்னுதான் சொல்லனும்.

சென்னைல ஃபேன் போடத்தேவையில்லாத காலமும் வரும்னு அப்பத்தான் தெரிஞ்சது. பெங்களூரிலிருந்து நண்பன் ஃபோன் செஞ்சு, “மழைய நிறுத்துங்கப்பா.. உங்களால எங்களுக்கும் மழை பேஞ்சு குளுருது”ன்னு கன்னடத்துல கதறுனப்போ மனசெல்லாம் சில்ல்லுன்னு இருந்துச்சு. 🙂

இந்த மழைல ரெண்டு நாள் செய்தி வாசிக்க வேற போக வேண்டியிருந்தது. கார் எடுக்க யோசனைதான். யோசிச்சிக்கிட்டே இருந்தா எப்படிப் போறது? துணிஞ்சு எறங்கியாச்சு. கோட்டூர்பாலம், அடையார்கேட், டிடிகே ரோட் வரைக்கும் பிரச்சனையில்லை. எல்டாம்ஸ் ரோடுல திரும்புனா ஒரே வெள்ளக்காடு. செகண்ட் கியர்ல அழுத்து அழுத்துன்னு அழுத்திப் போனேன். நம்ம சோதனைக்குன்னே முன்னாடி ஒரு ஆட்டோ நம்ம அரசாங்கத்த விட மெதுவாப் போகுது. கிடங்கும் தெரியாம மேடும் தெரியாம ஒருவழியா போய்ச் சேந்தேன். அன்னைக்குப் படிச்ச செய்தியெல்லாம் மழைச் செய்திகள்தான்.

முடிச்சுட்டுப் பொறப்படுறப்போ மணி பத்தரை. ஒரு சின்ன தெருவே தண்ணீல மிதக்குது. போலாமா வேண்டாமான்னு யோசிச்சு அதுக்குள்ள விட்டாச்சு. குழியிலும் மேட்டிலும் விழுந்து எந்திரிச்சுப் போன கார் மேல எனக்கு அவ்வளவு பரிதாபம் வந்துச்சு. முக்காத் தெரு தாண்டும் போது எதுக்க ஒரு பெரிய வேன் ரிப்பேராகி நிக்குறது தெரிஞ்சது. அதுவும் நட்ட நடுவுல. ஒருவழியா சமாளிச்சு வீட்டுக்கு வந்துட்டேன். வந்த பிறகுதான் அடுத்த ரெண்டு நாள் யாருமே வீட்ட விட்டு வெளிய வறப்போறதில்லைங்குறது புரியத் தொடங்குச்சு.

அடிக்கடி மின்வெட்டு. நாலஞ்சு நாளா வெயில் இல்லாததால சோலார்ல சார்ஜ் வேற வரல. மொபைல்ல சார்ஜ் குறையுது. டேட்டாவை ஆஃப் பண்ணீட்டு ஓடுற வரைக்கும் ஓடட்டும்னு விட்டாச்சு. இன்வெர்ட்டர்ல இருந்தத வெச்சு ஒரு லைட் மட்டும் தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டோம்.

இந்த மாதிரி சமயத்துலதான் புதுமாதிரியான சமையல் அனுபவங்கள் கிடைக்கும். மிக்சி கிரைண்டர் தேவைப்படாத சமையல்தான். இதுல உழுந்து மட்டும் ஆட்டி அரிசிய ஆட்ட முடியாமப் போச்சு. அடுத்த நாள் அந்த உழுந்தமாவுலயே ரவையும் ஓமமும் பொடிப்பொடியா நறுக்கிய மிளகாய் கொத்துமல்லியும் போட்டு தோசை சுட்டாச்சு. சும்மா சொல்லக்கூடாது. அவ்வளவு ருசி. அவ்வளவும் ருசி.

காய்கறிகள் கொஞ்சமா இருந்ததால வெண்டக்கா வத்தல்களும் மிதுக்கு வத்தல்களும் தான் தொட்டுக்க. கூட மாங்காத் தொக்கு.

ரெண்டாவது நாள் டேங்குல தண்ணி இருப்பை மனசுல வெச்சுக்கிட்டு குளியா விரதம் இருக்க வேண்டியதாப் போச்சு. ரெண்டு நாளா லேப்டாப் தொடலை. நோ டுவிட்டர். நோ பேஸ்புக். நோ மூவி டவுன்லோடிங் 🙂

TH_RAIN6_1523783gரெண்டாவது நாளும் நல்ல மழை. மின்சாரக் கேபிள் எரிஞ்சு போனதால மொத்த ஏரியாவுக்கும் டிரான்ஸ்பார்மரை நிறுத்திட்டாங்க. ஆனா அந்த மழைலயும் மின்வாரியத்து ஆளுங்க வந்து வேலை செஞ்சாங்க. ரெண்டாவது நாள் ராத்திரி மின் பிரச்சனை தீந்தது. அப்பதான் டிவில நாட்டு நிலவரம் தெரிஞ்சது.

மூனாம் நாள் செம்பரம்பாக்கம் ஏரிய தொறந்துட்டாங்கன்னு சொன்னதும் அடையாறுல தண்ணி வருமே பாக்கலாம்னு ஒரு ஆசை. மழை மதியத்துக்கு மேல விட்டதும் வீட்ல எல்லாரும் பொறப்பட்டும் போனோம். போய்ப் பாத்தா தண்ணி ஜலஜலஜலன்னு ஓடுது. பாலத்துக்கு ரெண்டு பக்கமும் போலிஸ் நின்னுக்கிட்டு விடமாட்டேங்குறாங்க.

ஒரேயொரு ஃபோட்டோ எடுத்துக்குறோம். ஒரேயொரு நிமிஷம்னு சொல்லிப் பாத்தோம்.

“பாலம் ஒடஞ்சிருச்சுன்னா ஒரேயொரு நிமிஷம்னு சொல்வீங்களா?”ன்னு அந்தப் போலிஸ்கார அக்கா கேட்டு அசிங்கப்படுத்துனாங்க.

இப்பிடிப் பாத்துட்டு அப்பிடி வந்துர்ரோம்னு சொல்லிப் பாத்தோம்.

“படிச்சவங்களே இப்படிப் பண்ணா.. இவங்கள நான் என்ன பண்றது?”ன்னு அங்க இருந்த கூட்டத்தைக் கைகாட்டி எங்கள இன்னும் கேவலப்படுத்துனாங்க.

பழைய சினிமா கிளைமாக்ஸ்ல வில்லன் திருந்துற மாதிரி இதுக்கு மேலயும் திருந்தாம இருந்தா நல்லாருக்காதுன்னு நாங்களும் திருந்தி அவங்க பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து வந்துட்டோம்.

அதுக்குள்ள ஸ்ரீநகர் காலனில இருந்த குடும்ப நண்பர்கள் அப்பார்ட்மெண்ட் வரைக்கும் தண்ணி வந்துட்டதால அவங்கள வீட்டுக்குக் கெளம்பி வரச்சொல்லிட்டோம்.

வெள்ளம் பாதிச்ச மக்கள் நெலமையெல்லாம் யோசிச்சுப் பாத்தா கஷ்டமாத்தான் இருக்கு. மடிப்பாக்கத்துல எங்க மாமா வீட்டைச் சுத்தியும் தண்ணியாம்.

மழை இப்போ ஆந்திராவுக்குப் போகுதாம். அங்க அறுவடைக்காலம் போல. அறுவடைல அறுக்க அறுக்க எல்லாம் தண்ணில அடிச்சிக்கிட்டுப் போகுதாம். என்னத்தச் சொல்ல.

ஒருவகைல நம்ம எல்லாருமே இந்த நிலைக்குக் காரணம். நீர்நிலைகளை இனிமேலாவது ஒழுங்காப் பராமரிக்கனும். வெள்ளத்தால பாதிக்கப்பட மக்களுக்கு விரைவில் நிவாரணமும் கிடைக்கட்டும்.

மனதளவில் மட்டுமில்லாம எல்லா வகையிலும் இன்னொரு மழை இப்படி வந்தா அதுக்குத் தயாரா இருக்கனும்.

எனக்கு மழை மேல கோவம் இல்ல. மாமழை போற்றுதும். நீரின்றி அமையாது உலகு.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to சென்னையில் ஒரு மழைக்காலம்

  1. ranjani135 says:

    எல்லோருமே குற்றவாளிகள்தான். குப்பையை சாக்கடையில் வீசிவிட்டுச் செல்பவர்கள், சானிடரி நாப்கினை டாய்லெட்டில் போடும் பெண்கள், மழை நீர் சேமிப்பிற்கான டாங்க்கை சரியாகச் செய்யாத வீட்டுச் சொந்தக்காரர்கள், அவ்வப்போது ஏரி, குளம், குட்டைகளை சரியாகப் பராமரிக்காத அரசு, மணலைச் சுரண்டிச் சுரண்டி நீர் நிலைகளை வற்றச் செய்தவர்கள், அதன் மேல் வீடு கட்டியவர்கள் எல்லோருமே!
    மழையை ரசிக்கலாம். மழ்ழ்ழ்ழயை அல்ல!

  2. ranjani135 says:

    கேட்க மறந்துவிட்டேன். தொலைக்காட்சியில் செய்தி படிக்கிறீர்களா? எந்த சானலில்?

  3. மனதளவில் மட்டுமில்லாம எல்லா வகையிலும் இன்னொரு மழை இப்படி வந்தா அதுக்குத் தயாரா இருக்கனும். – அருமையா சொன்னீங்க..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s