Monthly Archives: December 2015

15. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

ஆயர்ப்பாடியான திருவில்லிபுத்தூரில் இருக்கும் தோழிகள் அனைவரையும் எழுப்பியாகிவிட்டது. எழில்மங்கை ஒருத்தியைத் தவிர. பெயருக்கேற்ற எழில் கொண்டவள். இளங்கிளியின் கொஞ்சும் மொழி கொண்டவள். தோழியர் கூட்டத்திலேயே சின்னஞ் சிறியவள். அவளைக் கோதையும் மற்ற தோழியரும் எழுப்புகிறார்கள். “அன்புத் தோழியே! இளங்கிளியே! இன்னுமா உறங்குகிறாய்? எழுந்திரு?” ”சில்சில்லென்று காதைத் துளைக்கும்படி அழைக்காதீர்கள் தோழியரே! புறப்பட்டு வருகிறேன்.” “அடி கெட்டிக்காரியே! … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 6 Comments

14. வெட்கம் இல்லை நாணம் இல்லை

”வாருங்கள். அடுத்து தேன்மொழியை எழுப்பலாம்” என்றாள் கோதை. அலர்வல்லியும் பெரியநாயகியும் இன்னும் சில தோழிகளும் உடனே சிரித்துவிட்டார்கள். “ஏன் சிரிக்கிறீர்கள்?” “கோதை, தேன்மொழியைப் பற்றி உனக்குத் தெரியாதா? அவள் சரியான வாயாடி. நாள் முழுவதும் வாயாடிவிட்டு கடைசியில் சொன்னதையே மறந்துவிடுவாள். நேற்று நீ பாவை நோன்பைப் பற்றிச் சொல்லும் போது அவள் என்ன சொன்னாள் என்று … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 10 Comments

13. இரண்டும் ஒன்றல்லவோ

நாராயணி என்ற தோழியும் இன்னும் வரவில்லை. அவள் தூக்கத்தில் இல்லை. ஆனால் பெயருக்கேற்றவாறு அந்தக் கண்ணனை மனதில் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்த மோனத் தவநிலையில் விடிந்ததும் அவளுக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவளை அழைக்காமல் இருப்பாளா கோதை? ”வெண்மலரும் கருவண்டும் சேர்ந்தது போன்ற அழகிய கண்களை உடையவளே! பறவைகளும் சிலம்புகின்றன. வானில் விடிவெள்ளி முளைத்த வெளிச்சத்தில் வியாழனும் மங்கிப் … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 5 Comments

12. நினைத்தால் இனிப்பான்

அடுத்தது அம்பொய்கையின் வீடு. நிறைய எருமைக்கூட்டங்கள் கொண்ட வீடு. வீட்டைச் சுற்றிலும் சகதி. நீர்ச்சகதி அல்ல. பாற் சகதி. எங்கிருந்து வந்தது அந்தப் பால்? அதைத் சொல்லித்தான் அம்பொய்கையை எழுப்புகிறாள் கோதை. “மடி நிறைய பாலின் சுமை அழுத்த, அதைத் தாங்காமல் கனைத்து, எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்ததும் மடியில் தானாகப் பால் சுரந்து நிலத்தில் … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 3 Comments

11. முற்றத்தில் முற்றும் பக்தி

இன்னொரு ஆயர் வீடு. அங்கு கௌமோதகி என்றொரு தோழி. அவளையும் விட்டுச் செல்ல முடியவில்லை. நல்லவேளையாக அவள் வீட்டுக் கதவு திறந்திருக்கிறது. வீட்டிலுள்ள மற்றவர்கள் எல்லாம் எழுந்துவிட்டார்கள். அதனால் வீட்டின் முற்றத்துக்கே வந்து அழைத்தாள் கோதை. “தோழியே, உன்னுடைய இல்லத்தில் கன்று ஈன்ற மாடுகள் எண்ண முடியாத அளவுக்குக் கூட்டங்கூட்டமாக உள்ளன. அந்தக் கறவைகளின் பாலைக் … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 6 Comments

10. சொர்க்கம் பக்கத்தில்

ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள். “பாவை நோன்பு நோற்று சுவர்க்கம் போகும் பெண்ணே… தூக்கம் கலைந்து எழுவாய்.” நந்தகியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் இளவெயினி ஒரு கேள்வி கேட்டாள். “கோதை, … Continue reading

Posted in இறை, திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 4 Comments

பாருருவாய பிறப்பு

நல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும். தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன? இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்! … Continue reading

Posted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர் | 9 Comments

9. பேசா வாய் கேளாச் செவி

திருவில்லிபுத்தூராகிய ஆயர்ப்பாடியில் மிகவும் செழித்த வீடு அது. அங்கும் ஒரு தோழி. வேய்த்தோளி என்று பெயர். அவளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. அவள் உறங்கிக் கொண்டிருக்கும் மாடமானது தூய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய மாடம். அந்த மாடத்தில் விளக்குகள் சுற்றியும் எரிந்து கொண்டிருந்தன. அறையெங்கும் தூபக்கால்கள் இட்டு நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அந்த சொகுசோடு கட்டிலில் பஞ்சணை … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 5 Comments

8. கொக்கு அறு கோ

நம்பிள்ளை என்றொரு தோழி. கண்ணனைக் கொண்டாடும் கோபிகை போன்றவள். அவன் பெயரை யாராவது சொன்னாலே உருகும் உள்ளம் அவளுக்கு. ஆனால் அவளுக்கு நல்ல தூக்கம். அவளை விட்டுவிட்டுப் போக கோதையின் உள்ளம் விரும்பவில்லை. அதனால் அவள் வீட்டுக் கதவையும் தட்டுகிறாள். “அடி நம்பிள்ளை, எழுந்திருப்பாய். பாவை நோன்பில் கலந்துகொள்ள வா.” “இன்னும் விடியவில்லை. அதற்குள் என்னை … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 5 Comments

7. தயிரோசை எழுப்பும் உயிரோசை

அடுத்து கோதையர்கள் சென்றது குலக்கொடியின் இல்லம். ஆனால் இன்னும் வாயில் திறக்கப்படாமல் அடைந்தே இருந்தது. அவள் இன்னும் எழுந்திருக்காதது அனைவருக்கும் வியப்பு. காலை நேரத்தில் வழக்கமாக உண்டாகும் ஓசைகள் கேட்டும் இன்னும் எழாமல் இருக்கிறாளே என்று கோதை வாசலிலிருந்தே அவளை அழைக்கிறாள். “தோழியே, குலக்கொடியே, இன்னுமா தூக்கம்? பறவைகளிலேயே சோம்பல் மிகுந்ததாகக் கருதப்படும் ஆனைச்சாத்தன் கூட … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 4 Comments