தக தக தக தங்கமகன்

கர்ப்பிணி மனைவிய ஆட்டோல ஆஸ்பித்திரிக்கு கூட்டீட்டுப் போறப்போ வில்லன்கள் சுத்தி நின்னு சண்டை போடும் போது சிவாஜி-கே.ஆர்.விஜயா ஜெய்சங்கர்-ஜெயசித்ரா தொடங்கி கமல் ரஜினி வழியா பாக்யராஜ், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், சரத்குமார் படங்கள்ளாம் கண்ணு முன்னால வந்தது. ம்ம்ம்ம். 1980க்குப் போக டைம்மிஷினே தேவையில்லை.

Dhanush, Samantha & Amy Jackson in Thanga Magan Movie Posters

படத்தோட முதல் பாதில நிறைய காமெடி வசனங்கள். ஆனா அதுல ஒவ்வொன்னுக்கும் தேட்டர்ல மக்கள் அடிச்ச counter வசனமெல்லாம் சூப்பரோ சூப்பர். சிரிக்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணீட்ட பிறகு எப்படிச் சிரிக்க வெச்சா என்ன!

அதே மாதிரி பஞ்ச் டயலாக் வரும்போதெல்லாம் ஊஊஊஊன்னு மக்கள் ஊளை. அவங்களுக்கே அவ்வளவு கஷ்டம்னா வில்லனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்!!!!

தனுஷ் சார், அடுத்த படத்துலயாவது வெள்ளையா பாக்க லட்சணமா இருக்குறவன வில்லன்னு காட்டாதீங்க. ஒங்க எல்லாப் படத்துலயும் இதேதான் வருது. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாங்கங்குறது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் கருப்பானவங்கள்ளாம் நல்லவங்கன்னு சொல்றது. படம் தொடங்கிக் கொஞ்ச நேரத்துலயே யாரைக் கெட்டவனாக் காட்டப்போறீங்கன்னு புரிஞ்சிருச்சு.

எமி ஜாக்சன மதராசப்பட்டினத்துல பாக்குறம்மோ கும்முன்னு இருந்தது. ஐ படத்துல மாடலாப் பாக்குறப்போ கூட ஜம்முன்னு இருந்தது. இந்தப்படத்துல டொங்குன்னு இருந்துச்சுன்னு சொன்னா யாரும் அடிக்க வரமாட்டீங்கதானே?

கொடுத்த வேலையை ஒழுங்கா செஞ்சிருந்தாங்க சமந்தா. பழைய படங்கள்ள ஏழை சிவாஜியை காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு சின்ன வீட்ல கஷ்டப்பட்டுக்கிட்டு அப்பப்போ கண்ணத் தொடச்சிக்கிற பணக்கார வீட்ல பொறந்த கே.ஆர்.விஜயா சுஜாதா மாதிரியான உத்தமப் பாத்திரம்.

குலதெய்வம், வம்சம், பிரியமானவளே, வாணி ராணி மாதிரியான மெகாசீரியல்கள்ள எதாவது ஒன்னோட(அல்லது எல்லாத்தையும்) நாலு எபிசோடுகளை தொடர்ந்து பாத்தா ஒங்களுக்குப் பிடிக்கும்னா தங்கமகன் is must watch.

படத்துல ஒரு பாத்திரம் “தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்”னு பாடுது. பாரதிதாசன் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”னு எழுதினார்னு யாராவது எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

படத்தப்பத்தி எதாவது நல்ல வார்த்த சொல்லாம முடிக்கக் கூடாதுன்னு தோணுது.

ராதிகா, சீதா, கே.எஸ்.இரவிக்குமார் நல்லா நடிச்சிருக்காங்க. அவங்களுக்குள்ள இருக்கும் குடும்பப்பாசமெல்லாம் சில காட்சிகள்ள நல்லாவே வந்திருக்கு. குறிப்பா கே.எஸ்.இரவிக்குமார்-ராதிகா வீட்டில் ராதிகா சோபாவில் உக்காந்திருக்க அடுப்படியில் சீதா சப்பாத்தி செய்து எடுத்துவரும் காட்சி.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

One Response to தக தக தக தங்கமகன்

  1. amas32 says:

    ஏமி ஜேக்சன் விவரணை அற்புதம் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s