பிரேமம் – என் பார்வை

பிரேமம் – மலையாளப் படத்தோட கதை என்ன?

ஆட்டோகிராப் படத்தச் சின்னச் சின்ன மாற்றங்களோட மலையாளத்துல எடுத்தா அதுதான் பிரேமம் படத்தோட கதை.

ஆஆஆ… அப்புறம் ஏன் எல்லாரும் அவ்வளவு பாராட்டுறாங்கன்னு கேக்குறீங்களா? வரிசையாச் சொல்றேன் கேட்டுக்கோங்க.

படம் தொடங்கும் போதே பளிச்சுன்னு ஈர்க்குது கேமரா. கேரளாவோட பசுமை. படத்துல குளோசப் ஷாட்கள். கண்ணையே பிரிஜ்ஜுல வெச்ச மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு.

எழுத்துப் போடும் போது வரும் செம்பருத்திப்பூ
பள்ளிக்கூடம் போகும் வழியில் அந்த ஒயரமான நடைப்பாலம்
கேரள தரவாடுகளைப் போன்ற காலேஜ்
அப்ப மழை பேஞ்சு நின்ன மாதிரியான சூழ்நிலை
கதாபாத்திரங்கள் சந்திக்கிற ஒவ்வொரு இடம்
ஜார்ஜோட அகப்பை கஃபே

இன்னும் அடுக்கிக்கிட்டே போகலாம். மொத்தத்துல படம் முழுக்க அழகு.. அழகு.. அழகு.

ரெண்டாவது.. பொருத்தமான நடிகர்கள். இளமையான நடிகர்கள் நடிகைகள். அதுனாலயே பாத்திரங்கள்ள ஒரு நம்பகத்தன்மை வந்துருது. இந்தப் படத்துல இவர் பொருந்தலைன்னு எந்த நடிகரையும் சொல்ல முடியாது.

premamகேரளப் பெண் பாத்திரங்கள்ளாம் நல்லா செழிப்பா இருக்கும் போது மலர் பாத்திரம் மட்டும் நம்மூர்ப் பொண்ணு மாதிரி நோஞ்சானா இருக்கேன்னு பாத்தா.. சாய் பல்லவி தமிழ்நாட்டுப் பொண்ணாம். படத்துல இவர் வந்தபிறகுதான் ஒரு விறுவிறுப்பு வருது. படத்துல அட்டகாசமான பாத்திரப்படைப்பு இவருக்குதான். படம் முடியும் போது அதோட பிரம்மாண்டம் தெரியும். மலர் நறுமண மலர்.

நிவின் பாலியும் பொருத்தம். ஹைஸ்கூல் முடிச்ச பையன்.. காலேஜ் ஃபைனல் இயர்.. முப்பது வயசு பாத்திரம். நல்லாவே பொருந்துறாரு. மேக்கப் மட்டுமில்ல உடல்மொழியும் மாறியிருந்தது. நான் ரொம்ப ரசிச்ச காட்சி எதுன்னா.. வகுப்புக்கு வெளிய நின்னு மலரை ரசிக்கிற கட்டம். கொஞ்சம் ரசனை கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் காதல்னு அருமையா நடிச்சிருந்தாரு.

இந்தப் படத்தை மக்கள் ரசிக்க மிக அடிப்படையான காரணம் காதல் தான். சங்ககாலத்துலயும் காதல் இருந்துச்சு. இப்பவும் இருக்கு. இனியும் இருக்கும். அதுனால அப்பப்ப ஒரு காதல் படம் இதே மாதிரிக் கதையோட வந்து ஹிட்டாகும்.

சினிமால வர்ர மாதிரி எல்லாருக்கும் காதலிக்கக் கிடைக்கிறதில்ல. அதுனாலதான் சினிமாலயாவது ரசிக்கலாமேன்னு மக்கள் ஆதரவு கொடுக்குறது.

இதுல இன்னொரு மர்மம் இருக்கு. காதல் தோத்தாதான் அது அழகான காதலா இருக்கும். ரொம்ப வெற்றி பெற்ற காதல் படங்கள்ளாம் பாருங்க. அது தோத்துப்போன காதலாத்தான் இருக்கும். கல்யாணப்பரிசு தொடங்கி.. செம்மீன்.. மரோசரித்ரா.. ஏக் துஜே கேலியே.. மூன்றாம் பிறை.. ஆராதனா.. முகலே ஆசாம்.. இப்பிடி பட்டியல் போட்டா காதலர்கள் சேரவே மாட்டாங்க. அதுனாலதான் அவங்க காதலிச்சப்ப இருந்த இன்பம் மட்டுமே காதலோட அடையாளமா இருக்கும்.

சினிமால காதல் ஜெயிக்கனும்னா காதலர்கள் தோக்கனும். ஆனா வாழ்க்கைல அப்படி இல்லை. அது அழகான குடும்பமா மாறீடும்.

காதல் சாதாரணமான ரெண்டு பாத்திரங்களுக்குள்ள வந்தாலும் அதுல அவ்வளவு ருசியிருக்காது. ஏதாச்சும் வேறுபாடு இருக்கனும். ஒத்த வயசுப் பெண்ணோட நாயகனுக்கு வர்ர முதல் காதல் காட்சிகள் இழுவையாத் தெரிஞ்சதுக்குக் காரணம் இதுதான்.

இரண்டாவது காதல் தன்னை விட ரெண்டு மூனு வயசு மூத்த பொண்ணோட வருது. அதுவும் தமிழ்ப் பொண்ணு. அதுவும் காலேஜ்ல லெக்சரர். அதுனாலதான் மலர் டீச்சர் வந்ததுமே படத்துல ஒரு சுறுசுறுப்பு வந்துருது.

மலர் பாத்திரம் போனதும் மறுபடியும் லேசாத் தொய்வு வருது. மூனாவது காதல் தன்னை விட எட்டு வயசு சின்னப் பொண்ணோட வர்ரப்போ மறுபடியும் கதை சுறுசுறுப்பாகுது.

யாரும் படம் எடுக்கப் போறீங்கன்னா.. மேல சொன்னத நல்லா மனசுல வெச்சுக்கோங்க.

கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். ஆனா மலையாளத்துக்கு இது சரியான வேகம் தான். தெலுங்குல இந்தத் தொய்வையெல்லாம் சரி செஞ்சுருவாங்க. ஆனா கண்டிப்பா அது வேற மாதிரி இருக்கும். அது மலையாள பிரேமமா இருக்காது. தெலுங்கு பிரேமம் படத்துக்கு சுருதிஹாசன் ஏன் பொருந்தும்னு அப்ப நமக்குப் புரியும். மலையாள பிரேமம் கேரள அவியல்னா.. தெலுங்கு பிரேமம் பெசரட்டா இருக்கும்.

அப்புறம் கதாநாயகன் பேர் ஜோர்ஜ்னு இருந்தா மலையாளப் படங்கள் ஹிட்டாயிரும் போல. திருஷ்யம்ல மோகன்லால் பாத்திரத்தோட பேரு ஜோர்ஜ். இந்தப் படத்துல நிவின் பாலியோட பேரு ஜோர்ஜ்.

அடிக்க வராதீங்க. 🙂

ரொம்பவும் இந்தப் பதிவை இழுக்க விரும்பல. அதுனால நான் ரசிச்ச காட்சிகளை மட்டும் சொல்லிப் பதிவை முடிச்சிக்கிறேன்.

*படம் தொடங்குறப்போ ஜோர்ஜ் கடிதம் எழுதும் காட்சி. காகிதத்தில் மைப்பேனாவால் எழுதுவதே ஒரு அழகுதான்.
*முதல் காதலி திரும்பிப் பாக்குறதுக்கு முன்னாடியே சின்ன வயசு செலின் திரும்பி ஜோர்ஜைப் பாக்குறது. என்னா குறியீடு சாமி!!!
*மலரோட அறிமுகக்காட்சி. அந்தப் பாத்திரத்தோட துணிச்சலும் அறிவும் அதுலயே தெரிஞ்சிரும்.
*மலரோட நம்பரை ஜோர்ஜ் வாங்கும் காட்சி.
*அந்த இன்னொரு லெக்சரர் ஜாவா பாடம் நடத்தும் காட்சி. என்னோட லெக்சரர்கள் சிலர் நினைவுக்கு வந்தாங்க.
*அறிவழகனை ஜோர்ஜுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தும் காட்சி.
*மல்லிகைப்பூ கேட்கும் காட்சி.. தொடர்ந்து வரும் நெற்றியில் சந்தனம் பூசும் கோயில் காட்சி.
*ஆண்டுவிழாவுக்கு நடனம் கத்துக்கொடுக்கும் எல்லாக் காட்சிகளும். அந்த காமெடி லெக்சரர் டான்சும் தான்.
*அப்புறம் மேடைல ஆடுற அந்தத் தமிழ்ப் பாட்டு. செம குத்து.
*காமெடி லெக்சரர் என்னவளே அடி என்னவளே பாடும் காட்சி. விழுந்து விழுந்து சிரிச்சேன்.
*ஒங்க பேர் என்ன சொன்னீங்கன்னு கேட்டதுமே ஜோர்ஜ் வெளிய ஓடிவரும் காட்சி.
*செலின் தான் யாருன்னு அறிமுகப்படுத்தும் காட்சி. உண்மையிலேயே இருவருக்கும் காதல் வரும் காட்சி.
*படம் முடியுறப்போ மலரும் அறிவழகனும் பேசிக்கொள்ளும் பகுதி. மலர் கைல கொழந்தையோட வந்திருந்தா நல்லாருந்திருக்கும்.

மேல நான் சொன்ன காட்சிகளைப் படிக்கிறப்போ கண்டிப்பா ஒங்க மனசுல அந்தக் காட்சிகள் நிழலாடியிருக்கும்னு நம்புறேன். அதுனாலதான் பிரேமம் ஜெயிச்சது.

பி.கு. படம் முடிஞ்சு பேர் போடுறப்போ நிவின் பாலி பேர் போட்டுட்டு ரெண்டாவதா மடோனா செபாஸ்டியன் பேரைப் போட்டு சாய்பல்லவி பேரை மூனாவது எடத்துக்குத் தள்ளுனப்போ ஒரு சின்ன சுருக் கோபம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to பிரேமம் – என் பார்வை

 1. amas32 says:

  Exactly my thoughts 🙂

  amas32

 2. @jothishna says:

  விமர்சனம் நன்னாயிட்டு உண்டு
  😂😝

 3. Saravanan says:

  என்ட் கிரெடிட் எப்பவும் ஆர்டர் ஆஃப் அப்பியரன்ஸ் படிதான…

 4. aquasanju says:

  Good review but i shared my thoughts here:#Premam-my take on the movie https://aquasanju.wordpress.com/2015/12/29/premam-my-take-on-the-movie/

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s