Monthly Archives: January 2016

ரஜினி முருகன் – விமர்சனம்

தைப்பூசத்தன்னைக்கு முருகன் கோயிலுக்குப் போகாம ரஜினிமுருகன் படம் பாக்கப் போனதுக்காக இதுவரைக்கும் முருகன் கோவிச்சுக்கிட்டு வேலால குத்தல. அந்த தைரியத்துல படத்துக்கு விமர்சனமும் எழுதியாச்சு. குடும்பப் பாசம் என்னும் வாணலியை  அடுப்பில் வைத்து நகைச்சுவை எண்ணெய்யை நிறைய ஊற்றி காதல் கத்திரிக்காயை அதில் நறுக்கிப் போட்டு வில்லன் என்னும் மசாலப் பொடி போட்டு அளவாக அழுகை … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , | 1 Comment

30. மால் ஐ சூடும் தமிழ் மாலை

“கோதை, நீங்கள் கேட்டதெல்லாம் நான் கொடுத்தேன்!” கண்ணன் அருள் கோதையர்க்குப் பூரணமானது. ”மணிவண்ணா! எங்கள் எண்ணப்படி நடக்கும்படி நீ பறைந்தபடியால் எங்கள் உள்ளப்படி பேரின்பத்தால் நிறையும்படி ஆனது. வேட்கை என்னும் கடலில் மனம் என்ற தோணியேறி இன்பம் துன்பம் என்னும் அலைகள் மோதும் போது விதி என்ற காற்று திசைதிருப்பித் தவிப்பதே எங்கள் மானிட வாழ்க்கை. … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 9 Comments

29. மாறும் பிறவியிலும் மாறாத உறவே

”கோதை, நீங்கள் அனைவரும் இவ்வளவு பாடுபட்டு வந்து பறை கேட்கிறீர்கள். என்னால் மறுக்க முடியுமா? சரி.  உங்கள் அனைவருக்கும் முக்தி என்ற வாக்குறுதியை நான் பறைதருகிறேன். நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்ததில் மகிழ்ச்சிதானே?” புன்சிரித்துக் கேட்டான் மாயவன். “இல்லை. இந்த வரம் வேண்டாம்.” மற்ற தோழிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டவனே முக்தி தரும்போது கோதை மறுக்கிறாளே … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 5 Comments

28. இரை வாயோடு உன்னை இறைவா என்போம்

“கோதை, நீ சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது. நீங்கள் நகை அணிந்து கொண்டு.. நீங்கள் புதுப்பட்டாடை உடுத்திக் கொண்டு.. நீங்கள் அருஞ்சுவைப் பொங்கல் உண்டு கொண்டு இருந்தால், ஊராரும் உலகோரும் என்னைப் பாராட்டுவார்களோ! ஒருவேளை உங்கள் உள்ளம் நகை உடை உணவு என்று உலக இன்பங்களையே மீண்டும் நாடுகிறதோ? அதற்கான வரத்தைத்தான் பறை பறை என்று … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 3 Comments

27. வெல்லம் கொண்ட உள்ளம் வெல்லும்

ஆறு பொருட்களைக் கேட்ட கோதையிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்டான் கரியவன். “விஷ்ணுசித்தன் மகளே! நோன்புக்கு வேண்டிய பொருட்களை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நீங்களும் உங்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் நோன்பும் நோற்பீர்கள். அந்த நோன்பினால் உங்களுக்குக் கிடைக்கும் சன்மானம்தான் என்ன?” “அரவிந்தனே! அனைவர்க்கும் அருமருந்தனே! உன்னைக் கூடாதவரையும் வென்று சேர்த்துக் கொள்ளும் கோவிந்தனே! உன்னைப் போற்றிப் பாடித் … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 1 Comment

26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள்

”பேசினாலும் ஏசினாலும் ஒன்றும் பேசாமல் இருந்தாலும் இவனுடைய புன்னகை மட்டும் மாறுவதில்லையே” என்று கண்ணனின் புன்னகையில் கோதை மயங்கியிருந்தாள். கன்னி எண்ணி வந்ததைக் கொடுக்காமல் கேள்விக் கண்ணி எய்தான் பத்துதலை கொய்தான். “கோதை, சின்னஞ்சிறு பெண்கள் நீங்கள். நீங்களாகக் கூடி நோன்பு என்ற பெயரில் எதையோ செய்து என்னிடம் வேண்டி வந்திருக்கின்றீர்களே! இந்த நோன்பு வேதத்தில் … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 1 Comment

25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை

கோதை செய்த மங்களாசாசனத்தில் மகிழ்ந்திருந்த கண்ணன் முகம் மலர்ந்தான். அவனுடைய புன்னகையே “என்ன வேண்டும் கோதை?” என்று கேட்டது. கண்ணனைத் தவிர என்ன கேட்பாள் கோதைக் கண்மணி? ஆனால் அதற்கு முன் அவனைப் பிரிந்திருந்து அவள் பட்ட துன்பத்தை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள். இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தவன் எத்தனை அடிகளால் அவள் வேதனையை அளக்கப்போகிறான் … Continue reading

Posted in இறை, திருப்பாவை | Tagged , , , | 4 Comments

24. போற்றி போற்றி போற்றி

யாரைத் தேடிக்கொண்டு ஆய்க்குலத்துச் சிறுமிகள் கோதையோடு வந்தார்களோ, அவனே அவர்கள் முன் அமர்ந்திருக்கிறான். வராத ராஜனாக இருந்தவன் வரதராஜனாக முன்னால் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு என்ன கேட்பதென்றே புரியாமல் கேட்க வந்ததையெல்லாம் மறந்தார்கள். அவனைப் பார்க்கும் கண்களில் கண்ணீர். தாளமிட்ட கைகளோ தலைக்கு மேல் உயர்ந்து வணங்கின. உடம்பு என்னும் மெய் மெய்ஞான உணர்வில் புளகாங்கிதம் … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 10 Comments

23. அரிமா என மா அரி வந்தான்

தன்னை மறந்து தான் என்பதை மறந்து உருகி வேண்டிக்கொண்டிருக்கும் கோதையை இதற்கு மேலும் காக்க வைக்க மாலவன் விரும்பவில்லை. எழுந்து வந்தான். மண்ணில் திருப்பாதம் அழுந்த வந்தான். இதற்குத்தானே பாடுபட்டாள் ஆண்டாள். கண்ணன் கண்ணைப் பார்த்தாளா? இல்லை வெட்கத்தில் மண்ணைப் பார்த்தாளா? தயக்கத்தில் விண்ணைப் பார்த்தாளா? இல்லை பக்கத்தில் பெண்ணைப் பார்த்தாளா? எதையும் விடப் பெரியவனை … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 10 Comments

22. பெருமை என்பதே சிறுமை

கண்ணன் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை வந்ததும் ஆண்டாள் தொடர்ந்து பேசுகிறாள். அவளுடைய மனதில் இருப்பதையெல்லாம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொட்டிவிடுகிறாள். “கண்ணா! மணிவண்ணா! எமக்கென்று தனிப் பெருமை ஒன்றுமில்லை. எம் பெருமையே எம்பெருமான் நீதானென்று உன்னை நாடி வந்திருக்கிறோம். நீயாளும் இந்த உலகம் மிகவும் பெரியது. மிகவும் அழகானது. இந்த உலகத்து அரசர்கள் … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு | Tagged , , , | 8 Comments