ரஜினி முருகன் – விமர்சனம்

Rajini_muruganதைப்பூசத்தன்னைக்கு முருகன் கோயிலுக்குப் போகாம ரஜினிமுருகன் படம் பாக்கப் போனதுக்காக இதுவரைக்கும் முருகன் கோவிச்சுக்கிட்டு வேலால குத்தல. அந்த தைரியத்துல படத்துக்கு விமர்சனமும் எழுதியாச்சு.

குடும்பப் பாசம் என்னும் வாணலியை  அடுப்பில் வைத்து நகைச்சுவை எண்ணெய்யை நிறைய ஊற்றி காதல் கத்திரிக்காயை அதில் நறுக்கிப் போட்டு வில்லன் என்னும் மசாலப் பொடி போட்டு அளவாக அழுகை உப்பைப் போட்டு இறக்கி வைத்தால் அதுதான் நல்ல தமிழ்ப் படம். இத எல்லா நடிகர்களும் ஏற்கனவே செஞ்சாச்சு. இப்ப சிவகார்த்திகேயன் முறை. கொஞ்ச நாள் கழிச்சு வேறொரு நடிகர் திரும்பவும் செய்வாரு. நம்மளும் ரசிப்போம். பெரும்பாலான மக்களுக்கு அலுப்புத் தட்டாம பொழுது போயிருது பாருங்க. அங்கதான் ஜெயிக்கிறாங்க. அதிதீவிரமான சினிமா ரசிகர்களுக்குப் படம் பிடிச்சா என்ன.. பிடிக்காட்டி என்ன.

”தில்லா ஜெயிச்சா லக்குங்குறாங்க”ன்னு அறிமுகப் பாட்டுல சிவகாவோட பஞ்ச் டயலாக் வந்துருது. யாரைச் சொல்றாருன்னு புரியுது. அந்தப் பாட்டையும் அவர்தான் பாடியிருக்காரு.

சின்ன வயசு. பாக்க நல்லாருக்காரு. ஓரளவு நடிக்க வருது. ஆட வருது. சண்டை போடுறதையும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. அது போதுமே சிவகாவுக்கு. சின்ன கல்லு பெத்த லாபம் மாதிரி சின்ன பட்ஜெட் பெத்த வெற்றி.

கீர்த்தி சுரேஷ் புதுமுகம். பாக்கவும் புதுஸ்ஸ்ஸ்சா இருக்கு. அம்மாவைப் போல குடும்பக் குத்துவிளக்குப் பாத்திரமா மட்டுமில்லாம ஆடப் பாட வருது. அடுத்தடுத்த படங்களைப் பொருத்து நல்லா வர வாய்ப்பிருக்கு.

ராஜ்கிரணனுக்கு அவரைப் போலவே கனமான பாத்திரம். சின்னச் சின்ன காமெடியெல்லாம் நல்லா வருது. கடைசிச் சண்டைல வில்லன்களைப் பந்தாடுறப்போ யானைக்கு மதம் பிடிச்சு ஆட்களத் தூக்கிப் போட்டு மிதிக்கிற மாதிரியே தோணுதுன்னா பாத்துக்கோங்க.

பேராசிரியர் ஞானசம்பந்தம் அப்பா பாத்திரத்துல பொருத்தமா இருக்காரு. அவரோட நண்பரா வர்ர கன்னட நடிகர் அச்சுத்குமாரும் மிகப் பொருத்தம். மத்த முகங்கள்ளாம் பாத்திராத முகங்களா இருக்குறது நல்லாருக்கு.

சமுத்திரக்கனி அச்சு அசல் நடிகர்னு நிரூபிச்சிட்டாரு. ஏழரைங்குற பேருக்கேத்த பயத்தைக் கொண்டு வந்துர்ராரு. வீட்டுக்குள்ள புகுந்து கலாட்டா பண்றதாகட்டும், நாயைத் துண்டுல பிடிச்சு வீசுற காட்சியாகட்டும், பஞ்சாயத்துல பகுமானம் காட்டுறதாகட்டும், படம் முடியுறப்போ வேற எமோஷன் காட்டுறதாகட்டும்… நடிகன்யா.. நீர் நடிகன்.

சூரி காமெடிக்கு தியேட்டர் சிரிக்குது. எல்லாம் டைமிங் காமெடி. வசனம் யாருன்னு தெரியல. முக்கியப் பாத்திரங்களைத் தவிர படம் நெடுக வர்ர சின்னச் சின்ன நகைச்சுவைப் பாத்திரங்கள் அட்டகாசம் பண்ணுதுங்க. எதுக்கெடுத்தாலும் விழா எடுக்கும் சூரியோட அப்பாவாகட்டும், பாத ஜோசியம் பாக்குற ஜோசியக்காரர் ஆகட்டும், வாழப்பழம் வாங்க வர்ர சோணங்கியாகட்டும், கடையே விழுந்தாலும் கலங்காம பேப்பர் படிக்கிறவர் ஆகட்டும், பஞ்சாயத்துப் பண்ற மூனு சகோதரர்கள் ஆகட்டும், அவங்க வீட்டு அக்காவாகட்டும், மரத்து மேல கட்டிப் போடப்பட்டவராகட்டும், தெருக்கூத்துல நடிச்சுப் பாடுறவராகட்டும், பொம்பள செருப்பு போட்டு வர்ரவராகட்டும்.. இதெல்லாம் தான் படத்தில் சின்னச் சின்ன சுவாரசியங்கள்.

படத்துல மனோபாலா வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவரோட கால்ஷீட் கெடைக்கலையோ என்னவோ.

பாட்டெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரி நல்லா இசையமைச்சிருக்காரு இமான். எனக்கு ஆவி பறக்கும் டீக்கடை பாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தப் பாட்டோட வரிகளும் தான்.

டைட்டில் ரொம்ப அழகா இருந்தது. மதுரைய சுத்தி வளைச்சு கலர் கலரா காட்டியிருந்தாங்க. அதேமாதிரி I always love happy ending. இந்தப் படத்துலயும் அப்படித்தான்.

நல்ல சினிமாவா இல்லையாங்குறது வேற பிரச்சனை. படம் வெளிவந்தப்போ வெற்றியா இல்லையாங்குறது பிழைப்புப் பிரச்சனை. இந்தப் படம் நல்லாவே பிழைச்சிருச்சுன்னு தேட்டர்ல இருந்த கூட்டத்துலயும் பாக்க வந்தவங்களோட மனநிலைலயும் தெரிஞ்சிருச்சு.

திருப்பதி பிரதர்சுக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு வெற்றிப்படம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

One Response to ரஜினி முருகன் – விமர்சனம்

  1. amas32 says:

    சூப்பர் விமர்சனம். படத்தை புட்டு புட்டு வெச்சுட்டீங்க :}}

    amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s