Monthly Archives: June 2016

எதெடுத்தாலும் பத்து ரூவா

திருச்செந்தூர்ல இருந்து பொறப்பட்டு திருநெல்வேலி போற வழியில இப்பப் புதுசா ஒரு ஊர் பிரபலமாயிருக்கு. ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சியோட சொந்த ஊரான வனத்திருப்பதிதான் அந்த ஊரு. சரவணபவன் நிர்வாகம் அந்த ஊர்ல இருந்த பழைய வெங்கடேசப் பெருமாள் கோயிலை எடுத்துக் கட்டி ISCON மாதிரி மாத்திப் பராமரிக்கிறாங்க. ஊர் பிரபலமாயிட்டதால புன்னைநகர்னு மார்டனா பேரும் வெச்சாச்சு. … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் | Tagged , , , | 4 Comments

திருச்செந்தூரின் கடலோரத்தில்

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். சனிக்கிழமை காலைல ஒன்பது மணிக்கெல்லாம் திருச்செந்தூர் கோயில்ல இருக்கனும். அங்க சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. திருச்செந்தூருக்கு எத்தனை வாட்டி போயிருக்கேன்னு கணக்கே தெரியாது. தூத்துக்குடி புதுக்கிராமத்துல திருச்செந்தூர் போற பஸ் எல்லாமே நிக்கும். அங்கயே பஸ் ஏறி பலநாள் கோயிலுக்குப் போயிருக்கோம். நான் நிறைய வாட்டி போன … Continue reading

Posted in அனுபவங்கள், திருச்செந்தூர், பயணம் | Tagged , , , , , | 8 Comments

நெல்லை Upper

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். நாங்க ஒன்பது கோயில்களையும் முடிக்கிறப்போ மணி ஒன்னே முக்கால். எல்லாருக்கும் பசி. நேரா வண்டியைத் திருநெல்வேலிக்கு விட்டோம். பாளையங்கோட்டைக்குள்ள நுழைஞ்சதும் டிராபிக். அப்போ வேடிக்கை பாக்குறப்போதான் வேடிக்கையா ஒரு விஷயம் கண்ணுல பட்டது. பாளையங்கோட்டைல நிறைய முறுக்குக் கடைகள் இருக்கு. விதவிதமா முறுக்குகளைச் சுட்டு வெச்சிருக்காங்க. சொல்லி வெச்சாப்புல … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் | Tagged , , , , , , , | 16 Comments

மகர நெடுங்குழைக் காதன்

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். தொடக்க கால வலைப்பதிவர்களுக்கு டோண்டு இராகவனை நன்றாக நினைவிருக்கும். அவருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மகரநெடுங்குழைக் காதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி பதிவர்கள் மனதில் அந்தப் பெயரைப் பதித்துவிட்டார். இப்போ டோண்டு இராகவன் அந்த மகரநெடுங்குழைக்காதரோடு சேர்ந்துவிட்டார். அவரோடு பேசிப் பழகியதில்லைன்னாலும் அவரோடு சிறுசிறு கருத்து விவாதங்களை வலைப்பூக்களில் செய்திருந்தாலும் … Continue reading

Posted in அனுபவங்கள், நவதிருப்பதி, பயணம் | Tagged , | 13 Comments

திருநெல்வேலி

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். ரெண்டாம் நாள் விடியல்ல எழுந்து திருநெல்வேலிக்குப் பொறப்பட்டோம். அன்னைக்குக் காலைல முடிஞ்ச வரை நவதிருப்பதிகளையும் சாயங்காலமா நெல்லையப்பர் கோயிலையும் பாக்கலாம்னு திட்டம். கோயில்பட்டி <-> திருநெல்வேலி ரோடு எப்பவுமே நல்லாயிருக்கும். முக்கா மணி நேரம் தான். முந்தியெல்லாம் திருநெல்வேலிப் பசங்க காலைல பஸ் பிடிச்சு கோயில்பட்டி நேஷனல் இஞ்சினிரிங் … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, நவதிருப்பதி, பயணம் | Tagged , , , , , , , , , , , | 9 Comments

வில்லிபுத்தூர்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். ”கோதை பிறந்த ஊர்.. கோவிந்தன் வாழும் ஊர்”ன்னு பாடுனதெல்லாம் அந்தக் காலம். ”(பால்)கோவா பிறந்த ஊர்”ன்னு பாடுறது இந்தக் காலம். அப்படிப்பட்ட திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குப் போறதாத்தான் மாலைத் திட்டம். தூங்கி எந்திரிச்ச புதுத் தெம்போட பைபாஸ் ரோட்டு வழியாப் போனோம். வழியில் சாத்தூர்ல சண்முகநாடார் கடைல கருப்பட்டி … Continue reading

Posted in அனுபவங்கள், சாத்தூர், திருவில்லிபுத்தூர், பயணம் | Tagged , , , , , | 16 Comments

பசுமையான திணை பசுவந்தனை

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு பயணப் பதிவு. வேற எங்க? எல்லாம் பொறந்து வளந்த எடங்களைச் சுத்திதான். பசுவந்தனைல நண்பர் ஜெகனுக்குக் கல்யாணம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே டிரையின் டிக்கெட் புக் பண்ணியாச்சு. கோயில்பட்டி வரைக்கும் போறோமே.. அப்படியே அங்க பக்கத்துல இருக்கும் கோயிலெல்லாம் பாத்துட்டு வந்துறலாம்னு மூன்று நாள் திட்டம் போட்டாச்சு. நல்லா மழை … Continue reading

Posted in அனுபவங்கள், கோவில்பட்டி, பயணம் | Tagged , , , | 17 Comments

இறைவி இறைவியா?

ஒரு படம் பாத்த பிறகு அந்தப் படம் ஏன் தோத்ததுன்னு பட்டியல் போடுறது லேசு. ஆனா படத்தோட கருவை உருவாக்கி படத்தை முழுமையாக்கும் வரைக்கும் ஒரு இயக்குநருக்கு பிரசவ வேதனைதான். அதுனாலதான் இறைவி படத்துல என்னென்ன குறைகள்னு நான் இந்தப் பதிவில் பட்டியல் போடப் போறதில்லை. ஆனா டிவிட்டர்ல இறைவி படம் பத்தி நண்பர் சுதர்ஷன் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

வசனம் மிகவேற்றி

இன்னைக்கு பழனி திருப்புகழ் பாக்கப் போறோம். சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் கோயில் பழனி முருகனுக்கு இந்தத் திருப்புகழ் கல்வெட்டப்பட்டிருக்கு. அதைப் பாத்ததும் இந்தத் திருப்புகழுக்கு விளக்கம் எழுதலாம்னு முடிவு பண்ணேன். ரொம்பவே சின்னப் பாட்டுதான். நாலே வரிகள். வசனமிக வேற்றி மறவாதே மனதுதுய ராற்றி யுழலாதே இசைபயில் சடாட்சர மதனாலே இகபரசௌ பாக்ய … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | 8 Comments