பசுமையான திணை பசுவந்தனை

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு பயணப் பதிவு. வேற எங்க? எல்லாம் பொறந்து வளந்த எடங்களைச் சுத்திதான்.

பசுவந்தனைல நண்பர் ஜெகனுக்குக் கல்யாணம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே டிரையின் டிக்கெட் புக் பண்ணியாச்சு. கோயில்பட்டி வரைக்கும் போறோமே.. அப்படியே அங்க பக்கத்துல இருக்கும் கோயிலெல்லாம் பாத்துட்டு வந்துறலாம்னு மூன்று நாள் திட்டம் போட்டாச்சு. நல்லா மழை பேஞ்சு சென்னை குளுகுளுன்னு இருந்த ஒரு நாளில் டிராபிக் பிரச்சனைகள்ள இருந்து தப்பிச்சு முத்துநகர் எக்ஸ்பிரசில் ஏறினோம்.

என்னதான் சொல்லுங்க… தனிப்பயணம் தனியா ஐஸ்கிரீம் சாப்பிடும் சுகம்னா… கூட்டமாப் போறது பந்தில சாப்புடுற மாதிரி ஒரு கொண்டாட்டம். அதுவும் செட்டு சேந்துருச்சுன்னா கேக்கவே வேண்டாம். அனேகமா தொல்லை தாங்காம தாம்பரத்துலயே எங்களை எறக்கி விட்டுருவாங்கன்னு நெனச்சோம். ஆனா பெட்டில கூட வந்தவங்கள்ளாம் சாந்த சக்குபாயர்கள் போல. சகாராப் பாலைவனம் போல பரந்துவிரிஞ்ச சகிப்புத்தன்மை அவங்களுக்கு.

டிரெயின் பொறப்பட்டு எல்லாருக்கும் டாட்டா காட்டி ஸ்டேஷனைத் தாண்டியதுமே ஒரு பசி வரும். பயணப்பசின்னு அதுக்குப் பேரு. வழக்கமா நாலு இட்லி சாப்டுறவன் எட்டு இட்லி பத்தலைன்னு சொல்லுவான். வீட்டுல தெனமும் வேண்டாம் வேண்டாம்னு ஒதுக்குற இட்லி டிரெயின் ஏறுனதும் ருசியும் ஏறிரும் போல. மிளகாய்ப்பொடியில் பிரட்டி எண்ணெய் ஏறிய இட்டிலிகளும் குழைந்த தயிர்சாதமும் அன்னைக்கு இராத்திண்டி.

வயிற்றுக்கு உணவில்லாத போது செவிக்கும் ஈயப்படும்னு பெரியவங்க சொன்ன மாதிரி வளவளன்னு ஊர்க்கதை பேசிட்டே இருந்தோம். ஒரு வழியாத் தூங்கி எந்திரிச்சுப் பாத்தா விருதுநகர் வந்துருச்சு. அப்புறம் என்ன தூக்கம்? முக்கா இருட்டுல சாத்தூரைத் தாண்டி விடியப் போறப்போ கோயில்பட்டில எறங்குனோம்.Post1-Pic1புதுபஸ்டாண்ட் போற வழில ஒரு சின்ன ஹோட்டல்ல தங்கல். சின்ன லாட்ஜ் தான். ஊருக்குள்ள இருக்கும் ஓரளவு நல்ல லாட்ஜ்கள்ள ரூம் கெடைக்கல. ஆனா குறை சொல்றதுக்கு ஒன்னுமில்லை.

குளிச்சுக் கெளம்பி காலை டிபனை பழைய பஸ்டாண்ட் பக்கத்துல இருந்த லட்சுமி சங்கர் ஹோட்டல்ல முடிச்சிக்கிட்டோம். பொங்கலும் வடையும் பிரமாதம். சாம்பாரும் அருமை. டேபிள்ளயே வெங்காயச் சட்டினி உரல்ல ஆட்டிய பதத்துல கிண்ணம் நிறைய போட்டு வெச்சிருந்தாங்க. நல்லாச் சாப்டுட்டு  கை கழுவ எந்திரிச்சேன். “சார் சார்.. சாப்பிட்ட எலையை எடுக்கனும்”னு பரிமாறியவர் சொன்னாரு.  ஊர்ப்பக்கத்துப் பழக்கம். ஒரு வகைல நல்ல வழக்கம். சாப்பிட்ட எச்சில் எலையை அடுத்த ஆள் எடுக்க வேண்டியதில்லை. நானே எலையை எடுத்துப் போட்டுட்டுக் கைகழுவினேன்.

எல்லாரும் சாப்பிட்ட பிறகு பசுவந்தனைக்குப் பொறப்பட்டோம். பாத்தா.. மந்தித்தோப்பு ரோடும் எட்டையபுரம் ரோடும் சேர்ர எடத்துல ஒரு டிராபிக் ஜாம். ஸ்கூல் வேனெல்லாம் ரொம்ப நேரமா நிக்குது. பசங்களுக்கு ஒரே ஜாலியா இருந்திருக்கும். கேரளாவுல இருந்து தீக்குச்சி மரக்கட்டைகளை ஏத்திக்கிட்டு ஒரு லாரி ஊருக்குள்ள வந்துருச்சு. அதுதான் டிராபிக் ஜாமுக்குக் காரணம். நல்ல வேளையா போலீஸ் வந்து டிராபிக் சரியாப் போச்சு. பசுவந்தனை ரோட்டைப் பிடிச்சு கரிசக்காட்டு வழியாப் போனோம்.

பாண்டவர்மங்கலம், துரைசாமிபுரம், கரிசல்குளம் தாண்டிப்போனா துறையூர்னு ஒரு சின்ன ஊரு. ஆங்கிலத்துல அதை Duraiyurனு எழுதியிருந்தாங்க. துறையூர் துரையூரான மாயம் புரியல எனக்கு. அச்சங்குளம், செவல்பட்டி தாண்டி பசுவந்தனை போய்ச் சேந்தோம். வழில கரிசக்காட்டுல கடலையும் பருத்தியும் நிறைய வெளைஞ்சிருந்தது. மொத நாள் மழை பேஞ்சிருந்ததால லேசான நீர் வெயில்ல வேடிக்கை பாத்துக்கிட்டே பசுவந்தனை கயிலாசநாதர் கோயிலுக்குப் போயிட்டோம். இந்தப் பயணத்துல நாங்க போன மொதக் கோயில் பசுவந்தனை கயிலாசநாதர் கோயில்.

அன்னைக்குப் பாத்து கோயில்ல ரெண்டு முகூர்த்தம். கோலி சோடாவைக் குலுக்கித் தொறந்தாப்புல கோயில் ரொம்பி வழிஞ்சது. நாங்க போன நேரம் மாப்பிள்ளையும் பொண்ணும் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்பயே கைகாட்டி வாழ்த்திட்டு கோயிலுக்குள்ள போனோம். நல்ல கற்கோயில். சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவுல முருகன் சன்னதி. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுல வெளியாள்தான் வரக்கூடாது. சொந்தப் பிள்ளைகள் வரலாம். இப்படி அமைஞ்சிருந்தா அதுக்கு சோமாஸ்கந்தர் கோயில் அமைப்புன்னு பேரு. நடுவில் இருந்த முருகன் கோயில் மண்டபத்துலதான் கல்யாணம்.

Post1-Pic3நாங்க போகும் போதுதான் முதல் கல்யாணம் முடிஞ்சது. அடுத்தது நண்பரோட கல்யாணம். முதல் கல்யாண மாப்பிள்ளையையும் பொண்ணையும் இரண்டாம் கல்யாணம் பாக்க உக்கார வெச்சிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு மாப்பிளையாச் சேந்து இன்னொரு கல்யாணம் பாக்குறது யோகமாம். அதே மாதிரி கல்யாணத்தப்போ இன்னொரு ஜோடி மாலையும் கழுத்துமா எதிர்க்க உக்காந்திருந்தா அதுவும் யோகமாம். ஆக.. ரெண்டு ஜோடிகளுக்கும் யோகம் ராஜ யோகம். வாழ்க வளமுடன்.

சில கல்யாணங்கள்ள பொண்ணும் மாப்பிள்ளையும் அவ்வளவு டென்ஷனா பாத்திருக்கேன். ஆனா நம்ம பொண்ணு மாப்பிள்ளை நல்லா கலகலப்பா முகமலர்ச்சியா இருந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. முருகனருள் முன்னிற்கட்டும்.

ஒரு புதுப்பழக்கம் ஒன்னு பாத்தேன். பிறந்தநாள் கொண்டாட்டங்கள்ள அடிக்கிற snow spray, டப்புன்னு வெடிச்சு ஜிலுஜிலு பேப்பர் துண்டுகளா வந்து விழுமே.. அதெல்லாம் தாலி கட்டுறதுக்காக கெட்டி மேளம் கொட்டுறப்போ அடிச்சாங்க. முன்னாடியிருந்தவங்க தலையெல்லாம் ஸ்பிரே சுனோ. கோயில் தரையெல்லாம் ஜிலுஜிலுத்தாள் குப்பை. கூட்டீருவாங்கன்னு வெச்சுக்கோங்களேன். ஆனாலும் இதெல்லாம் ஏன்னு தோணுச்சு. பதிவைப் படிக்கிற பொண்ணும் மாப்பிள்ளையும் இதுக்காக என் மேல கோவிச்சுக்க மாட்டாங்கன்னு நம்புறேன். 🙂

Post1-Pic2அப்புறம் இன்னொன்னு சொல்லியே ஆகனும். டிவில சமீபத்துல ஒரு மகாபாரதம் வந்ததே.. அதுல கிருஷ்ணரா நடிச்சவரோட படத்தைக் கைலாசநாதர் கோயில்ல வெச்சிருந்தாங்க. யார் செஞ்ச வேலைன்னு தெரியல. ஒரு பத்து வருஷத்துல அந்தப் படத்துக்கும் சந்தனம் குங்குமம் வெச்சு மாலை போட்டு.. எல்லாரும் கும்பிடத் தொடங்கீருவாங்க. ம்ம்ம்.. இந்த நாடும்.. நாட்டு மக்களும்….

கல்யாணம் முடிஞ்சதும் மண்டபத்துக்குப் போய் புதுமணத் தம்பதியோட போட்டோல்லாம் எடுத்திக்கிட்டு கல்யாணச் சாப்பாடு சாப்டோம். ஏற்கனவே காலைல சீக்கிரமா எந்திருச்சாச்சு. கல்யாண விருந்து வேற. அப்படியே கண்ணக் கட்டுச்சு. வந்த வேன்ல ஏறி கோயில்பட்டி லாட்ஜ்ல போய் விழுந்தோம். கொஞ்சம் தூங்கி எந்திரிச்சாதானே அடுத்த கோயிலுக்குப் போகத் தெம்பா இருக்கும். என்ன கோயில்னா கேக்குறீங்க? அதுக்கு அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கனும். சின்ன குறிப்பு தர்ரேன். சாயங்காலம் போன கோயிலுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இருக்கு.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், கோவில்பட்டி, பயணம் and tagged , , , . Bookmark the permalink.

17 Responses to பசுமையான திணை பசுவந்தனை

 1. amas32 says:

  Very nice Gira 🙂 Reliving the moments again 🙂

  amas32

 2. Muthu Raj says:

  சீல்த்துருக்குத் தான? போங்க போங்க, காத்திருக்கோம் 🙂

  • GiRa ஜிரா says:

   அதே சீல்த்தூர்தான். அடுத்த போஸ்ட்டும் போட்டாச்சு. 🙂

 3. பயணமே கொண்டாட்டம்தான். அதுலே கல்யாணத்துக்குன்னு கிளம்பிப்போனா ஜாலியோ ஜாலிதான்!

  தமிழக அரசுக்கு…… ஸ்ரீ வில்லிபுத்தூர்!

  • GiRa ஜிரா says:

   ஆமா டீச்சர். கொண்டாட்டத்துக்குக் குறைவேது.

   ஸ்ரீவில்லிபுத்தூரேதான் 🙂

 4. nparamasivam1951 says:

  அருமையான பயண பதிவு. ஆரம்பமே அருமை. வரும் பதிவுகளையும் ஆவலுடன் எதிர் நோக்க வைக்கும் உங்கள் எழுத்து.

 5. Pugazhenthi says:

  மிக அருமையான எழுத்தாக்கம் ஜி ரா. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. திருவிலலிபுத்துரை எதிர்பார்த்து.நன்றி

 6. RPJ says:

  ஊர்ப் பெயர்களும், கூட்டத்துக்கு கொடுத்த உவமையும் (குலுக்கி தொறந்த கோலி சோடா) விஜய் டிவி மஹாபாரத கிருஷ்ணரும் அருமையோ அருமை 🙂

 7. tcsprasan says:

  felt like i was reading that vintage GiRa

  • GiRa ஜிரா says:

   i am happy you said that. didn’t write any travelogues for long time. happy to write this. 🙂

 8. உபயம்னு பெயரும் ஃபோன் நம்பரும் கோயில்ல எழுதுறதோட அடுத்தக்கட்ட பரிணாமவளர்ச்சிதான் ஃபோட்டோ மாட்டுறது நினைக்கிறேன்(கிருஷ்ணர்ஃபோட்டோ) 🙂

  தனிப்பயணம் தனியா ஐஸ்கிரீம் சாப்பிடும் சுகம்னா… கூட்டமாப் போறது பந்தில சாப்புடுற மாதிரி ஒரு கொண்டாட்டம். – நல்ல உவமை 😉

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s