Harry Potter

Harry Potter must not go to Hogwarts.

மேற்கண்ட வசனம் டாபி என்னும் விசித்திர மந்திரக்குள்ளனால் ஹாரி பாட்டரிடம் சொல்வது. ஹாரி பாட்டருக்குப் பிடித்த இடமே அவனது பள்ளிக்கூடம் தான். அங்கு போகக்கூடாது என்று சொன்னால் அவனைப் போல வருத்தப்படுகின்றவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த மனநிலையில்தான் ஹாரிபாட்டர் வாசகர்கள் கடந்த சில வருடங்களாக இருந்தார்கள். எப்படியாவது ஹாக்வார்ட்ஸ் என்னும் மந்திரப் பள்ளிக்கூடத்துக்குள் மறுபடியும் போக மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஏழு தொடர் புத்தகங்களும் எழுதி முடிக்கப்பட்டு வில்லனும் அழிக்கப்பட்டுவிட்ட பிறகு.. ஏழு பாகங்களும் திரைப்படமாக வந்து முடிந்த பிறகு… என்ன செய்வதென்று தெரியாமல் ஹாரி பாட்டரின் மந்திர உலகத்தை மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நானும் தான்.

13900256_862421523891229_4489151659748467061_nஹாரி பாட்டர் என்றால்.. பெங்களூர் பிரீமியம் புத்தகக் கடையிலும் ஆம்ஸ்டர்டாம் ஆம்ஸ்டல்வீன் புத்தகக் கடையிலும் விடியற்காலையில் காத்திருந்து புத்தகத்தைச் சுடச்சுட வாங்கிப் படித்ததுதான் நினைவுக்கு வரும். அப்பப்பா… விடாமல் தொடர்ந்து ஒரே நாளில் புத்தகம் படித்த நாட்கள் அவை. நினைத்தாலே இனிக்கும்.

நினைத்து நினைத்து இனித்துக் கொண்டிருந்த நிகழ்வு மறுபடியும் நிகழ்ந்தே விட்டது. Harry Potter and the Cursed Child என்ற புத்தகம் நாடக வடிவில் வந்திருப்பதுதான் அந்த நிகழ்வு. மூலக்கதை எங்கு முடிந்ததோ அங்கிருந்தே தொடங்குகிறது இந்தக் கதை. புத்தகத்தை அமேசானில் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்து வாங்கிப் படிப்பதும் ஒரு சுகம் தான்.

முழுமையான நாவலாக எழுதும் அளவுக்குத் தகுதியான கதையை ஒரு நாடக வடிவில் கொடுத்திருக்கிறார்கள். அதையும் சும்மா சொல்லக்கூடாது. அட்டகாசமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹாரி பாட்டர் வாசகர்களுக்கு என்ன பிடிக்கும் வேண்டும் என்று தெரிந்து அதை மிகச்சரியாய்ப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

இந்த நாடகத்தில் ஹாரி பாட்டர் சிறுவன் இல்லை. நாற்பதுகளில் இருப்பவன். அவனுடைய மகனை மையமாக வைத்தே இந்தக் கதை இயங்குகிறது. ஏழு கதைகளையும் படித்த போது ஏற்பட்ட அதே மனவெழுச்சி மனமகிழ்ச்சி இந்தக் கதையிலும் ஏற்பட்டதற்குக் காரணம் இன்னும் அணையாமல் இருக்கும் ஹாரி பாட்டர் மேஜிக்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உண்டாகும் பிரச்சனைகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, அதில் மந்திர தந்திரங்கள், கெட்டவர்களின் சூழ்ச்சிகள், பிரச்சனைகள் என்று கதை விறுவிறுப்பாகப் போகிறது.

ஹாரி பாட்டர் மிகப் பிரபலம். அந்தப் பிரபலத்தின் மகனாக இருப்பதே ஆல்பசுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. அந்தச் சுமை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் விரிசலை உண்டாக்குகிறது. இதற்கு நடுவில் பள்ளிக்கூடத்தில் ஹாரி பாட்டரோடு எப்போதும் பிரச்சனை செய்து கொண்டிருந்த மால்ஃபாய் என்பவனுடைய மகன் ஸ்கார்பியசுடன் ஆல்பசுக்கு நல்ல நட்பு உண்டாகிறது. இதை ஹாரி விரும்பவில்லை. மால்ஃபாயின் மகன் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று முன்முடிவோடு இருக்கிறான் ஹாரி. இவையெல்லாம் உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு நடுவில் மால்ஃபாயின் மகன் ஸ்கார்பியஸ் பிறப்பு குறித்து உலவும் ஒரு பயங்கரப் புரளி.

ஏழாம் புத்தகம் வரையில் இறந்து போன சில பாத்திரங்களை மீண்டும் உயிரோடு கொண்டு வந்து சிறிது நேரம் நம்மை மகழ்ச்சிக் கடலில் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறார் ஆசிரியர் ஜே.ஜே.ரௌலிங். குறிப்பாக புரபசர் ஸ்னேப்பை மீண்டும் சந்திக்கும் போது மனம் அவ்வளவு ஆனந்தப்படுவதைத் தடுக்கவே முடியவில்லை. தன்னுடைய பெயரை மகனுக்கு ஹாரிபாட்டர் வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதப்படும் போது பாசமலர் பார்த்த அந்தக் காலத்துப் பெண்கள் போல கண்ணில் தண்ணீர் கொட்டுகிறது.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை… இந்த மாதிரி புத்தகங்களை வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். Fantastic Beasts எல்லாம் ஹாரி பாட்டர் இரசிகர்களின் டயனோசார் பசிக்குப் போடும் பொரியுருண்டை.

இந்தக் கதை முதலில் மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது. அந்த நாடகத்தின் டிவிடியை வெளியிட்டால் இரசிகர்கள் பேராதரவளித்துக் கொண்டாடிக் கூத்தாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், புத்தகங்கள், Harry Potter and tagged , , . Bookmark the permalink.

2 Responses to Harry Potter

  1. amas32 says:

    நாடக வடிவில் இந்தப் புதுக் கதை வந்திருப்பது புதுமை. நன்றாக இருக்கிறது என்பதே பரவலான கருத்து. படிக்க வேண்டும் :-}

    amas32

  2. SARAVANA KUMAR says:

    Super intro about the book bro , eagerly waiting

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s