Monthly Archives: November 2016

கள் குடிக்கலாம் வாங்க – 5

இதுவரை நாம் படித்த பாடங்கள் பாடம் 1 – பன்மை விகுதி பற்றி தொல்காப்பிய இலக்கணம் பாடம் 2 – பழைய இலக்கியங்களில் பன்மைப் பயன்பாடு பாடம் 3 – தமிழ் இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம் பாடம் 4 – கள் விகுதி புணர்ச்சிக்கான இலக்கணம் பொதுவாகவே கள் விகுதியைப் பயன்படுத்தும் போது க்-ஒற்று … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம் | Tagged , | 3 Comments

கள் குடிக்கலாம் வாங்க – 4

போன பதிவு வரைக்கும் படிச்ச பாடத்த ஒருவாட்டி திரும்பப் பாத்துக்கலாம். கள் விகுதி, 1. தொல்காப்பியத்தின் படி அஃறிணைக்கு மட்டும் பன்மையைக் குறிக்கும். உயர்திணைக்கு வராது. 2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்படும் முறையை வைத்து அது பன்மையைக் குறிக்கும். 3. காலப் போக்கில் கள் விகுதி உயர்திணைக்கும் ஆகி வந்தது. எ.கா பெண்கள், அடிகள், … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம் | Tagged , | 4 Comments

கள் குடிக்கலாம் வாங்க – 3

இதன் முந்தைய பதிவைப் படிக்க… தொல்காப்பிய இலக்கணப்படி கள் விகுதி அஃறிணைக்கும் மட்டுமே உரியாதாக இருந்தாலும், பொதுமக்களும் புலவர்களும் காலப் போக்கில் கள் விகுதியை உயர்திணைக்கும் பயன்படுத்தத் தொடங்கீட்டாங்க. நூல்கள்ள அதுக்கான ஆதாரங்கள் நிறைய இருந்தாலும் தமிழ் இலக்கணம் அதைப் பதிவு செய்யாம இருந்தது. தொல்காப்பியம் கிமு எட்டாம் (அல்லது) மூன்றாம் நூற்றாண்டுன்னு பாத்தோம். தொல்காப்பியர் … Continue reading

Posted in இந்திரகாளியம், இலக்கணம், தொல்காப்பியம், நேமிநாதம், பன்னிரு பாட்டியல், வீரசோழியம் | Tagged , , , , , , | 7 Comments

கள் குடிக்கலாம் வாங்க – 2

போன பதிவுல கள் விகுதி பத்திய தொல்காப்பிய இலக்கணத்தை முதல் பாடமாப் பாத்தோம். 1. கள் விகுதி அஃறிணைப் பெயர்களுக்கு மட்டுமே பன்மையைக் குறிக்கக் கூடியது. 2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொருத்து அது பன்மையைக் குறிக்கலாம். நல்லது. இந்த இலக்கணத்தை எப்படியெல்லாம் இலக்கியங்கள்ள பயன்படுத்தியிருக்காங்கன்னு எடுத்துக்காட்டுகள் பாக்கலாமா… மொதல்ல குறுந்தொகை. நள்ளென்றன்றே … Continue reading

Posted in இலக்கணம், குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு | Tagged , , , , , , , , | 6 Comments

கள் குடிக்கலாம் வாங்க – 1

பேச்சுவாக்குல ஒரு நண்பன் “ஆண்டாள் செஞ்ச தப்பை என்னால ஏத்துக்க முடியலன்னு”ன்னு ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்னான். அப்படி என்னதான் தப்பு செஞ்சுட்டாங்கன்னு கேட்டேன். “ஆமாண்டா.. ஆண்டாள் மட்டுமில்ல. கம்பரும் அப்படித்தான். கண்ணதாசனும் அப்படித்தான். சேச்சே”ன்னு குமுறி அழுதான். ரெண்டு எளனி வாங்கிக் கொடுத்து சமாதானம் ஆனப்புறமா அவங்க செஞ்ச தப்பெல்லாம் எடுத்துச் சொன்னான். “வாரணம் ஆயிரம் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம் | Tagged , , , | 10 Comments

பச்சைக் குழந்தை வாசம்

உலகத்திலேயே சுவையான வாசம் எது? சுகமான வாசமுண்டு. சுவையான வாசமுண்டா? உண்டு. அதுதான் பச்சைக் குழந்தை வாசம். பிள்ளை பெற்ற தாயைக் கேட்டுப் பாருங்கள். அவள் சொல்வாள். பிள்ளையைத் தூக்கிச் சுமந்த தந்தையைக் கேளுங்கள் அவன் சொல்வான். பாலருந்தும் பருவத்து பசும் குழந்தையை தூக்கம் கலையாமல் மெத்தெனத் தொட்டுப் பொத்திப் பொறுப்பாய்த் தூக்கும் போது நாசியில் … Continue reading

Posted in ஆழ்வார், இறை, திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | Tagged , , , , | 8 Comments

பேலியோ என்பது வேலியோ கேலியோ

பேலியோ உணவுமுறை பற்றிய நண்பர் பலராமனின் பதிவில் என்னுடைய பின்னூட்டம். பேலியோ என்றழைக்கப்படும் உணவுமுறை பற்றிய என்னுடைய கருத்துகளை விரிவாகச் சொல்வதால் இங்கு பதிவாகவும் வைத்துவிட்டேன். பேலியோ என்று இன்று அழைக்கப்படும் உணவுப்பழக்கத்தின் மீது எனக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. ஆனால் எப்படி பொது உணவின் மேல் ஐயங்களும் கருத்துகளும் உண்டோ, அதே போல … Continue reading

Posted in உணவு, சமையல் | Tagged , | 10 Comments