கொறிக்க கொஞ்சம் கொரியா

உள்ளூர்ல உழுந்தவடை திங்காதவன் வெளிநாட்டுல வெண்பொங்கல் வாங்கித் தின்ன கதைதான் இப்போ நான் சொல்லப் போறது.

டிவிட்டர் மக்கள் அப்பப்ப கொரியப் படம் கொரியப் படம்னு மயிர்க்கூச்செரிஞ்சு பேசுனப்போ, அதுல என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ஒரு யோசனை வந்ததென்னவோ உண்மைதான். ஆனா நேரம்னு ஒன்னு வரனும் பாருங்க. டிவிட்டர்ல இருந்த கொரிய சிலாகிப்புகளுக்கு நடுவுல புரிஞ்ச ஒரே ஒரு பேரு கிம் கிடுக். அவர் ரொம்பப் பெரிய இயக்குநராம். அப்போன்னு பாத்து Moebiusனு ஒரு படத்தைப் பத்தி ரொம்பச் சிலாகிச்சுப் பேசிட்டு இருந்தாங்க.

korea-5சரி. ஒரு பெரிய இயக்குநர் படமாவே பாக்கலாம்னு நினைச்சு படம் பாக்கத் தொடங்கினேன். நானெல்லாம் சினிமால யாராவது அழுதாலே குமுறிக் குமுறி அழுற ஆளு. ரொம்பவே பிஞ்சு மனசு பாத்துக்கோங்க. Moebius படத்துல நடந்த சம்பவங்களப் பாத்து மூளை மியூட் ஆகி பாடி பஞ்சர் ஆகி ஆன்மா அலறிருச்சு. நல்லசிவத்துக்கு ஏன் நாமக்கட்டி? பாட்ரிக் சூசைக்கு ஏன் பஞ்சாங்கம்னு மனசைத் தேத்திக்கிட்டு காசேதான் கடவுளடா படத்தை ரெண்டு வாட்டி பாத்து ரத்த சுத்தி பண்ணிக்கிட்டேன்.

அப்போதான் டிவிட்டர்ல வேதாள அர்ஜுன் Miracle in Cell No 7ங்குற படத்தைப் பத்திச் சொன்னான். சும்மா சொல்லக் கூடாது. படம் பிரமாதம். படம் பாத்து ரெண்டொரு நாளைக்கு மனசுக்குள்ள என்னவோ ஒரு நெகிழ்ச்சி. நல்ல படம்.

அதுக்கப்புறம் பெருசா ஒன்னும் பாக்கல. சம்சாரா படம் பத்திப் பேசிக்கிட்டிருக்கும் போது கர்ணாசக்தி Spring Summer Fall Winter படம் பாருங்கன்னு சொன்னாரு. படம் யாரோட படம்னு பாக்காம நானும் படத்தப் பாத்துட்டேன். படத்த எடுத்தவர் கிம் கிடுக். ஆனா பாருங்க.. படம் வேறொரு தளத்துல இருக்கு. அது படம் கிடையாது. நம்ம மனசை நாமளே கொஞ்சமாவது சரி செஞ்சிக்கச் சொல்லித்தரும் பாடம். படம் எனக்குப் பிடிச்சிருந்தது. இந்த மாதிரிப் படங்களும் எனக்குப் பிடிக்கும்னு இந்தத் தருணத்துல சொல்லிக்கிறேன்.

அதுக்கப்புறமும் நான் ஒன்னும் கொரியப் படங்களாப் பாத்துத் தள்ளீறல. ஆனாலும் டிவிட்டர்ல அப்பப்போ கொரியன் படம் கொரியன் நாடகங்கள்னு கண்ல படும். எதோவொரு நாள்ல கொரிய நாடகங்களைப் பார்னு வானத்துல இருந்து தேவர்கள் அசரீரி சொல்லி பூமாரி பொழிஞ்சாங்க. Best Korean dramasன்னு கூகிளாண்டவர் கிட்ட கேட்டா வரிசையா பட்டியல் எடுத்துக் கொடுத்தாரு.

korea-2அதுல ஒரு பேரு The 1st Shop of Coffee Prince. 2007ல வந்த நாடகம். Coffee Shopனு இருந்ததும் Friends மாதிரி இருக்கும்னு நெனச்சு பாக்கத் தொடங்கினேன். ஆனா பாருங்க.. பாக்கப் பாக்க கதைக்குள்ளயே போயிட்டேன். அதுக்கு என்ன காரணங்கள்னா…

கொரியாவுலயும் குடும்ப அமைப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கு. அங்கயும் நம்மூர் மாதிரியான பழக்க வழக்கங்கள். வேற எதோ நாட்டோட கதையைப் பாக்குறோம்னே தோணலை. அப்பாவை அப்பான்னு கூப்புடுறாங்க. அம்மா அம்மாதான். துணைப் பாத்திரங்களோட படைப்பு அட்டகாசம். இன்னும் நெறைய விஷயங்கள் நல்லாருந்தது. எல்லாத்துக்கும் மேல Happy Ending. பாத்து முடிச்சதும் ஒரு நிம்மதி. ஒரு திருப்தி. என்ன அவங்க சாப்புடுற காட்சிகள் வரும் போதுதான் அவங்க சொல்றதெல்லாம் Chicken feet, pig feet, pig runt, octopusனு மொதல்ல கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு. அப்புறம் பழகிப் போச்சு.

அதுலயும் பாருங்க.. ரொம்ப வளவளன்னு எல்லாம் இழுக்குறதில்ல. 15-20 எபிசோடுகள்ள முடிஞ்சு போகுது. அப்பதான் கொரிய நாடகங்கள் பாக்குற ஆசை சூடு பிடிச்சது. அடுத்து பாத்தது Bigனு ஒரு நாடகம். காதலை நல்லாப் பிழிஞ்சு சாறெடுத்து காய்ச்சி வெல்லக்கட்டியாக்கி அதுல ஒரு நாடகம் செஞ்சா எப்படியிருக்கும்? மெதுவாத்தான் கதை போச்சு. ஆனாலும் தொடர்ந்து பாத்தேன். முடிவு எனக்குப் பிடிக்கல. இன்னும் நல்லா இருந்திருக்கலாம்னு தோணுச்சு. ஏன்னா அந்தக் கதாநாயகி பாத்திரம் அவ்வளவு அருமையான பொண்ணு. முடிவு பிடிக்காமப் போனாலும் நாடகத்துல வந்த பாட்டெல்லாம் பிடிச்சுப் போச்சு. அதுவும் ரிங்டோனா வெச்சுக்குற அளவுக்கு.

korea-1அடுத்து பாத்தது Secret Garden. என்னவோ ஏதோன்னு பாக்கத் தொடங்கி.. நாடகத்தோட 19வது எபிசோடுல கடைசிக் காட்சி பாத்து முடிச்சதும், அந்தக் காட்சி சொல்ற விஷயத்தால மறுபடியும் மொதல்ல இருந்து எல்லா எபிசோடுகளையும் ஒரு வாட்டி பாத்துட்டேன். நடுவுல அப்பப்போ கண்ல செம்பரம்பாக்கம் ஏரி தொறந்துருச்சுன்னு வெச்சுக்கோங்களேன். இந்த நாடகத்துலயும் பாட்டெல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இப்போ ரிங்டோனை நான் மாத்திருப்பேன்னு நீங்க ஊகிச்சா ஒங்களை நீங்களே பாராட்டிக்கோங்க.

அதுக்கப்புறம் Gu Family Book. ராஜா ராணி காலத்துக் கதை. கொஞ்சம் வரலாறு + நிறைய புனைவு. அடுத்து வந்தது பாருங்க Descendants of Sun. அடேங்கப்பா. சினிமா மாதிரி பிரம்மாண்டமா… இராணுவம் தீவிரவாதம் வெளிநாடு மருத்துவமனை அரசியல் காதல் மனிதாபிமானம்னு கலந்துகட்டி அடிச்சு நிமித்திருந்தாங்க. நீங்களும் யோசிக்காமப் பாக்கலாம்.

எந்தக் கதைக் களத்தை எடுத்துக்கிட்டாலும் அடிப்படையில மனித உணர்வுகளை வெச்சுத்தான் கதைய நகத்துறாங்க. அதுனாலதானோ என்னவோ கதைகள்ளயும் பாத்திரப்படைப்புகள்ளயும் அவ்வளவு நேர்மை + தெளிவு. அதே மாதிரி மக்களுக்கு அவ்வளவு பாசிட்டிவான விஷயங்களைச் சொல்றாங்க.

இதுக்கு நடுவுலதான் வெளி வந்துச்சு Train to Busan படம்.  அது Zombie கதை. எனக்கு Zombie படங்கள் பிடிக்காது. ஆனாலும் பாருங்க கண்ல செம்பரம்பாக்கம் ஏறி தொறந்திருச்சு. “அண்ணே நீங்க வானத்தைப் போல படம் பாக்க வேண்டிய ஆளு”ன்னு Busan படத்தப் பாத்துட்டு நம்ம தம்பி முத்தலிப் கிண்டல் பண்ணப்போ சந்தோஷப்பட்டேன். கிண்டல் பண்ணா ஏன் சந்தோஷப் பட்டேன்னு கேக்குறீங்களா? சாதாரண மனிதர்களோட சந்தோஷத்தை சந்தோஷமாப் பாக்குற அளவு எளிமையான மனசு போல எனக்குன்னு ஒரு சந்தோஷம் தான். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் ரசிக்கிற மனநிலைக்கு முருகக் கடவுளுக்குதான் நன்றி சொல்லனும்.

அடுத்து பாத்தது Witch Yoo Hee. மேஜிக்கெல்லாம் ஒன்னும் கெடையாது. இது கொஞ்சம் Restaurant, Cooking, Kitchenனு போற கதை. முழுசாப் பாத்துட்டேன்னாலும் நாயகன் நாயகி மேல அவ்வளவு பெரிய கரிசனம் வரலை. ஆனா கூட வர்ர துணைப்பாத்திரங்கள் மேல வந்தது. நாயகன் நாயகி ரெண்டு பேர் மேலயும் ஆத்திரம் தான் வந்தது. ஆனா இந்த நாடகத்துல பாட்டெல்லாம் பிடிச்சிருந்தது. ரிங்டோன் செஞ்சு வெச்சிருக்கேன். இன்னும் பயன்படுத்தல.

korea-3அடுத்து பாத்ததுதான் அட்டகாசமான நாடகம். Sungkyankwan Scandal. இதுவும் வரலாற்றுப் புனைவு. இந்த நாடகம் பாக்குறப்போ கொரியாவைப் பத்திக் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டேன். அங்கயும் noble born concept இருந்திருக்கு. அவங்க மட்டும் தான் படிக்க முடியும். அதிலும் ஆண்கள். பெண்கள் படிக்கவே கூடாது. Noble born மட்டும் தான் அமைச்சர் பதவிக்கு வரமுடியும். ஆனா பாருங்க.. நாடகத்துக்குள்ள அதெல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் எதிர்த்துதான் பாத்திரங்களை அமைக்கிறாங்க. இந்த நாடகத்துலயே எடுத்துக்கிட்டீங்கன்னா.. சாதாரண வீட்டுப் பெண் ஆண் வேடம் போட்டுக்கிட்டுப் போய் noble born ஆண்கள் தங்கியிருந்து பாடம் படிக்கிற ஒரு எடத்துல சேந்து படிச்சு அவளோட வாழ்க்கைய அடுத்து எங்க கொண்டு போறாங்குறதுதான் கதை. அதுக்குள்ளயும் காதல் பாசம் நேசம் நட்புன்னு எல்லாம் வெச்சு நாடகம் அருமையா இருந்துச்சு.

இதுக்கு நடுவுல சில படங்களும் பாத்தேன். Penny Pinchers, Punch, Veteran, Finding Mr.Destiny, Seducing Mr.Perfect, Joseon Magician. இதுல முதல் மூனும் அட்டகாசப் படங்கள். அடுத்த ரெண்டும் பிரம்மாதமான feel good movies. கடைசிப் படம் வரலாற்றுப் புனைவு. ஒருவாட்டி பாக்கலாம். The waiverனு ஒரு படம் எடுத்து வெச்சிருக்கேன். பாக்கனும். The Throneன்னு ஒரு படம் நல்லாருக்காம். அதையும் பாக்கனும். A werewolf boy படம் பத்திச் சொல்லாம விட்டுட்டேனே. இது வழக்கமான ஆங்கில ஓநாய் மனிதன் படம் கிடையாது. Feel good movie. Werewolfல என்னய்யா feel good? படம் பாத்தாத் தெரியும்.

korea-4நான் இதுவரைக்கும் பாத்ததுல ரொம்ப அறிவுப்பூர்வமான படங்கள் இல்லாமக் கூட இருக்கலாம். ஆனா “குடும்பத்தைச் செதைச்சிருவேன்” “அவள அடியோட ஒழிக்கனும்”னு பேசாத நல்ல நாடகங்கள் படங்கள்தான் பாத்திருக்கேன். இன்னும் பாப்பேன். திரைக்கதையும் வசனங்களும் நல்லா எழுதுறாங்க. ஆங்கில சப்டைட்டில் பாக்குறப்பவே இப்பிடியிருக்கே, மொழி தெரிஞ்சு பாத்தா எப்படியிருக்குமோன்னு நிறைய வாட்டி தோணியிருக்கு. அதோட கொரிய நடிகர்களோட நடிப்பு மிக அருமை. ஈகோ பாக்காம எந்தப் பாத்திரமானாலும் பண்றாங்க. Yoo Ah-in எடுத்துக்கிட்டீங்கன்னா.. Sungkyunkwan Scandal நாடகத்துல ரொம்ப அடிதடி ஹீரோயிசம் பண்ணீட்டு Punch படத்துல High school பையனா நடிச்சுட்டு, Veteran படத்துல வில்லனா நடிச்சிருக்காரு. ஒவ்வொரு நாடகத்துலயும் ஒவ்வொரு விதம். பொதுவாகவே எந்த நடிகரும் நடிகையும் தங்களோட வயசை விடக் கூடிய வயசுள்ள பாத்திரங்கள்ள நடிக்க யோசிக்கிறதே இல்ல.

korea-6Gong Yooன்னு ஒரு நடிகரை டிவில பேட்டி எடுக்குறாங்க. அதுவும் தெருவுல வெச்சு. பொண்ணுங்கள்ளாம் ஒரே கூட்டமா கத்துறாங்க. அதுல ஒரு ஏழாவது படிக்கிற பொண்ணக் கூப்பிட்டு டிவி நிருபர் “When did you fall in love with Gong Yoo”ன்னு விவஸ்தை இல்லாமக் கேட்டாரு. என்ன கருமம்டான்னு நான் நெனைக்கிறப்பவே Gong Yoo சட்டுன்னு உள்ள புகுந்து, “I am old enough to be her uncle”னு சொன்னப்போ அசந்துட்டேன். நடிப்போ நல்ல மனசோ… நம்ம ஊர்ல நடக்குமா?

கொரியப் படங்கள் நாடகங்கள்ள ஆண் பாத்திரங்களுக்கும் பெண் பாத்திரங்களுக்கும் சரிசமமான அளவுக்கு எடம் கொடுக்குறாங்க. Veteran மாதிரி பெண் பாத்திரங்களுக்கு வேலை இல்லாத நேரத்துல கூட சில காட்சிகள்ள பெண் பாத்திரங்களை score பண்ண விடுறாங்க. அதுல ஒரு காட்சி. நாயகன் ஒரு நேர்மையான துப்பறியும் போலிஸ். மனைவி ஒரு கம்பெனில வேலை செய்யும் பெண். வீட்டு லோன் அது இதுன்னு சாதாரண நடுத்தரக் குடும்பம். வில்லனோட ஆட்கள் அவ அலுவலகத்துல அவளைப் பாத்து லஞ்சம் கொடுக்கப் பாக்குறாங்க. அந்தக் காட்சி முடிஞ்சதும் அவ நேரா கோவத்தோட போலிஸ் ஸ்டேஷனுக்குப் போறா. அப்போ அவ பேசுற வசனமெல்லாம் சின்னச் சின்ன வசனங்கள்தான். ஆனா… அட்டகாச அபார ஆசம்முகள்.

இப்பிடியாக கொரியப் படம் நாடகம் பாக்குற பழக்கும் வந்து சேந்திருக்கு. எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குறதால தொடர்ந்து பாக்குறேன். அடுத்து Emergency Couple, W-Two Worlds நாடகங்கள் பாக்கலாம்னு இருக்கேன். பிடிச்ச வரைக்கும் பாக்க வேண்டியதுதான்.

இந்த நாடகங்கள்ள ஒன்னு புரியுது. தென்கொரியா நுகர்வுக் கலாச்சாரத்துல மூழ்கியிருந்தாலும், அதோட அடுத்த தலைமுறை ஓரளவு நல்ல வருங்காலமா இருக்குமோன்னு தோணுது. May be I am thinking too much. I just hope for the best.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கொரிய திரைப்படங்கள், திரைப்படம், Uncategorized and tagged , , . Bookmark the permalink.

6 Responses to கொறிக்க கொஞ்சம் கொரியா

 1. amas32 says:

  உலகப் படம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க! வாழ்த்துகள் :-} உங்கப் பதிவைப் படித்த பின் ஆங்கிலப் படங்கள்/நாடகங்கள் பார்ப்பதில் இருந்து கொரிய மொழிக்குத் தாவிடலாம்னு நினைக்கிறேன். நிற்க! சமீபத்தில் வந்த நிறைய தமிழ்ப்படங்கள் கொரிய மொழிப் படங்களின் தழுவல்கள் தான். அதைப் பற்றியும் நீங்கள் ஒரு பதிவு போடலாம்.

  amas32

  • GiRa ஜிரா says:

   உள்ளூர்லயே உருண்டுக்கிட்டிருக்க வேண்டாம்னுதான் உலகத்தைச் சுத்தத் தொடங்கியாச்சு. நீங்க சொன்ன தமிழ்-கொரிய தொடர்புகளைக் கண்டுபிடிக்கனும் 🙂

 2. Vaduvurkumar says:

  நிறைய தான் பார்த்திருக்கிறீர்கள். வரலாற்று புனைவில் Dong Yi கூட பார்க்கலாம்.

 3. nparamasivam1951 says:

  சரி சார். ஒரு கொரிய படம் இன்று இரவே பார்த்து விட வேண்டியது தான். பார்த்த பின் திரும்ப வந்து கருத்து இடுகிறேன்.

 4. நீங்களும் நம்ம ஊர் இயக்குநர்கள் மாதிரி
  இன்ஸ்பயராகி படம், சீரியல் எடுக்கனும் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s