தென்னிலங்கை மங்கை – 1

மு.கு

இந்தத் தொடர் பதிவில் கூறப்படும் தொல்லியல் வரலாற்றியல் மொழியியல் நாட்டாரியல் வெளிநாட்டியல் பௌத்தவியல் அறிவியல் நையாண்டியியல் அணுப்பிளவியல் மற்றும் பலவிதமான இயல்களில் ஐயப்பாடுகள் வருகின்ற சந்திரமோகர்கள், அவற்றை சர்வசந்தேகநிவாரணியாகிய வெற்றிமோகரிடம் கேட்டுத் தெரிந்து தெளிந்து கொள்ளவும்.

எனக்கு எது தெரியுமோ அதத்தான் நான் எழுதியிருக்கேன். என்னா எல்லாம் தெரிஞ்சு புரிஞ்ச பிறகுதான் எழுதனும்னா தன்னைத் தீவிர இலக்கியவாதிகளாகக் கருத்திக்கொள்ளும் ஒருத்தர் கூட எழுத முடியாது. எல்லாருக்கும் கற்றது கைநாட்டு அளவு கூடக் கிடையாது.

மு.கு.மு (அதாவது முன்குறிப்பு முடிந்தது)

நாம நெனச்சதும் அது நடந்துட்டா நல்லாத்தான் இருக்கும். ஆனா எதுவும் நடக்குறதுக்கு நேரம் காலம் வரவேண்டியிருக்கு. இலங்கைக்குப் போகனும் 2006ல ஒரு ஆசை. அப்போ அந்த ஆசையைச் சொன்னப்போ சரியான நாள் வர்ரப்போ கூட்டீட்டுப் போறதா நண்பர் கானா பிரபா சொன்னாரு. அந்தத் திட்டம் அச்சம் என்பது மடமையடா மாதிரி தள்ளிப் போய்க்கிட்டேயிருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிஞ்சி பதினோரம் ஆண்டு தொடங்கப் போறப்போ நடந்தது. அதுவும் அவசர அவசரமா. அவசரமாப் பொறப்பட்டதால இலங்கைல எங்க போகாட்டியும் எதப் பாக்காட்டியும் கதிர்காமம் போகனுங்குறது மட்டும் தான் மனசுல இருந்தது.

டிக்கெட் எடுத்து விசா எடுத்து முதல் ஒரு நாளுக்கு மட்டும் கொழும்புல ஹோட்டல் ரூம் எடுத்துக்கிட்டு முருகனையும் கானா பிரபாவையும் நம்பி பொட்டியக் கட்டத் தொடங்குனேன். எப்பவுமே கடைசி நேரத்துலதான எடுத்து வைக்கிறது வழக்கம். அப்பன்னு பாத்து ஓபிஎஸ் மெரினா பீச்ல தியானத்துல உக்காந்தாரு. அரசியல் திருப்பங்கள் எல்லாம் ஊரை விட்டுப் பொறப்படும் போது தொடங்குதேன்னு ஒரு வருத்தம். ஒரு பெரிய பொழுது போக்கை இழக்கப்போறது புரிஞ்சது. இழந்துட்டேங்குறது திரும்ப வந்தபிறகு புரிஞ்சது.

இப்படிக் கெளம்புன பயணம் நல்லபடியா நடந்ததுக்கு நண்பர்கள் செஞ்ச உதவிதான் காரணம். ஒவ்வொரு நண்பரைப் பத்தியும் பயணத்தோட அந்தந்த எடத்துல பாக்கலாம். எல்லாருக்கும் மொத்தமா மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

16832079_987717361361644_6517880426463124997_nஇலங்கைக்குப் போகனும்னு சொன்னதுமே எல்லாருக்குமே ஒரு பயம். எனக்கும் கொஞ்சம் யோசனையாத்தான் இருந்துச்சு. ஏன்னா.. தெரிஞ்சவங்க யாரும் இப்போதைக்கு அங்க போகல. ஒரு நண்பன் மட்டும் சமீபத்துல நண்பர்களோட வழக்கமான சுற்றால எடங்களுக்குப் போயிட்டு வந்தான். மத்தபடி பொதுவா நிலவரம் என்னனு யாருக்கும் தெரியாது. அதுனால வீட்டுலயும் நண்பர்கள் வட்டத்துலயும் ஒரு சின்ன துணுக்கம் இருந்துச்சு. என்ன ஆனாலும் சரி கதிர்காம முருகனைப் பாத்தே தீரனும்னு முடிவு பண்ணி பொட்டியக் கட்டியாச்சு.

போறப்போ ஏர் இந்தியா விமானம். ஒரு மணி நேரம்தான் பயணம்னாலும் டிபனெல்லாம் குடுத்தாங்க மக்களே.

விடியக்காலை ஆறு மணிக்கு கொழும்புல எறக்கம்.

நண்பன் ரெண்டு மாசம் முன்னாடி இலங்கை போனப்போ பயன்படுத்துன சிம் கார்ட் வாங்கி அதுல இந்தியாவுல இருந்தே ஆன்லைன்ல ரீசார்ஜ் பண்ணி வெச்சுக்கிட்டேன். இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை. கொழும்பு ஏர்ப்போர்ட்லயே Dialog அல்லது Mobitel சிம் வாங்கிக்கலாம். Tourist Packages எல்லாம் இருக்குது.

ஏழு மணிக்கு வெளிய வந்துட்டேன். ஏர்ப்போர்ட்லயும் டாக்சி கிடைக்கும்.  லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வெளிய வர்ரப்போ ஒரு பெரிய அறைல ஏடிஎம்கள், ஏர்ப்போர்ட் டாக்சிகள், சிம் கார்டு வாங்க மொபைல் கடைகள் இருக்கு. International Debit Card இருந்தா இலங்கைக்குப் போய் பணம் எடுத்துக்கோங்க. கடைகள்ள அந்தக் கார்டையே பயன்படுத்துங்க. கைல டாலர் யூரோன்னு கொண்டு போகனும்னு அவசியம் இல்லை.

நானும் கைல கொஞ்சம் பணம் எடுத்துக்கிட்டு அங்கயே Uber வழியா டாக்சி வரவழைச்சேன். கொழும்புல தங்கப் போற எடத்துக்கு ரெண்டாயிரத்திலிருந்து மூவாயிரத்துச் சொச்சம் இலங்கைப் பணம் ஆகும். வெள்ளவத்தைல ரூம் எடுத்திருந்தீங்கன்னா கிட்டத்தட்ட நாப்பது கிலோமீட்டர் தூரம். Highway வழியாகப் போகனும்னு மொதல்லயே சொல்லிருங்க. அதுக்கு 300ரூபா தனியாக் கொடுக்கனும். அதுல போனாலுமே ரெண்டு மணி நேரம் ஆயிரும். வேற வழில போன கூட அரைமணி நேரமோ முக்காமணி நேரமோ… ஒங்க நல்ல நேரத்தைப் பொறுத்தது அது.

16807819_987717004695013_685702916338218393_nடாக்சி ஓட்டீட்டு வந்தவர் பேரு சிசிரா(Sisira). அம்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும். ஓரளவு தெளிவான ஆங்கிலம். மொகத்தப் பாத்ததும் இந்தியாவான்னு கேட்டுட்டாரு. இதுக்கு முன்னாடி இலங்கைக்கு வந்திருக்கீங்களா என்ன ஏதுன்னு கேட்டுட்டே வந்தாரு. அந்த இளம் வெயில்ல வெளிய பாக்க அவ்வளவு அழகா இருந்தது. என்னடா இதையெல்லாம் ரசிக்கவிடாம கேள்வியா கேக்குறாரேன்னு தோணுச்சு. நானும் நடுநடுவுல “Srilanka is very beautiful”னு எடுத்துவிட்டேன். சொன்னது உண்மைதான்னு வெச்சுக்கோங்களேன்.

கார்ல வர்ரப்போ கானா பிரபா மொபைல்ல கூப்டாரு. அவர் கிட்ட எப்பவும் தமிழ்ல பேசியே பழக்கம். ஆனா இப்போ காருக்குள்ள இருந்து தமிழ்ல பேசுறதா வேண்டாமான்னு ஒரு தடுமாற்றம். தமிழ் ஆங்கிலம் ரெண்டுலயும் பேசினேன். இப்போ யோசிச்சாச் சிரிப்பா இருக்கு. ஆனா இலங்கைல இறங்குன கொஞ்ச நேரத்துல ஒரு தயக்கம் இருந்தது உண்மைதான்.

நான் தமிழ்ல பேசுனத சிசிரா புரிஞ்சிக்கிட்டார்னு நெனைக்கிறேன். இலங்கைல எனக்கு உறவுக்காரங்க இருக்காங்களான்னு கேட்டாரு. பூங்குன்றனார் சொன்ன மாதிரி அங்க இருக்கும் தமிழர்கள் மட்டுமில்லாம எல்லாருமே உறவுதான்னாலும் நான் சிசிரா கிட்ட இல்லைன்னு சொன்னேன்.

கிட்டத்தட்ட 22கிமீ வந்தப்புறமா highway ஊருக்குள்ள சேரும் எடம் வர்ரப்போ ஒரே நெரிசல். கொழும்புல peak hourன்னு சொல்றது காலைல ஏழு மணிக்கே தொடங்குது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போற நேரமும் அதுதான். அந்த நெரிசல்ல சிசிராவும் வண்டிய வெச்சு வித்தை காமிச்சு ஓட்டிக்கிட்டிருக்கும் போது ஒரு போலிஸ்காரர் குறுக்க புகுந்து வண்டிய ஒதுக்குனாரு. ஆகா.. தொடக்கமே தொகைவகையில்லாம இருக்கேன்னு திக்குன்னு ஆயிருச்சு எனக்கு. போலீஸ்காரரும் சிசிராவும் பேசிக்கிட்டது ஒன்னும் புரியல. போலீஸ்காரர் சொன்னதுல “சம்பூர்ண”ங்குற ஒரேயொரு சொல் மட்டும் எனக்குப் புரிஞ்சது. சம்பூர்ண இராமாயணம் டிவிடி கேக்குறாரோன்னு கேணத்தனமா அந்தச் சூழ்நிலைல நெனச்சதை ஒங்ககிட்ட மறைக்க விரும்பல.

சிசிரா லைசென்ஸ் ஆர்சிபுக்குன்னு எல்லாத்தையும் எடுத்துட்டு எங்கயோ போனாரு. ஆனது ஆச்சு அஞ்சு நிமிஷம்னு நானும் கார்ல உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல சிசிரா வந்து வண்டில எடுத்தாரு. உள்ள போலீசை கவனிச்சிட்டு வந்திருப்பார்னு நெனைக்கிறேன். வந்தவரு சர்ருசர்ருன்னு முன்கதவுக் கண்ணாடி ரெண்டுலயும் இருந்த கருப்புத்தாளைக் கிழிச்சாரு. பிப்ரவரி ஒன்னாம் தேதியில இருந்து கார்ல முன்கதவுக் கண்ணாடில கருப்புத்தாள் ஒட்டக்கூடாதாம். ஓட்டுறது யார்னு தெரியனுமாம். ஆனா பின்னாடி கதவுல இருந்தாத் தப்பில்லையாம்.

கொழும்புல இருக்கும் முக்கியமான எடங்களையெல்லாம் போற வழில சிசிரா சொல்லிக்கிட்டே வந்தாரு. ஜனாதிபதியோட வீடு, பிரதமரோட வீடுன்னு ஒவ்வொன்னாச் காட்டிட்டு வந்தாரு. நானும் வெளிய வேடிக்கை பாத்துக்கிட்டே வந்தேன். ஒரு வழியா வெள்ளவத்தைல தங்குற ஹோட்டலுக்கு வந்தாச்சு. டோலோட சேத்து இலங்கைப் பணத்துல 2400 ரூபாய். இந்தியப் பணத்துல கிட்டத்தட்ட 1150 ரூபா.

16864830_987717211361659_8666048334004291687_nகுளிச்சு முடிச்சு தயாரா இருக்குறப்போ கானா பிரபா வந்தாரு. ரெண்டு பேரும் 11.50க்கு யாழ்ப்பாணம் இரயிலைப் பிடிக்கனுமே. ஸ்டேஷன் போக கார் புக் பண்ணிட்டு வெளில நிக்கிறப்போ, ஒருத்தர் ஒரு மாதிரி இரகசியமா வந்து சிங்களத்துல என்னவோ கேட்டாரு. நாங்கூட யாசகம் கேக்குறாரோன்னு நெனச்சேன். ஆனா அந்த மாதிரி யாராவது வந்தா ஒதுங்கிருங்க. போதைப் பொருள் பழக்கம் அங்கல்லாம் நிறைய இருப்பதால இந்த மாதிரி யாராவது வந்து பேச்சுக் குடுப்பாங்கன்னு சொன்னாங்க. உண்மையோ பொய்யோ… போறவங்க எதுக்கும் தேவையில்லாம பேசாம ஒதுங்கிக்கிறது நல்லது. அதுவும் ஒத்தையாளா ரெண்டு பேராப் போனா கவனம் மக்கா கவனம்.

கொழும்பு நெரிசலைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன். எங்கயும் போகனும்னா நேரத்தைச் சரியா திட்டமிட்டுப் பொறப்படுறது நல்லது. இல்லைன்னா அவ்வளவுதான். கானா பிரபா வரச்சொல்லியிருந்த டாக்சி நெரிசல்ல மாட்டி வர்ரதுக்கு நேரமாயிருச்சு. பிறகென்ன.. இரயில்வே ஸ்டேஷனுக்கு அடிச்சுப் பிடிச்சுதான் வந்து சேந்தோம். இலங்கைக்குப் போறவங்க இரயில் பயணம் போகனும்னா முடிஞ்ச வரைக்கும் முன்னாடியே முன்பதிவு செஞ்சிருங்க. இணையம் வழியாவும் பண்ணலாம்னு சொல்றாங்க. அப்படியில்லைன்னா அங்க யார் மூலமாவது வாங்கிருங்க. இரயில்ல போய் பாக்க வேண்டிய இடங்கள் நிறையவே இலங்கைல இருக்கு.

அடிச்சுப் பிடிச்சு வந்ததால எங்களால சாப்பிட எதுவும் வாங்க முடியல. குடிக்கத் தண்ணி கூட வாங்கல. ஹோட்டல்ல இருந்த ரெண்டு குட்டி பாட்டில்களை எதுவுக்கும் இருக்கட்டும்னு பைல எடுத்துப் போட்டுட்டு வந்தது நல்லதாப் போச்சு. நல்லா வெளிய வேடிக்கை பாத்துக்கிட்டே வந்தேன். ரெண்டு பேருக்கும் பசி. Pantry வரைக்கும் போய் வாங்கிட்டு வர்ரேன்னு கானாபிரபா போனாரு. வழியில un-reservation compartmentல பயங்கர நெரிசலா இருந்ததால திரும்பி வந்துட்டாரு. நானும் கப்பல்ல சிக்குன காக்கா மாதிரி குறுக்க நெடுக்க போனாலும் கானா பிரபா கண்ல படுற மாதிரி இருக்காரான்னு பாத்துக்கிட்டேன்.

16864443_987716991361681_4610393209433117979_nஒரு பெரிய கூடைல சின்னச் சின்ன ஆமைவடையாப் போட்டு அதுமேல பொறிச்ச மெளகா வத்தல் நறுக்கிப் போட்ட வெங்காயமெல்லாம் போட்டு விக்கிறாங்க. ஒரு பொட்டலம் நூறு ரூபாய். கிட்டத்தட்ட பத்து வடைகளை பொட்டலத்துல போட்டு அது மேல வெங்காயம் பொறிச்ச வத்தலப் போட்டுக் கொடுக்குறாங்க. ஆளுக்கொரு பொட்டலாம் வாங்குனோம். அதுதான் எங்களுக்கு மதியச் சாப்பாடு. கொஞ்ச நேரம் போய் சமோசா வாங்கிச் சாப்பிட்டோம். உள்ள விக்கிற தண்ணி பாட்டில வாங்க ரொம்ப யோசிச்சோம். ஆனாலும் வேற வழியில்லாம ஒன்னு வாங்கினோம். பாத்தா அதோட மூடியத் தொறக்கவே முடியல.

டிரெயின்ல என்னென்ன விக்கிறாங்கன்னு  பாத்தா… ஆமைவடை, சமோசா, வெஜ்ரோல், சிக்கன் ரோல், ஃபிஷ் ரோல், பிஸ்கட், கூல்டிரிங்ஸ் எல்லாம் விக்கிறாங்க. நடுநடுல கச்சான்னு சொல்ற வறுத்த நிலக்கடலையும் வருது. கொழும்ப விட்டுத் தாண்டி தமிழர்கள் இருக்கும் வடக்க போகப் போக ரொட்டியும் (நம்ம ஊர் பரோட்டா) சம்பலும் கிடைக்குது. வந்த அன்னைக்கே வம்பு எதுக்குன்னு எதுவும் வாங்கல.

16807630_987717214694992_748047162802628126_nகொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில நிறைய பெரிய புகழ் வாய்ந்த ஊர்கள். அனுராதபுரம், வவுனியா, ஓமந்தை, கிளிநொச்சி, யானையிரவு, பளை, சாவகச்சேரின்னு பல ஊர்கள். நல்லதும் கெட்டதுமா நாம நிறைய கேள்விப்பட்ட ஊர்கள். நிறைய கேள்விப்பட்ட.. நம்ம மனசுல இன்னும் நிக்குற வன்னிக்காடுகள் வழியாகத்தான் இரயில் போகுது. வன்னிக்காடுகளோட அடர்த்தியைப் பத்தி நான் சொல்லிப் புரிய வைக்க முடியாது. காட்டு ஓரமே இவ்வளவு அடர்த்தின்னா உள்ள எப்படியிருக்குமோ!!!

வழியில நிறைய வயல்கள் இருந்ததால கொக்குகளும் நாரைகளும் எக்கச்சக்கமா இருக்குது. தமிழர் பகுதிக்குள்ள நுழைஞ்ச பிறகு நிறைய மயில்கள் தென்பட்டது. தூக்க முடியாம தோகையத் தூக்கிக்கிட்டு ஆட்ட முடியாம கழுத்தை ஆட்டிக்கிட்டு அங்கயும் இங்கயும் அவ்வளவு மயில்கள். கண்ணும் மனசும் நெறஞ்சு போச்சு. இதெல்லாம் இப்பிடியிருக்க நாங்க போன இரயில் அங்கங்க நிறுத்தி நின்னு நிதானமா…  வேண்டாத மாமியாருக்கு சோறு கொண்டு போற மருமக மாதிரி போச்சு. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாமதமா யாழ்ப்பாணத்துக்குள்ள நுழைஞ்சது.

இரயிலை விட்டு இறங்கி யாழ்ப்பாணத்துல நிக்குறப்போ எனக்குள்ள ஓடுன உணர்ச்சிகளுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல.
16864658_987717074695006_6369930708893434153_n
யாழ்ப்பாணம்…

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கலாம்.

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம், யாழ்ப்பாணம் and tagged , , , , , . Bookmark the permalink.

15 Responses to தென்னிலங்கை மங்கை – 1

 1. amas32 says:

  பொறிச்ச மெளகா வத்தல் நறுக்கிப் போட்ட வெங்காயமெல்லாம் போட்டு சின்ன ஆமைவடையை இப்ப சாப்பிடனும் போல இருக்கு ஜிரா ;-} அருமையான ஆரம்பம். உங்களோடு இலங்கைப் பயணம் செய்யப் போகிறேன் :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   வாங்கம்மா வாங்க. நேர்ல கூட்டிட்டுப் போய் காட்டுன அளவுக்கு இல்லாட்டியும் முடிஞ்ச வரைக்கும் எழுத்துல காட்டியிருக்கேன். 🙂

   ஆமைவடை வீட்டில் சுட்டால்… எனக்கு ஒரு ஃபோன் போடவும். ஓஓஓடி வந்துர்ரேன் 🙂

 2. என்னதான் நம்ம நாடாவே இருந்தாலும் இன்னொருத்தர் பார்வையில பார்க்கும்போது இன்னும் அழகு, ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர்நோக்குகிறேன்

  • GiRa ஜிரா says:

   உங்களைச் சந்திக்க முடியவில்லை. நீங்க கண்டியில் இருப்பது அங்கிருந்து புறப்பட்ட பிறகுதான் தெரிந்தது.

 3. Jay Mayu says:

  இம்புட்டுப் பக்கத்தில வேள்ளவத்தைக்கு வந்துட்டி நம்மள சந்திக்காம போயிட்டேளே.. அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

  • GiRa ஜிரா says:

   டிவிட்டர்ல வரப்போறதைச் சொல்லியிருந்தேன். யார் யார் எங்க இருக்காங்கன்னு தெரியல. தொடர்புகொண்ட நண்பர்களையெல்லாம் சந்தித்தேன். உங்களை இந்த முறை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம். இன்னொரு பயணம் அமையுமென நம்புவோம்.

 4. vasanthigopalan says:

  கூடப் போன மாதிரியே இருந்தது.எவ்ளோ கதைகள்ல படிச்ச ஊர்பெயர்கள்.பார்க்கணும்னு ஆசையா தான் இருக்கு.நன்றி பகிர்ந்ததற்கு.

  • GiRa ஜிரா says:

   கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி 🙂

 5. stavirs says:

  Super kalakkals

  2017-03-06 15:04 GMT+08:00 மாணிக்க மாதுளை முத்துகள் :

  > GiRa ஜிரா posted: “மு.கு இந்தத் தொடர் பதிவில் கூறப்படும் தொல்லியல்
  > வரலாற்றியல் மொழியியல் நாட்டாரியல் வெளிநாட்டியல் பௌத்தவியல் அறிவியல்
  > நையாண்டியியல் அணுப்பிளவியல் மற்றும் பலவிதமான இயல்களில் ஐயப்பாடுகள் வருகின்ற
  > சந்திரமோகர்கள், அவற்றை சர்வசந்தேகநிவாரணியாகிய வெற்றிமோகரிடம் க”
  >

 6. Pingback: 2. யாழ் மண்ணில் | மாணிக்க மாதுளை முத்துகள்

 7. பகீரதன் says:

  ஓமந்தை, பளை

  • GiRa ஜிரா says:

   சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

 8. Saba-Thambi says:

  நல்ல வடிவாக யாழ்ப்பாணத்து நடையில் எழுதிறியள். வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு, அதுவும் எங்கடை நாட்டை உங்கட கண்ணால பார்க்கும் போது.
  👍👌, அது சரி இந்த ஆமை வடை? அந்த பெரிய உழுந்து வடையே?

 9. /*இரயிலை விட்டு இறங்கி யாழ்ப்பாணத்துல நிக்குறப்போ எனக்குள்ள ஓடுன உணர்ச்சிகளுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல.*/

  யாழ்பாணத்தில் நானே நிற்பதாய் உணர்ந்தேன்.. திக்.. திக்.. கலந்த பரவச நிலை!!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s