8. சீதையின் பாதையில்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

இலங்கை அரசின் விவசாயத்துறை “ஹெல போஜுன்”ன்னு ஒரு அமைப்பை உருவாக்கி இலங்கையோட பாரம்பரிய உணவுகளைப் பிரபலமாக்குது. குறிப்பா சுற்றுலாப் பயணிகள் வர்ர ஊர்கள்ள இந்த சாப்பாட்டுக்கடைகளை அமைச்சிருக்காங்க. பாரம்பரிய உணவுகள்னு சொன்னா சிங்கள உணவுகளோடு தமிழ் உணவுகளும் அடக்கம். தரமான உணவு. குறைந்த விலை. நல்ல சுவை. எல்லாத்துக்கும் மேல சுடச்சுடக் கிடைக்குது. இதை பெண்கள்தான் நடத்துறாங்க. இது முழுக்க முழுக்க மரக்கறி உணவுவகைகள் மட்டுமே கிடைக்கும் இடம். அதுனால அசைவம் சாப்பிடாதவங்களுக்கும் இது ஒரு அருமையான எடம். இந்த எடத்த அறிமுகப் படுத்திய எழுத்தாளர் ரிஷானுக்கு நன்றி. நன்றி.
16831154_988847424581971_3168331233207124250_n
இந்தியாவை விட்டுப் பொறப்பட்டு நாலு நாள்தான் ஆச்சு. அதுக்குள்ள ஊர்ச்சாப்பாடுக்கு ஏக்கம் வந்துருச்சு. அதுனால காணாததைக் கண்ட மாதிரி தோசையும் உழுந்தவடையும் வாங்கினேன். நான் இன்னும் கொஞ்சம் வேணும்னு தேங்காச் சட்டினி கேட்டு வாங்குனதப் பாத்து, தோசை வாங்கிட்டு இருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, thumbs up காமிச்சு நல்லாருக்கும்னு சொன்னாங்க. இதையெல்லாம் தினம் திங்குறவன்னு அவங்களுக்குச் சொல்லி அவங்க சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பமில்லாம புன்னகைச்சுட்டு வந்தேன்.
16832294_988847257915321_6919117568756467239_n
பிஞ்சுப் பலா கட்லட், வாழைப்பூ கட்லட், கொண்டைப் பலகாரம் (பணியாரத்துக்கு கொண்டை வெச்ச மாதிரி), வண்டு (வண்டு மாதிரி சின்னதா ஒரு தலை இருந்தது), கிரிபாத் (ரொம்பப் பிரபலமான பாற்சோறு), அவிச்ச சுண்டல், கேழ்வரகு கேக்னு இன்னும் நிறைய வகைகள் இருந்தது. வில்வம் பூ பானம்னு ஒன்னு இருந்தது. பிறகொன்னு கீரையைத் தண்ணி சேத்து அரைச்ச மாதிரி பச்சையா இருந்தது. பேர் மறந்துருச்சு. நல்லாருக்கும்னு சிவக்குமாரும் ருஷானும் சொன்னதால அதையும் வாங்கிக் குடிச்சேன். நல்லாதான் இருந்தது. பச்சைக்கீரை வாடையோட வடிகஞ்சி கலந்த மாதிரியான சுவை. அடுத்த நாள் காலைலயும் ஹெல போஜுனுக்கே வரனும்னு முடிவு பண்ணீட்டேன். இடத்தைச் சொல்லிக் கொடுத்த ரிஷானுக்கு நன்றி.

சாப்பிட்டதும் மூனு பேரும் பஸ் பிடிக்கப் போனோம். சீதா எலியாங்குற எடத்துக்குப் போறோம். எந்த பஸ் என்னன்னு யார் கண்டா… விவரம் தெரிஞ்சவங்க கூட இருக்கும் போது பின்னாடியே போனாப் பத்தாதா? ஆனாலும் சொல்றேன் குறிச்சிக்கோங்க. ஹக்கல பூங்கா (Hakgala Botanical Garden) வழியாகப் போற எல்லா பஸ்சும் போகும். நுவரேலியா பஸ்டாண்டுல இருந்து அஞ்சே அஞ்சு கிலோமீட்டர் தான்.

16864655_988848931248487_1077014867640402391_nசீதா எலியா-ன்னு சிங்களத்தில் சொல்ற எடத்தை தமிழ் மக்கள் சீதையம்மன் கோயில்னு சொல்றாங்க. இங்கதான் சீதையை இராவணன் சிறை வெச்சிருந்ததா சொல்றாங்க. சீதையம்மன் கோயில்னு சொன்னாலும் இங்க சீதைக்குத் தனிக் கோயில் கிடையாது. இராம இலட்சுமனர்களோடதான் கோயில். அனுமாருக்கு தனியா கோயில் இருக்கு. இந்தக் கோயில் 2000ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கு. அதுக்கு முன்னாடி இங்க கோயில் எதுவும் இல்லாம இருந்திருக்கு. ஆனா இந்தக் கோயிலைக் கட்டினா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம்னு சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்குத் தோணியிருக்கு. ஆனா இங்கதான் கோயில் கட்டனுமான்னு ஏதோ சர்ச்சை வந்திருக்கும் போல.

16864222_988849027915144_1894834320435877075_nஅப்போ மத்திய இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் கோயில் அறங்காவலாரகவும் இருந்த வி.இராதாகிருஷ்ணன் சில ஆதாரங்களைக் காட்டி அனுமதி வாங்குறாரு. அசோகமரங்கள் நெருக்கமா இருப்பாதலயும் சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டதும் அவர் சொன்ன முதல் ஆதாரம். அடுத்து அங்க கண்டெடுக்கப்பட்ட சிலைகள்ள ஒன்னு சீதையின் சிலையாகத்தான் இருக்கனும்னு அவர் காட்டிய இரண்டாவது ஆதாரம். அதுனால அந்த எடத்துல ஏற்கனவே கோயில் இருந்து அழிஞ்சிருக்கனுங்கூறது அவரோட வாதம். இது ரொம்ப விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாச்சு. முன்னாடி கோயில் எதுவும் இருந்ததுக்கு திடமான ஆதாரமா இல்லையேன்னு பேச்சுகள் நடந்திருக்கு. பிறகு சிலபல தடைகளுக்குப் பிறகு 2000ம் ஆண்டு இந்தக் கோயிலைக் கட்டுறாங்க. ஒரு சில குடும்பங்கள் இதனால இடம்பெயர்ந்து போகவேண்டியிருந்ததுன்னு சொல்றாங்க. இது நான் கேள்விப்பட்ட வரலாறு.

நாங்க போன நேரம் கூட்டமில்லாம இருந்தது. அதுனால பொறுமையாகப் பாக்க முடிஞ்சது. கோயில் முழுக்க புதுசா பெயிண்ட் அடிச்சிருக்காங்க. யார் தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரியல… காவி நிறமும் பொன்னிறமும் கலந்து கோயிலுக்கு பெயிண்ட் அடிச்சிருக்காங்க. பழைய படங்கள்ள கோயில் நல்லா அழகா இருக்கு. அப்படியே விட்டிருந்திருக்கலாமோன்னு தோணுச்சு.

16830828_988848957915151_4069926968187622854_nஇங்க இருக்கும் மண் கருப்பா இருப்பது அனுமார் இலங்கையை எரிச்சதாலன்னு சொல்றாங்க. இங்க சில குழிகள் இருக்கு. சிலர் அதை சீதையோட காலடித்தடம்னு சொல்றாங்க. சிலர் அனுமாரோட காலடித்தடம்னு சொல்றாங்க. இங்க ஓடும் ஆற்றுத்தண்ணி இந்த எடத்துல மட்டும் சுவையில்லாம இருக்குதாம். சீதையால சபிக்கப்பட்டதால சுவையில்லாமப் போச்சாம். கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் குடிச்சாதான் ஆத்துத் தண்ணியில் சுவை தெரியுமாம். நான் குடிச்சுப் பாக்கல. அதுனால அது சரியா தப்பான்னு தெரியல. சமீபத்துல மே-18, 2016ல், கால்தடம்னு சொல்லப்படும் அடையாளங்களுக்குப் பக்கத்துல சீதையை அனுமார் சந்திச்சு கணையாழி கொடுக்குறது மாதிரி சிலை நிறுவியிருக்காங்க. அதை ஆர்ட் ஆப் லிவ்விங் ரவிஷங்கர் தொறந்து வெச்சிருக்காரு.

சீதா எலியாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஹக்கல தாவரவியல் பூங்கா. நுவரேலியா போனா கண்டிப்பாகப் போக வேண்டிய ஒரு எடம். நாங்க நடந்தே போனோம். நல்ல சாலை. அழகான மலைச்சரிவு. குளுமையான சூழல். நடக்கச் சுகமா இருந்தது. மக்கள் நிறைய வர்ரதால சாலையை விரிவுபடுத்தியிருக்காங்க. சாலையை விரிவுபடுத்துறதுல மண்சரிவுகளும் நிறைய ஏற்படுது. குறிப்பாக மழைக்காலங்கள்ள நிறைய மண்சரிவுகள் ஏற்பட்டு அங்கிட்டிருந்து இங்கும் இங்கிட்டிருந்து அங்கும் போக முடியாதபடி ஆயிருமாம். மண்சரிவு ஏற்பட்ட எடத்தை வழியில் பாத்தோம். ஆயிரம் தான் சொல்லுங்க. இயற்கைக்கு முன்னாடி மனிதன் தூசு. மனிதனுக்கான ஆப்பை இயற்கை உக்காந்து பொறுமையா செதுக்கிக்கிட்டிருக்குன்னு நான் உறுதியா நம்புறேன். என்னைக்கோ எப்பவோ…
16830699_988849184581795_1893144185640306669_n
இலங்கையின் இரண்டாவது பெரிய தாவரவியல் பூங்கா ஹக்கல பூங்கா. இது பிரிட்டிஷ்காரர்களால நிறுவப்பட்டு இன்னமும் அவர்களால பராமரிக்கப்படும் பூங்கா. என்ன செடி வைக்கிறது… என்ன மரம் நடுறது… என்ன வகையான பூக்களை வளக்குறதுன்னு இங்கிலாந்து அரச குடும்பம் தான் முடிவு செய்யுதாம். பணம் கொடுத்துப் பராமரிக்குதான். நடக்கத் தெம்பிருந்தா பொழுது போக்க அருமையான எடம். இதுக்குன்னே ஒரு நாள் ஒதுக்கிப் போனா ஒவ்வொன்னா பாத்து இரசிக்கலாம். இயற்கை பிடிக்கும், ஆனா ரொம்ப நடக்க முடியாதுன்னா… சுருக்கமா பாத்துட்டு திரும்பிறலாம். உள்ள நிறைய குரங்குகள் இருக்கு.
16832400_988849157915131_7909320781607089967_n
சிவக்குமாரும் ருஷானும் ஏற்கனவே நிறைய வாட்டி வந்த எடம் தான். ஆனா இந்த வாட்டி என் கூட வந்து மாட்டிக்கிட்டாங்க. சளசளன்னு பேசிப் பேசி அவங்கள பயமுறுத்தினேன். இனிமே இந்தியால இருந்து யாராவது வந்தா எவ்வளவு பயப்படனும்னு அவங்களுக்குப் புரிய வெச்சேன். இதெல்லாம் பெருமையா? கடமை. கடமை. அதுலயும் குறிப்பா தாவரவியல் பெயர்களுக்கு காரணத்தை அடிச்சு விட்டேன். நான் கதைக்கல. மாறா கதையளக்குறேன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நான் நல்லவனா மாறிட்டேன். 🙂

16831160_988849091248471_8906319833955347460_nகோடைகாலத்துல மலர்க்கண்காட்சியெல்லாம் நடக்குமாம். அப்போ மொத்தப் பூங்காவுமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி இருக்குமாம். அதுக்கான ஏற்பாடுகளை இப்பவே தொடங்கிட்டாங்க. சின்னச் சின்ன செடிக்கெல்லாம் கூரை போட்டு அளவா வெயில் படுற மாதிரி வளக்குறாங்க. நாங்க போனது ஞாயிற்றுக் கிழமைங்குறதால பள்ளி/கல்லூரிகள்ள இருந்து நிறைய சுற்றுலா கூட்டீட்டு வந்திருந்தாங்க. பூங்காவே கலகலப்பாயிருந்தது.

நிறைய பசங்க தலைல ரெண்டு பக்கமும் ஒட்ட முடிய வெட்டிட்டு நடுமண்டைல ஒரு கொண்டை போட்டுக்கிறாங்க. இப்ப அங்க ரொம்பப் பிரபலமான முடியலங்காரமாம். அதுக்குப் பேரு மாத்தளை வெட்டாம். அந்த ஊர்ப் பசங்க கண்டுபிடிச்சது போல.

பூங்காவை முடிச்சிட்டு நேரா நுவரேலியா போற பஸ்சுல ஏறுனோம். சரியான பசி நேரம். அது எனக்கு மட்டுந்தான்னு அப்புறந்தான் தெரிஞ்சது.

தொடரும்…

அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், நுவரேலியா, பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

11 Responses to 8. சீதையின் பாதையில்

 1. Pingback: 7. ஏரிக்கரைப் பூங்காற்றே, போறவழி தென்கிழக்கோ | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. amas32 says:

  அருமை ஜிரா! தெரிந்தவர்கள் துணையோடு போனால் முக்கிய இடங்களைத் தவற விடாமல் பார்த்து விடலாம். சீதா எலியா பற்றிய விவரங்களுக்கு நன்றி.
  பணியாரங்களின் படங்கள் நாக்கில் நீர் ஊற வைக்கிறது :-}
  amas32

 3. JAYASHREE says:

  VAZHGAVALAMUDAN Ragava arumaiyana payanathodar .naduvula oonakae oolla kusumbu ahamotham super.

 4. புகழேந்தி says:

  சாவி தோற்றார்.

 5. புரா says:

  இனி இலங்கை போகப் போவதில்லை. இந்தப் பதிவுகள் போதுமையா.

 6. Pingback: 9. டாட்டா நுவரேலியா | மாணிக்க மாதுளை முத்துகள்

 7. “பிறகொன்னு கீரையைத் தண்ணி சேத்து அரைச்ச மாதிரி பச்சையா இருந்தது”
  கொள கெந்த – இலைக்கஞ்சி
  பல்கலைக்கழகத்துல இருக்கிற ஹெல போஜுனால தான் இங்கயும் காலை சாப்பாடு பிரச்சினை இல்லாம இருக்கு 🙂

  • GiRa ஜிரா says:

   இலைக்கஞ்சிதான். இலைக்கு அஞ்சாம நானும் குடிச்சேன். பேர் மறந்துருச்சு 😬

  • GiRa ஜிரா says:

   அதேதான். இலைக்கஞ்சி. நல்லாவே இருந்தது.
   நீங்க தினமும் ஹெல போஜுன்ல சாப்பிடுறவரா… அருமை.

 8. அருமையான பதிவு..
  நானே நேரடியாக சென்றதாய் உணர்ந்தேன்!!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s