13. நுவர நுவர நுவர

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

கண்டி மலைப்பகுதி. அதுல மழையும் சேந்ததால வேகத்தைக் கொறைச்சு கார் ஓட்டினாரு நண்பர். அப்போ அவர் கூட இலங்கையைப் பத்தி நிறைய பேச வேண்டியிருந்தது. பேச்சு சென்னை ஜெயலலிதான்னு திரும்புச்சு. உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசக்கூடாதுன்னு முடிஞ்சவரைக்கும் கட்டுப்பாட்டோட பேசுனேன். வெளிய காமிச்சக்கலைன்னாலும் எனக்குள்ள எமோஷன் இருக்கதான் செஞ்சது. கஷ்டப்பட்டுதான் மறைச்சேன்.
Nilames_in_Perahera_Litho_1841
image002நுவரேலியாவுல இருந்து எப்படி வந்தேன்னு கேட்டப்போ பஸ்ல வந்ததையும், கண்டக்டர் நுவர நுவர நுவரன்னு சொன்னதையும், அந்த ஊரை மட்டும் வழியில் கண்டுபிடிக்க முடியலைன்னும் சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே கண்டிய சிங்களத்துல நுவரன்னு சொல்வாங்கன்னு சொன்னாரு. தமிழ்லயும் ஆங்கிலத்துலயும் கண்டி. நுவரங்குற சொல்லுக்கு நகரம்னு பொருள். கண்டியோட பழைய அரசாங்கப் பெயர் “செங்கடகல ஸ்ரீவர்தன மகா நுவர(Senkadagala Siriwardhana Maha Nuwara)”. மகா நுவர-ன்னா தலை நகரம். அதுனாலதான் நுவரன்னே சிங்கள மக்கள் சொல்றாங்க.

அப்போ கண்டிங்குற பேர் எப்படி வந்தது? வெள்ளைக்காரன் கைக்கு இலங்கை வந்தப்போ வந்தது. கந்த உத ரத்ன (Kanda Uda Ratna)ன்னா மலையில் உள்ள நிலம்னு பொருள். இத மொதல்ல போர்ச்சுக்கீசியர்கள் கண்டியான்னு சுருக்கி, பின்னாடி பிரிட்டிஷ்காரர்கள் கண்டின்னு நொண்டியடிக்க விட்டுட்டாங்க. தமிழ் மக்களும் கண்டின்னே சொல்லிப் பழகிட்டாங்க.

எழுத்தாளர் ரிஷான் கிட்ட கேட்டப்போ கண்டிக்கு பெயர் வந்த காரணத்தை இப்படிச் சொல்றாரு. ஆனா என்ன மாதிரி இல்லாம நல்ல தமிழ்ல சொல்றாரு. 🙂
பண்டைய கண்டி நகரத்துக்கு அருகாமையிலிருந்த குகையொன்றில் வசித்து தியானம் செய்த ‘செங்கண்ட’ எனும் பெயர் கொண்ட துறவியின் பெயரிலிருந்து செங்கண்ட கல (செங்கண்டவின் மலை) எனும் பெயர் பெற்று காலப்போக்கில் அது மருவி ‘செங்கடகல’ என ஆயிற்று என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மஹநுவர (Mahanuwara) என்றால் தலைநகரம். ‘செங்கடகலபுர’ நாட்டின் தலைநகரமாக இருந்த காலத்தில் மஹநுவர என அழைக்கப்பட்டு, தொடர்ந்து அந்தப் பெயரே இன்றுவரை நிலைத்திருக்கிறது. ‘ஸ்ரீ செங்கண்ட’ எனும் நகரம் பிற நாட்டவர் ஆண்ட காலத்தில் அவர்களால் உச்சரிக்கச் சிரமமான பெயரென்பதால் ‘செங்கண்ட’ –> கண்ட –>  கண்டி ஆகியிருக்கிறது.

DSC02095_10753519.3930513_stdகண்டியைப் பத்தியும் இலங்கை வரலாறு பத்தியும் நண்பர் காரை ஓட்டிக்கிட்டே சில விவரங்கள் சொன்னாரு. அப்புறம் நானும் கொஞ்சம் தேடிப் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். சுருக்கமா சில தகவல்கள் உங்களுக்கு.

கண்டிக்கு “மகா நுவர(தலைநகரம்)”னு பேர் இருந்தாலும் சிங்கள அரசுகளோட கடைசித் தலைநகரம் தான் கண்டி. அனுராதபுரம் தான் முதல் தலைநகரம். வெளியிருந்து வந்த தாக்குதல்கள் காரணமா அனுராதபுரத்துல இருந்தா வேலைக்காகாதுன்னு பொலனுருவ, சிகிரியான்னு சுத்திட்டு 14ம் நூற்றாண்டுலதான் கண்டிக்கு வர்ராங்க.

இலங்கைச் சிங்கள அரசுகளுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கு. சோழர்கள் பாண்டியனைத் தாக்குனா இலங்கை உதவியிருக்கு. இலங்கையைச் சோழன் தாக்கிய போது பாண்டிய நாடு உதவியிருக்கு. இலங்கைக்கு விஜயன் முதன்முதலா வங்கத்திலிருந்து வந்தப்போ குவேணிங்குற இலங்கையின் பூர்வகுடிப் பெண்ணை மணந்தாலும் அவளை பட்டத்து அரசியாக்காம, பாண்டியன் மகளைத் திருமணம் செய்து அரசியாக்கியதா வரலாறு சொல்லுது. கொண்டான் கொடுத்தான் சம்பந்தம் ரெண்டு நாடுகளுக்கும் இருந்திருக்கு.

gold-coinசோழர்களுக்கு எப்பவும் பாண்டியன் மணிமுடி மேலயும் செங்கோல் மேலயும் எப்பவும் ஒரு கண். அடிக்கடி இதுனால போர் நடந்தது.  பாண்டியர்களும் முடிஞ்ச வரை எதிர்த்தாங்க. இரண்டாம் இராசசிம்மன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்துல பராந்தக சோழன் படையெடுத்து வெள்ளூர்ப் போர் நடக்குது. அப்போ பாண்டிய மன்னனுக்கு ஆதரவா இலங்கையின் ஐந்தாம் கஜவாகு அனுப்பிய யானைப்படை சக்கசேன தலைமையில் வருது. ஆனா அந்தப் போரில் சோழர்களுக்குதான் வெற்றி. ஆனாலும் மணிமுடியையும் செங்கோலையும் கைப்பற்ற முடியல. இராசிம்மன் இலங்கைக்குத் தப்பிச்சுப் போய் ஐந்தாம் கஜவாகு கிட்ட கொடுத்து வைக்கிறதால சோழர்கள் கைக்குக் கிடைக்கல.

வெள்ளூர்ப் போருக்குப் பின்னாடி பாண்டியர்கள் வலிமை குறைஞ்சதும் அடுத்து இலங்கையைத் தாக்குகிறார்கள் சோழர்கள். ஆனாலும் மணிமுடியையும் செங்கோலையும் கண்டுபிடிக்க முடியல. அதுக்குப் பிறகு ஆதித்த சோழன், சுந்தரசோழன், மதுராந்தகன், இராஜராஜன்னு சோழர்கள் ஓகோன்னு போயிட்டாங்க. சேரனையும் பாண்டியனையும் அழிச்சு மும்முடிச் சோழன்னு பெருமை.

ஆனா பாண்டியன் மணிமுடியை சிங்கள மன்னன் கிட்ட கொடுத்துட்டு திரும்ப வாங்க முடியாததால சோழன் படையெடுத்துப் போனான்னு கல்கி மாத்தி கதையா எழுதீட்டாரு. அதோட தொடர்ச்சியா அகிலனும் சோழன் மணிமுடியை திரும்பக் கொண்டு வந்ததாக கதை எழுதீட்டாரு. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

வரலாற்று நூல்கள்ள மட்டுமில்லாம இலங்கையின் வரலாறு சொல்லும் மாகவமிசத்திலும் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கு.

இந்த சிங்களரோட மதுரைத் தொடர்பு எந்த அளவுக்குப் போச்சுன்னா… பாண்டியர்கள் வீழ்ந்து சுல்தான்களின் ஆட்சி மதுரைக்கு வந்து, அதுக்குப் பிறகு நாயக்கர்கள் ஆட்சி வந்த பிறகும் மதுரை நாயக்கர்கள் வீட்டிலிருந்து பெண் எடுத்திருக்காங்க. இது தமிழக வரலாறு கூடவே இலங்கை வரலாறும் பிரிக்க முடியாம மாறுது. இது பெண் எடுத்து கொடுக்குறதுல இன்னொரு வசதியும் இருக்கு. அப்போ போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சி செய்த காலகட்டம். அதைத் தடுக்க படையுதவியும் வேணும். திருமண உறவுன்னு இருந்தா படையுதவியும் அரசியல் உதவியும் தானா வரும்.
Capture_of_HM_Sri_Vikrama_Rajasinha_in_1815
வீர மகேந்திரசிங்க என்ற சிங்கள மன்னனும் அப்படி பெண் எடுத்தவர் தான். அவருக்கு நேரடி வாரிசு இல்லை. அதுனால மனைவியோட தம்பி அடுத்த மன்னனாகிறான். அப்படி மன்னன் ஆனவர் தான் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க. அடுத்தடுத்து ரெண்டு மன்னர்கள் வர்ராங்க. இலங்கையோட கடைசி மன்னனா ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க இந்த வரிசைல வர்ராரு. அவரோட இயற்பெயர் கந்தசாமி (அ) கண்ணசாமி (அ) கண்ணுசாமி. வெள்ளைக்காரர்கள் இலங்கையை ஆக்கிரமிக்கும் போது அவரை சிறை பிடிச்சு தமிழ்நாட்டு வெல்லூருக்கு கொண்டு வர்ராங்க. அங்க சிறையில் இருந்து வாரிசு இல்லாம இறந்து போறாரு. அதுக்கப்புறம் இலங்கைல வெள்ளைக்காரனோட ஆட்சிதான்.

Ceylon_KGVI_50cஇந்தியாவை வாங்குனதுக்கு இலவச இணைப்பா இலங்கையும் கிடைச்சா வெள்ளைக்காரன் சும்மாயிருப்பானா? எப்பேர்ப்பட்ட ஆளு. இந்தியாவில் கத்துக்கிட்ட பிரித்தாளும் திட்டத்த இலங்கைல செயல்படுத்துறான். மக்கள் ஒன்னு சேரக்கூடாதுன்னு சாதி அடிப்படைல பிரிக்கிறான். இனத்தின் அடிப்படைல பிரிக்கிறான். எல்லா மக்களும் கலந்து ஒத்துமையா இருக்குறது கண்ண உறுத்துது. சிங்களர் பெரும்பான்மையா இருக்கும் எடங்கள்ள இருந்த எல்லாரையும் சிங்களரா வகைப்படுத்தினான். பல தமிழர்கள் இதனால சிங்கள அடையாளத்துக்குள்ள வர்ராங்க. இன்னைக்கும் சிங்கள சாதிகளில் கீழ்நிலைல இருக்குறவங்க ஆதியில் தமிழரா இருந்தவங்கன்னு சொல்றாங்க. அந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்ததால அவங்களும் வரலாறு போற போக்கிலேயே போக வேண்டியதாப் போச்சு.

அதே போல தமிழர்கள் பகுதில இருந்த எல்லாரையும் தமிழர்களா வகைப்படுத்துறாங்க. அதுல மலையாளம் பேசும் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் அடக்கம். ஆனாலும் எல்லாரும் தமிழர்கள்னு வகைப்படுத்தப்படுறாங்க. தமிழகத்துல அப்படி வாழ்ந்து பழகிட்டதால அவங்களுக்கு தமிழர்களோட சேர்ரது இயல்பா இருந்திருக்கு. இப்பிடி ரெண்டு பிரிச்சிட்டா ஆட்சி செய்றது லேசு. இந்த ரெண்டும் போக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு மக்கள் இலங்கைச் சோனகர் (Sri Lankan Moors) என்று அழைக்கப்படும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்.

இவங்கள்ளாம் போக மிகச் சிறுபான்மையா இருந்த இன்னொரு இனம் மலாய் மக்கள். அதுல குறிப்பா தி சரம்(De Saram) குடும்பம் பத்தியும் தெரிஞ்சிக்கனும். டச்சுக்காரர்களோடு கலந்து உருவான குடும்பம் தி சரம் குடும்பம். ஆங்கிலோ இந்தியன்னு சொல்றோமே. அந்த மாதிரி. ஆனா சாதிய அடுக்கில் இவங்க மேன்மையா கருதப்படல. பல்லக்கில் போக உரிமை கிடையாது. அந்தக் குடும்பத்துல இருந்து 71 வயது பெரியவர் ஒருத்தர் நடந்தே கண்டிக்கு வந்து வெள்ளைக்காரன் கிட்ட வேலைக்கு சேர்ராரு. அவரோட உழைப்பால அவருக்கு முதலியாரா பதிவு உயர்வு கிடைக்குது.

800px-De_Sarams.11751816_largeமுதலியார்னா சாதி இல்லை. பதவி. நிர்வாகம் செய்றதுக்காக போர்ச்சுக்கீசியர்களும் ஆங்கிலேயர்களும் உருவாக்கி வளர்த்துவிட்ட பதவி. சிங்களம் பேசுறவங்களோ தமிழ் முஸ்லீம்களோ கூட அந்தப் பதிவுக்கு வரலாம். ஆனா பேர் தமிழ்ப் பேர்தான். தி சரம் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா அதிகாரத்துக்கு நெருக்கமாகுது. டச்சு புராட்டஸ்டாண்டுகளா இருந்தவங்க Angelicanismக்கு(Under Church of England) மாறுறாங்க. அதிகாரம் இன்னும் நெருக்கமாகுது. இந்த சமயத்துலதான் நாலாவது மகா முதலியாரா இருந்த கிரிஸ்டோபெல் தி சரம்(Christofel de Saram) தன்னோட பேரை வனிகசேகர ஏகநாயக-ன்னு மாத்திக்கிறாரு. என்னதான் பதவி இருந்தாலும் social status வேணுமில்லையா. சொல்லும் போதே அதிரனும்னு நெனச்சிருப்பாரு போல. அப்போ நியூமரலாஜி பாத்து யாரும் சொல்லிருப்பாங்களோ என்னவோ.

பேர மாத்திய நேரத்தில் அதிகாரமும் செல்வாக்கும் வரவர மற்ற சிங்கள உயர் சாதிக் குடும்பங்களோட சம்பந்தம் வெச்சுக்கிறாங்க. 19ம் நூற்றாண்டுல இந்தக் குடும்பத்தோட உறவினர்கள்தான் மிகுந்த செல்வாக்கான முதலியார்களா இருந்திருக்காங்க. இந்த முதலியார்கள்ள இருந்துதான் இலங்கையின் இப்ப இருக்கும் முக்கியமான அரசியல் குடும்பங்கள் உருவாகியிருக்குன்னு சொல்றாங்க. தலையச் சுத்துதா? அதுதான் அரசியல். ஒரு எழுபத்தோரு வயசுப் பெரியவரோட உறுதி எங்க வந்து நிக்குதுன்னு பாருங்க.

மேல சொன்னதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு நண்பரோட கார்ல வர்ரப்போ கிடைச்ச துப்புகள் உதவியா இருந்தது. அண்ணா நூலகமும் இணையமும் தகவல்களைக் கண்டுபிடிக்க இன்னும் உதவியா இருந்தது. நடந்ததையெல்லாம் என்னால முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா சொல்லியிருக்கேன். இந்தத் தகவல்களை இலங்கைலயும் இந்தியாவிலும் இருக்கும் வரலாறு தெரிஞ்ச நண்பர்கள் கிட்ட கொடுத்து சரிபார்த்த பிறகுதான் பதிவில் சேத்திருக்கேன். ஆனாலும் இதுல எதாவது தவறுகள் திருந்தங்கள் இருந்தா ஆதாரத்தோடு சொல்லவும். திருத்திக்கிறேன்.

இப்படியெல்லாம் கதைச்சிக்கிட்டே கொழும்புக்குள்ள நுழைஞ்சா பயங்கர நெரிசல். தெகிவளை(Dehiwala)ங்குற எடத்துல தங்க இடம் பாத்துச் சொல்லியிருக்காரு எழுத்தாளர் ரிஷான். அடுத்த மூன்று நாள் கொழும்புதான். ஆனா அடுத்த நாள் காலைல நாலு மணிக்கு கதிர்காமம் பொறப்படனும்.

நான் வந்துக்கிட்டேயிருக்கேன்னு சொல்ல ஹோட்டல் மேனேஜருக்கு ஃபோன் பண்ணேன். அப்பதான் அவர் குக்கர்ல குண்டு போடுற மாதிரி என் தலைல குண்டு போட்டு பிரஷரைக் கூட்டுனாரு.

“சார். வேலண்டைன்ஸ் டே வந்ததால வழக்கமா கொடுக்குற ரூம் எல்லாம் புக் ஆயிருச்சு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வேற எடத்துல ரூம் தர்ரேன். நாளைக்கு மதியம் ஒங்கள வழக்கமா கொடுக்குற ரூமை மாத்திக் கொடுக்குறேன்”னு சொல்றாரு. ரெண்டுமே பக்கத்து பக்கத்து எடம் தான். ஆனா அவர் மாத்திக் கொடுக்குறேன்னு சொன்ன மதியம் நான் கதிர்காமத்துல இருப்பேன். திரும்பி வர ராத்திரி எட்டு/ஒம்பது மணி ஆயிரும். என்ன பண்றது?

தொடரும்…

அடுத்த பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் and tagged , , , , . Bookmark the permalink.

8 Responses to 13. நுவர நுவர நுவர

 1. Pingback: 12. பத்தினித் தெய்வம் | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. nparamasivam1951 says:

  ஆனாலும் பாண்டியர்கள் செய்தது தவறு தான் (மணிமுடியையும் செங்கோலையும் வேற்று நாட்டில் கொடுத்ததை கூறுகிறேன்)

  • GiRa ஜிரா says:

   பாண்டியர்களுக்கு சோழர்களும் பக்கத்து நாடுதான். சிங்களனும் பக்கத்து நாடுதான். திருடனுக்குக் கொடுக்குற விட நண்பன் கிட்ட கொடுத்து வெக்கிறது நல்லதுன்னு நெனச்சிருக்கலாம். நீங்க இன்றைய இந்தியா – இலங்கை நிலைல இருந்து பாண்டிய – சிங்கள – சோழ அரசுகளைப் பாத்தா வரலாற்றை சரியாப் புரிஞ்சிக்க முடியாது.

 3. amas32 says:

  எஸ்டிடி அருமையா சொல்லியிருக்கீங்க.{ஈஸ்டிடினா வரலாறு தானே?} அவங்களுக்கு எப்பவும் பாண்டியர்கள் நண்பர்கள், சோழர்கள் எதிரிகள்னு புரியுது. போர்த்துகீசியர்களும் ஆங்கிலேயர்களும் வந்து ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்தவங்களைப் பிரித்து ஆண்டு, அது தொடர்ந்து வேறு பல பிரச்சினைகளை காலப் போக்கில் உருவாக்கிவிட்டிருக்கிறது.

  இந்த இலங்கைப் பயணத் தொடரில் இது வரை வந்தப் பகுதிகளில் இது தான் சிறந்தது :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிம்மா 🙂

   இதுல பெரும்பாலான தகவல்கள் எனக்கும் புதுசு. ஆர்வத்தோட கேட்டு, கொஞ்சம் எறங்கித் தேடி கண்டுபிடிச்ச தகவல்கள். அத முடிஞ்ச வரைக்கும் சுருக்கமாச் சொல்லியிருக்கேன்.

 4. இந்தத் தொடரில் என் மனசுக்கு ரொம்பவே பிடிச்ச பகுதின்னா இதைத்தான் சொல்லணும். சரித்திரம் எப்பவுமே சுவையானது. ஆனால் உண்மையான விவரம் கிடைப்பதுதான் அரிது. எல்லாத்தையும் பார்த்துப் படிச்சு ஆராய்ஞ்சால் ஒரு மாதிரி உண்மை நிலை புரியும்! இதுக்கான உழைப்பை மதிக்கணும்.

  அருமை ஜிரா!

  • GiRa ஜிரா says:

   டீச்சர். வாங்க. வாங்க. டீச்சர் கையால் பாராட்டு. இதைவிட என்ன வேணும். 🙂

 5. Pingback: 14. கதிர்காமக் கனவுகள் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s