17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் போது எட்டு மணிக்கு மேல ஆயிருச்சு. புதுசா எனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு பெட்டியை பத்திரமா இடம் மாத்தி வெச்சிருக்காங்க. நடக்குற தூரம்னாலும் சொன்னபடி வேலையை சரியாகச் செஞ்சிருக்காங்க. நான் வில்லா மேனேஜருக்கு ஃபோன் போட்டு நன்றி சொன்னேன்.
DSC09928
நல்ல அலுப்பு. தூங்கி எந்திரிச்சுப் பாத்தா கொழும்பு ரொம்பப் பரபரப்பா இயங்கிக்கிட்டிருந்தது. அன்னைக்குதான் கொழும்புல நண்பர் டினேசனைச் மாலையில் சந்திக்கும் திட்டம். குளிச்சிட்டு அவருக்கு ஃபோன் பண்ணேன். சம்பிரதாயமாகப் பேசீட்டு கொழும்புல பாக்குறதுக்கு நாலு எடம் சொல்லுங்கன்னு கேட்டேன். சாயந்திரம் அவரைப் பாக்குறதுக்குள்ள ரெண்டு மூனு எடம் பாத்திறலாம்னு திட்டம்.

நான் எடங்களைக் கேட்டதுமே டினேசனே மதியம் 12.30க்கு வந்து அவரே கூட்டீட்டுப் போறதாகச் சொன்னாரு. இதுக்கு மேல என்ன வேணும்? டினேசன் வாழ்கன்னு மனசுக்குள்ள வாழ்த்திட்டு பக்கத்துல கொஞ்சம் நடந்துட்டு வரலாம்னு போனேன். வில்லா இருந்த ரோட்டிலிருந்து நேரா நடந்தா பீச். அந்த பீச் வரைக்கும் நடைந்தேன். பீச்ல நடக்கலாமான்னு யோசிச்சேன். அந்த யோசனையை மாத்தீட்டு மறுபடியும் மெயின் ரோடுக்கு வந்தேன். அங்கருந்த கடைகளைப் பாத்துக்கிட்டே நடந்தேன். Glitz துணிக்கடை கண்ல பட்டது. கண்டில போன அதே கடை. உள்ள நுழைஞ்சிட்டேன். கண்டி அளவுக்கு கொழும்பு Glitzல விதவிதமான துணிகள் இல்லைன்னு தோணுச்சு. ரொம்ப நேரமாயிரக்கூடாதேன்னு எதுவும் வாங்காம வில்லாவுக்கு வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்தேன். வந்து பாத்தா… டினேசன் புன்னகை மன்னனா அங்க வந்து காத்துக்கிட்டிருக்காரு.

டினேசன் ஒரு உயர்ந்த மனிதன். உள்ளத்துல மட்டும் இல்ல. உயரத்திலயும் தான். எல்லாரையும் தலை நிமிர வைக்கிற திறமை அவருக்கு உண்டு. என்னென்ன மாதிரியான எடங்கள் பாக்கனும் என்னென்ன மாதிரியான பொருட்கள் வாங்கனும்னு கேட்டு மனசுக்குள்ளயே ஒரு திட்டம் போட்டுக்கிட்டாரு. நேரா போன எடம் Majestic City Mall. அங்க கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு என்னோட மொபைலுக்கு case & scratch guard மாத்துனேன். சும்மாச் சொல்லக்கூடாது. மாத்திக் கொடுத்த பையன் தொழில் சுத்தம்.

IMG_9692அங்கருந்து நேரா போன எடம் Crescat Mall Food Court. பசி வேளையாச்சே. இந்தியாவில் கிடைக்காத சிங்கள உணவு சாப்பிடனும்னு சொன்னேன். அதோட பலன் என்னோட தட்டுல Lamprais. சோறு, கறிக்கொழம்பு, கத்திரிக்கா கறி, சீனி சம்பல் இதையெல்லாம் வாழையிலையில் வெச்சு மடிச்சு பொட்டலம் மாதிரி கட்டி, அந்த வாழையிலையை தணல்ல வேக வைச்சுக் கொடுக்குறதுதான் Lamprais. வாழையிலையோட வாசமும் சாப்பாட்டு வாசமும் கலந்து பசியை பயங்கரமாக் கெளப்புது.

டச்சுக்காரர்கள் இலங்கைல இருந்தப்போ அங்க இருந்த மக்களோட கலந்து புது இனம் உருவாச்சு. De Saram Family பத்தி பாத்தோமே. அது மலாய் – டச்சு கலப்பு மக்கள். அதே மாதிரி சிங்கள – டச்சு கலப்பு மக்கள் உருவானாங்க. இவங்க டச்சுக்காரங்களோட ஹாலந்துக்குப் போகாம இலங்கைலயே தங்கிட்டாங்க. இவங்களோட கண்டுபிடிப்புதான் Lamprais. ரொம்பப் பிரபலமாயிருச்சு இப்போ. Vegetarian Lamprais கூட கிடைக்குது.

DSC09864திருப்தியா சாப்டுட்டு, நேராப் போனா எடம் கங்காராமய விகாரை(Gangaramaya Vihara). பெய்ரா ஏரி(Beira Lake) பக்கத்துல இருக்கும் அழகான விகாரை. வெளிநாட்டு மக்கள் டிக்கெட் வாங்கனும். கண்டிப்பாகப் போக வேண்டிய விகாரை. Jayasuriya Goonewardane de Silvaங்குற முதலியார் ஒருத்தர் 19ம் நூற்றாண்டுல இந்த எடத்தை விலைக்கு வாங்கி விகாரை கட்டியதாக வரலாறு சொல்லுது. மொதல்ல சின்னதாகக் கட்டினாலும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல பெரிய விகாரை ஆயிருச்சு. இந்த விகாரைல யானைத் தந்தங்கள், அரிய பொருட்கள், பலவிதமான புத்தர் சிலைகள், வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுகள்னு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இதோட இன்னொரு பகுதி ஏரிக்கு நடுவில் இருக்கு.  மெயின் விகாரைல டிக்கெட் வாங்குற டிக்கெட் ஏரிக்கு நடுவில் உள்ள கோயிலுக்குப் போகவும் செல்லும்.

DSC09913அடுத்து போன இடம் Independent Memorial Hall. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. தீ படத்துல ரஜினி இது பக்கத்துல நின்னு எதோ பேசுவார்னு நினைக்கிறேன். இலங்கைக்கு விடுதலை கிடைச்ச பிறகு அதன் ஞாபகார்த்தமா எழுப்பப்பட்ட கட்டிடம் இது. கண்டி அரண்மனையில் இருந்த மண்டபத்தை அடிப்படையா வெச்சு இதை வடிவமைச்சிருக்காங்க.

DSC09940அதுக்குப் பக்கத்துலயே Independent Square Arcadeனு ஒரு மால் இருக்கு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டுல ஒரு மனநோய் மருத்துவமனை. காலப்போக்குல அந்த மருத்துவமனை வேற எடத்துக்குப் போயிருச்சு. இந்தக் கட்டிடத்தில் பல்கலைக்கழக கல்லூரி, Sri Lanka Broadcast Corporationனு மாறி மாறி இருந்திருக்கு. 2012ல இந்தக் கட்டிடத்தை முந்தி இருந்த மாதிரியே புனரமைச்சிருக்காங்க. 200 இராணுவவீரர்கள் ஆறு மாசத்துல அந்த வேலையைச் செய்ததாகச் சொல்றாங்க.

மனநோயாளிகளுக்கான மருத்துவமனையா இருந்ததாலோ என்னவோ, இந்தக் கட்டிடத்துக்குள்ள எந்த அலங்காரங்களும் இல்ல. செங்கல் வெச்சுக் கட்டி சுண்ணாம்பு பூசிய கட்டிடம். வெள்ளையடிச்சிருக்காங்க. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு கம்பீரமான அழகு. அங்க இருந்த கடைகளை ஒவ்வொன்னாப் பாத்தோம். டீ குடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. டினேசன் அந்த மால்ல இருந்த Dilmah நிறுவனத்தோட Tea Shopக்கு கூட்டீட்டுப் போனாரு. ரொம்ப அழகான எடம். இந்த மாதிரி எடத்துல என்ன விட்டுட்டா சோம்பேறியாகி எந்திரிக்கவே மாட்டேன். அப்படியொரு எடம். Prince of Kandyங்குற டீ ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னதால அதையே கொண்டுவரச் சொன்னேன். அந்த Tea Pot அவ்வளவு ரசனையா இருந்தது. பயன்படுத்தவும் அவ்வளவு எளிது. டீ போடுறதுக்கு அத வாங்கீட்டு வராமப் போயிட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு.
DSC09966
அடுத்ததா போன இடம் விஹர மஹா தேவி பூங்கா (Vihara Maha Devi Park). இந்தப் பூங்கா வெள்ளைக்காரன் உருவாக்கியது. அப்போ அவன் வெச்ச பேர் விக்டோரியா பூங்க. அவங்க ராணி பேரு. விடுதலை வாங்கிய பிறகும் அதே பேர் இருக்குமா? சிங்கள ராணி பேரை வெச்சிட்டாங்க. விஹர மஹாதேவிங்குறது துட்டகமுனு-ங்குற மன்னனோட தாய். இந்த துட்டகமுனுதான் எல்லாளனை வென்ற போது கதிர்காமத்தில் கோயில் கட்டியதாகவும் ஒரு கதை உலவுது. கதை உலவுற மாதிரி பூங்காவில் கொஞ்சம் உலவினோம். நெடுந்தீவில் மட்டும் இருக்கும் ஒரு வகை குட்டைக் குதிரையை இந்தப் பூங்காவில் ஒரு இடத்தில் பாக்கலாம். நல்ல அருமையான பராமரிப்பு கொண்ட பூங்கா.
DSC09998
பூங்காவுக்கு வணக்கம் சொல்லிட்டு நேரா போன எடம் பொன்னம்பலவானேசுவரர் கோயில். கொழும்பில் கொச்சிக்கடை என்னும் இடத்தில் இருக்கு இந்தக் கோயில். தமிழர்கள் நிறைய இருக்கும் இடம்னு நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொன்னம்பல முதலியார் என்ற செல்வந்தர் கட்டிய கோயில். அவருடைய மூத்த மகன் குமாரசாமி முதலியார் தொடர்ந்து கோயிலைக் கட்டுகிறார். அவருடைய தம்பி பொன்னம்பலம் இராமநாதன் கோயிலை முழுசாகக் கட்டி முடிக்கிறார். இலங்கையில் முழுக்க முழுக்க கல்லால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான். வேற எந்தக் கோயிலுக்குமோ விகாரைக்குமோ இந்தப் பெருமை கிடையாது. திராவிடக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட கோயில். நல்ல துப்புரவாவும் இருக்கு. கொழும்பு போகிறவர்கள் கட்டாயம் போக வேண்டிய கோயில்.

பொன்னம்பலம் இராமநாதன் பற்றி ஒரு தகவல். இவர் பிரிட்டிஷ் இலங்கையில் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பிரதிநிதியாக அரசாங்கத்தில் இருந்திருக்கிறார். ஒருமுறை சிங்களர்களும் இலங்கை மூர்களுக்கும் (தமிழ் முஸ்லீம்கள்) கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தை உண்டாக்கியது சிங்கள அரசியல் தலைவர்கள் என்பதை வெள்ளைக்கார அரசு தெரிந்து கொண்டு அவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது. அப்போது பிரிட்டிஷ் அரசுடன் வாதாடி அந்த அரசியல் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். சிறையிலிருந்து வெளிவந்த சிங்கள அரசியல் தலைவர்கள் அவரை அப்போது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அப்படிச் சுமந்த அரசியல் தலைவர்கள்தான் பின்னாளில் விடுதலைக்குப் பிறகு இலங்கையை ஆளத் தொடங்கி இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
Sacn
பொன்னம்பலவானேசுவரருக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்து போன இடம் கொச்சிக்கடை புனித அந்தோணியார் கோயில். அங்கயும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேராகப் போன எடம் காலி முகத்திடல்னு சொல்லப்படுற Galle Face Beach.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்கு…

இதுதான் அந்த டீ பாட் 🙂

IMG_9722

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

10 Responses to 17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே

 1. Pingback: 16. டாட்டா கதிர்காமம் | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. Jay Mayu says:

  கொழும்பில ஒரு இடம் மிச்சம் வைக்காம பார்த்திட்டீங்க போல 😉

  • GiRa ஜிரா says:

   எல்லாம் டினேசர் தயவு. நானா சுத்தியிருந்தா, குருடன் மாதிரி ரெண்டு தெருவைத் தடவிப் பாத்துட்டு மட்டும் வந்திருப்பேன். 🙂

 3. டீ பாட் படத்தைக் காணோமே…… எங்கூரில் டீ க்கு மாத்திரமே ஒரு கடை இருக்கு. அஸ்ட்ராலியாவிலிருக்கும் கடையின் கிளை. விதவிதமான டீ க்களும் டீ பாட்டுகளும்தான் விசேஷம்! படத்தைப் போடுங்க…. இங்கெ இருக்கான்னு பார்க்கலாம்.

  • GiRa ஜிரா says:

   மெயில்ல அனுப்பி வைக்கிறேன் டீச்சர். இந்தியாவில் தேடிப் பாத்துட்டேன். கிடைக்கல. பொப்பட் ஜமால் போனா கிடைக்க வாய்ப்பிருக்கான்னு தெரியல.

 4. Pingback: 18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா இலங்கை | மாணிக்க மாதுளை முத்துகள்

 5. எல்லா இடங்களும் ரொம்ப அழகா இருக்கு..

  நானும் டீ பாட் படம் கடைசி வரிசையில் இருக்கும் என எதிர்பார்த்தேன்..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s