02. 50களில் மெல்லிசை அலையில் படகாக

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

கே.சோமு இயக்கத்தில் 1955ல் வெளிவந்தது டவுன்பஸ் திரைப்படம். இந்தப் படத்தில் அஞ்சலிதேவி பாடுவதாக அமைந்த ஒரு இனிமையான பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியை கே.வி.மகாதேவன் பாட வைத்தார். கா.மு.ஷெரிப் எழுதிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” என்ற பாட்டுதான் அது. ஒருவகையில் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கே.வி.மகாதேவன் இசையில் முதல் பெருவெற்றிப்பாடல்.

1950களில் தமிழ்த் திரையிசையின் பாதை மாறத்தொடங்கியது. கே.வி.மகாதேவன் புகழடையத் தொடங்கினார். 1952ல் எம்.எஸ்.விசுவநாதன் தனியாகவும்(ஜெனோவா) பின்னர் டி.கே.ராமமூர்த்தியோடு இணைந்தும்(பணம்) இசையமைக்கத் தொடங்கினார். மெல்லிசை என்ற புதிய உத்தி திரையிசையின் போக்கை மாற்றத்தொடங்கியது. ஆடல் நாயகிகளுக்கும் காதல் நாயகிகளுக்கும் பாடிக் கொண்டிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தாய்மை உணர்வு பொங்கும் அதியுன்னதமான ஒரு பாடலை மெல்லிசை மன்னர் பாடவைத்தார்.

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா….. (கண்ணதாசன்)
இப்படியொரு தாலாட்டுப் பாடலை எம்.எஸ்.ராஜேசுவரிக்குக் கொடுத்து அவர் குரலை இப்படியும் சிறப்பாக பயன்படுத்த முடியுமென்று காட்டினார் மெல்லிசை மன்னர்.

கண்ணதாசன் எழுதிய அந்தத் தாலாட்டுப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் மகாதேவி. சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கி எம்.ஜி.ஆர் நடித்த அதே படத்தில் மருதகாசி எழுதிய “காக்கா காக்கா மை கொண்டா” என்ற பாடலையும் எம்.எஸ்.ராஜேஸ்வரியை மெல்லிசை மன்னர் பாடவைத்தார். இதற்கு முன்பு எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கிடைத்த பாடல்களுக்கும் மகாதேவி கொடுத்த பாடல்களுக்கும் பெரும் வேறுபாடு இருப்பதை உணரலாம்.

இதோடு நிறுத்திவிடவில்லை மெல்லிசை மன்னர். கவியரசர் தயாரித்து பாடல்களை எழுதிய மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் மற்றொரு காவியப் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது. துவண்ட உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற கவியரசரின் அந்தப் பாடல் சாகித்ய அகாதமியால் பதினாறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
”மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்”

எம்.எஸ்.ராஜேஸ்வரியை மெல்லிசை மன்னர்கள் தாலாட்டுப் பாட்டு பாட வைத்ததை கே.வி.மகாதேவன் கவனித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டே (1958) அவரும் ஒரு தாலாட்டுப் பாட்டு தந்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் கே.முத்துசாமி எழுதிய “மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்குக் இலை பாரமா” என்ற இனிய தாலாட்டுப் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது.

அதே போல ஒரு நல்ல பாட்டு படிக்காத மேதை படத்தில் கிடைத்தது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” என்ற பாடல்தான் அது.

1950களிலும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு சிறப்பாகப் பேர் சொல்லும் இனிய பாடல்கள் கிடைத்தன. ஆனால் 1960களில்…

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மெல்லிசைமன்னர், Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 02. 50களில் மெல்லிசை அலையில் படகாக

  1. Pingback: 03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. தேடித் தேடி அருமையான பாடல்களை தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் ஜிரா. எம்.எஸ்.இராஜேஸ்வரிக்கு உளமார்ந்த அஞ்சலி!
    சுஷிமா சேகர்

  3. Pingback: 03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் – TamilBlogs

  4. ஆஹா அற்புதம் அற்புதம். டவுன் பஸ்சில் வரும் சிட்டுக்குருவி என் பால்ய பருவத்து கேட்டனுபவித்த பாடல் காரைக்குடியில். நன்றி வாழ்த்துக்கள் ஜிரா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s