Author Archives: G.Ra ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.

அதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்

உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் பொதுவானது ரெண்டு இருக்கு. இந்த ரெண்டும் இல்லைன்னு யாராவது சொன்னா அது பொய். 1. இடர் (துன்பம்) 2. ஐயம் (சந்தேகம்) கோடிக்கோடியா கொட்டி வைக்க இடமில்லாம இருப்பான். அவனுக்கும் எதாவது இடர் இருக்கும். சங்ககாலத்தில் கொற்கையிலிருந்த புரவிகளுக்கு ஒரு இடர் இருந்ததாம். முத்துக் குளிக்கும் கொற்கை செல்வச் செழிப்பான ஊர். … Continue reading

Posted in அகநானூறு, அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கொற்கை, தமிழ்ப் பெரியோர், திருப்புகழ், பக்தி, முருகன் | Tagged , , , , , , , | Leave a comment

இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 2

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். முதலில் உடையாளூர் கைலாசநாதர் கோயில்தான் இராசராசனின் பள்ளிப்படை என்று சொல்கிறவர்கள் முன்னிறுத்தும் கருத்துகளைப் பார்ப்போம். 1. இராசராசனின் சிவபாதசேகரன் பெயருக்கு ஏற்றவாறு, இந்தக் கோயிலில் துவாரபாலகர் காலடியிலும் ஒரு சிற்பம் உள்ளது. அதை இராசராசன் என்கிறார்கள். 2. அந்தச் சிற்பம் இராசராசனுடையது என்பதை எப்படிச் சொல்கிறார்கள்? காலடியில் இருக்கும் … Continue reading

Posted in ஆதித்த கரிகாலன், இராசராசச் சோழன், இராசேந்திரச் சோழன், உடையாளூர், ஊர்கள், கங்கை கொண்ட சோழபுரம், செய்யாறு, தஞ்சை, பஞ்சவன் மாதேவி, பழையாறை, பிரம்மதேசம், மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் குலோத்துங்கச் சோழன், வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 1

இராசராசசோழனின் சமாதி பற்றி வலைத்தளங்களில் பல கருத்துகள் உலவுகின்றன. இராசராசன் சமாதி கேட்பாரற்று கிடப்பதாக பலர் வேதனைப்பட்டு வெதும்பி வருந்தியிருந்தார்கள். இது நீதிமன்றம் வரை சென்று நீதிபதிகளும் ஆய்வு மெற்கொள்ளும்படி தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆய்வும் கூட தொடங்கிவிட்டது. இராசராசன் அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட தகவல்களை இங்கு தெரிவிக்கிறேன். நாளை … Continue reading

Posted in ஆதித்த கரிகாலன், இராசராசச் சோழன், உடையாளூர், ஊர்கள், தஞ்சை, பழையாறை, முதலாம் குலோத்துங்கச் சோழன், ராஜமுந்திரி, வரலாறு | Tagged , , , , , , , , , , | 1 Comment

கப்பலில் யானைப்படை

கப்பலில் யானைகளைக் கொண்டு போவது பற்றி Game of Thronesல் வந்தது நேரக்கோடு வரைக்கும் வந்துவிட்டது. அதுபற்றி என்னுடைய சில கருத்துகள். கப்பலில் யானையை மட்டுமல்ல எந்த விலங்கையும் பறவையையும் கொண்டு போவது எளிதல்ல. கப்பலிலேயே இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பைத்தியம் பிடித்துவிடும். குளிர்ப்பதன வசதியற்ற அந்நாளில் உணவுக்காக கொண்டு செல்லும் விலங்குகளும் பறவைகளும் குறைவாகவே … Continue reading

Posted in இராசராசச் சோழன், இராசேந்திரச் சோழன், வரலாறு | Tagged , , , , , , | 1 Comment

சடங்குகள்

சடங்குகள் என்பவை மனிதர்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பிரிக்க முடியாத பகுதி. பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது, சேய்நெய் வைப்பது, தொட்டில் இடுவது, வசம்பு கட்டுவது என்று தொடங்கி, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சடங்குகள் உண்டு. சடங்குகள் தோன்றத் தொடங்கிய பொழுது மிக எளிமையாகவே இருந்திருக்க வேண்டும். சற்று ஆழந்து நோக்கினால், நீராட்டுவது என்பது … Continue reading

Posted in எண்ணங்கள், சமூகம் | Tagged , | 1 Comment

ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது. கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் … Continue reading

Posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | Leave a comment

04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 Comments

03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது … Continue reading

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 4 Comments

02. 50களில் மெல்லிசை அலையில் படகாக

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். கே.சோமு இயக்கத்தில் 1955ல் வெளிவந்தது டவுன்பஸ் திரைப்படம். இந்தப் படத்தில் அஞ்சலிதேவி பாடுவதாக அமைந்த ஒரு இனிமையான பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியை கே.வி.மகாதேவன் பாட வைத்தார். கா.மு.ஷெரிப் எழுதிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” என்ற பாட்டுதான் அது. ஒருவகையில் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கே.வி.மகாதேவன் இசையில் முதல் பெருவெற்றிப்பாடல். 1950களில் தமிழ்த் … Continue reading

Posted in எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மெல்லிசைமன்னர், Uncategorized | Tagged , , , , , , , , | 4 Comments

01. ஏவிஎம் என்னும் ஏணி

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி ஏப்ரல் 25, 2018 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்து பாடிக் கொண்டிருந்த ஒரு பாடகியின் மறைவுக்கு யாரும் சென்று மரியாதை செய்யாத நிலையில்தான் இன்றைய உலகம் இருக்கிறது. அவரைப் பற்றிய சில தகவல்களோடு அவர் பாடிய சில பாடல்களையும் இந்தப் பதிவின் வழியாக நினைவுகூர விரும்புகிறேன். எம்.எஸ்.ராஜேஸ்வரி … Continue reading

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, திரைப்படம், திரையிசை, பழைய படங்கள் | Tagged , , , , , , | 3 Comments