Category Archives: சிவண்

பாருருவாய பிறப்பு

நல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும். தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன? இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்! … Continue reading

Posted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர் | 9 Comments

தாயா தாரமா…

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்றும் கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான். ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண் | Tagged , | 6 Comments

அண்ணாமல அண்ணாமல

திருவண்ணாமலைக்குப் போகனும்னு ரொம்ப நாளாவே ஒரு விருப்பம். பெங்களூர்ல இருக்கும் போதே நெறைய கன்னட நண்பர்கள் கூப்பிடுவாங்க. நாந்தான் போக முடியாம ஏதோ ஒரு காரணத்துக்காக தட்டிக்கழிச்சிட்டு இருந்தேன். மூணு வாரத்துக்கு முன்னாடி நண்பர் மோகனும் நாகாவும் கூப்பிட்டப்ப கூட போக முடியாத நிலை. மோகன் கூடவே கார்ல போய்ட்டு கார்ல வந்திருக்கலாம். ஆனாலும் முடியாமை. … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், முருகன் | 10 Comments

என் கொங்கை நின் அன்பர்

கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்! வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன? வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண், நகைச்சுவை, விஷ்ணு | 2 Comments

திகிசண்டளா வீணை

இந்தத் தொடரின் முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் வாசிக்கவும். அடுத்த நாள் காலை எழுந்து நாங்கள் சென்ற கோயில் துடையூர் விஷமங்களேசுவரர் கோயில். துடையூர் என்பது திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியிலுள்ள ஒரு சின்ன பட்டிக்காடு. அந்த ஊரில் ஒரு சிவன் கோயில். திருச்சியிலிருந்து செல்லும் போது வழியில் துடையூரைக் கவனிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே மிக … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் | Tagged , , , , , , | 4 Comments

தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். குழந்தைப் பேறு எதிர் நோக்கும் எல்லாப் பெண்களுக்குமே பிடித்த இடம் தாய் வீடுதான். ஒரு தாய் மகளுக்குச் செய்வது மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. பேறுகாலத்தின் தேவைகளும் வேதனைகளும் தாய்க்குத் தெரியும். அதற்கு மகளை மனதளவிலும் உடலளவிலும் தயார் செய்ய தாயார் தான் சரியான ஆள். … Continue reading

Posted in இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், பிள்ளையார் | Tagged , , , , , , , , , , , , | 4 Comments

குட்டிப் பெண்குட்டி அகிலா

முந்தைய பதிவைப் படிக்க இங்கு சுட்டவும். திருவானைக்காவல் கோயில்ல இருந்து வெளிய வர்ரப்போ சிலந்திச் சோழனோட எதிரியைச் சந்திச்சேன்னு சொன்னேன். ஆமா. வெளிய வரும் போது தெப்பக்குளத்துப் பக்கத்துல ஒரு அழகான குட்டியானை. குட்டியானைன்னா ரொம்பக் குட்டி இல்ல. கொஞ்சம் வளந்த குட்டியானை. இந்தக் குட்டியானை வந்து இன்னும் ஓராண்டு கூட ஆகலை. ஆனா அம்சமா … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், முருகன் | Tagged , , , , , , , , , , , , , , , | 12 Comments

சிலந்திக்கும் யானைக்கும் சண்டை

நடுவுல பெங்களூர் போக வேண்டியதாப் போச்சு. அதுனால அடுத்த பதிவுக்குக் கொஞ்சம் இடைவெளி விழுந்துருச்சு. இதோ திருவானைக்காவலுக்குப் போவோம். முந்தைய பதிவுக்கான சுட்டி இங்கே. திருவானைக்காவல் மிகவும் அழகான தமிழ்ப் பெயர். அங்கிருக்கும் கோயிலும் அழகானது. கோயிலில் இருக்கும் அன்னையும் அழகு. அவளது காதணிகளும் மிக அழகு. பெரியது. முருகன் கோயில், அம்மன் கோயில்களை விட … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 15 Comments