Category Archives: கம்பராமாயணம்

ஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்..

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பதுதான் பழமொழி. ஆனால் சென்ற ஞாயிறு (03-ஆகஸ்ட்-2014)ல் வயதொன்று குறையக் கண்டோம். ஆம். சென்னைக் கம்பன் கவிமன்றம் தொடங்கி ஓராண்டுகள் முடிந்தன. 2013ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி தொடங்கிய இந்தத் தமிழ்ப் பயணம் ஓராண்டைக் கடந்துள்ளது. நண்பர் நாகாவுடன் பேசும் போது தோன்றிய சிறு பொறி போன்ற எண்ணம் … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம், தமிழ் | 13 Comments

நட்சத்திரம் என்ன சொல்லுங்க

பொதுவாக பாலகாண்டத்தின் திரு அவதாரப் படலத்தை யாரும் விரிவாக எடுத்துப் பேசுவதில்லை. வால்மிகி ராமாயணத்தை மூலமாகக் கொண்டு எழுதிய கம்பனே வால்மிகி சொன்னதில் நிறைய தகவல்களை நீக்கி விட்டே சொல்கிறாள். குறிப்பாக வால்மிகி விளக்கும் அசுவமேதயாகக் காட்சிகளை தமிழில் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக கம்பர் அந்தத் தகவல்களை மறைத்திருக்கலாம். கம்பராமாயணத்தில் கலைக்கோட்டு முனி … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , | 16 Comments

டாக்டர் சாம்பன், ஃபெவிக்கால் ஸ்பெஷலிஸ்ட்

அனுமாரு எந்த மலையத் தூக்குனாரு? சஞ்சீவி மலையத் தூக்குனாரு. சரி. தூக்குனாரு. எதுக்குத் தூக்குனாரு. அதுல இருக்கும் மூலிகையால இறந்து போன ராமலக்குவனர்களையும் குரங்குகளையும் காப்பாத்தத் தூக்குனாரு. நம்மள்ள பெரும்பாலனவங்களுக்குச் சஞ்சீவி மலையத்தான் அனுமாரு தூக்குனாருன்னு தெரியும். ஆனா கம்பரு தன்னோட ராமாயணத்துல வேறொரு பேரைப் போட்டுச் சொல்றாரு. அதென்ன பேரு? அந்தப் பேருதான் மருந்துமலை. … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , | 3 Comments

பார்த்தால் உயிர் போகும்

பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ஞாயிறு வந்தா வர்ர வாரமலரைப் புரட்டுறது ஒரு வழக்கம். அப்படிப் புரட்டுறப்போ கண்ணில் பட்டதுதான் திட்டிவிடம். திட்டிவிடம் என்றால் என்ன? நல்ல கேள்விங்குறீங்களா? 🙂 திட்டிவிடம் ஒரு வகையான பாம்பு. பொதுவா பாம்புக்குப் பல்லுலதான் விஷம். கடிச்சாதான் உயிர் போகும். ஆனா திட்டிவிடத்துக்குக் கண்ணுலயே விஷம். கடிக்க வேண்டாம். பாத்தாலே போதும், உயிர் … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம், மணிமேகலை | Tagged , , , , , , , , , | 9 Comments

தாவியது நடந்தான் கடந்தான்

நல்ல உரையாடல் என்பது மிக்சர் சாப்பிடுவது போல. சுவையான காராபூந்திகளுக்கும் ஓமப்பொடிகளுக்கும் நடுவில் முந்திரிப்பருப்புகளும் சுவையூட்டும். நண்பர் நாகாவோடு உரையோடும் போது அகப்பட்ட முந்திரிப்பருப்புதான் இந்தப் பதிவு. கும்பகருணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சற்றே விலகி ஒரு கேள்வியைக் கேட்டார் நண்பர் நாகா. அனுமன் ஒரு படலம் முழுக்கக் கஷ்டப்பட்டுக் கடலைத் தாண்டறார், ஆனா திரும்பி … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , , , , , , , , , , | 18 Comments