Category Archives: சிலப்பதிகாரம்

கள் குடிக்கலாம் வாங்க – 2

போன பதிவுல கள் விகுதி பத்திய தொல்காப்பிய இலக்கணத்தை முதல் பாடமாப் பாத்தோம். 1. கள் விகுதி அஃறிணைப் பெயர்களுக்கு மட்டுமே பன்மையைக் குறிக்கக் கூடியது. 2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொருத்து அது பன்மையைக் குறிக்கலாம். நல்லது. இந்த இலக்கணத்தை எப்படியெல்லாம் இலக்கியங்கள்ள பயன்படுத்தியிருக்காங்கன்னு எடுத்துக்காட்டுகள் பாக்கலாமா… மொதல்ல குறுந்தொகை. நள்ளென்றன்றே … Continue reading

Posted in இலக்கணம், குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு | Tagged , , , , , , , , | 6 Comments

பாபநாசத்துக்குத் தமிழ்ல என்ன?

பாபநாசம் படம் வந்தாலும் வந்தது….. இந்தக் கேள்வியும் நண்பர் விஜய் வழியா டிவிட்டர்ல வந்தது. பாபநாசம் தமிழ்ப் பேரா? சின்னவயசுல பலமுறை போன ஊர் தான். அப்பல்லாம் பாவநாசம்னுதான் சொல்லி வழக்கம். இப்பல்லாம் தமிழ் பாலிஷ்டு ஆயிருச்சு. சரி. கதைக்கு வருவோம். பாபநாசம் தமிழா? அது பெயர்ச்சொல், அதுனால தமிழ்னு எடுத்துக்கலாம்னு ஒரு கருத்து. ஏத்துக்கலாம். … Continue reading

Posted in இலக்கியம், சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை | Tagged , , , , | 14 Comments

காவிரியா காவேரியா

காவிரி ஆற்றில் தண்ணீர் வருமா வராதா என்பதை விட இலக்கியவாதிகளுக்குப் பெரிய பிரச்சனை எதுவென்றால் காவிரியின் பெயர் பிரச்சனை தான். காகம் விரித்ததால் உண்டான ஆறு. அதனால் அதற்கு காவிரி என்று தான் பெயர் என்று ஒரு கூட்டம். காவேரிதான் உண்மையான பெயராக இருக்க வேண்டும். காகம் விரிக்கும் காவிரி என்னும் விளக்கம் மதவாதிகள் புகுத்தியது. … Continue reading

Posted in இலக்கியம், சிலப்பதிகாரம், தமிழ் | Tagged , , , | 6 Comments

உடைந்தது எத்தனை சிலம்புகள்?

சிலப்பதிகாரத்துல கண்ணகி வழக்குரைக்கும் காதையில் உடைந்தது எத்தனை சிலம்பு? இந்தக் கேள்வியக் கேக்கும் போது நமக்கு ரொம்ப லேசாயிருக்குற மாதிரிதான் இருக்கும். ஆனா என்னை ரொம்பவே குழப்பிய கேள்வி. ஒரு உரையில்லை. ரெண்டு உரையில்லை. நாலு உரைகளை ஆராய்ஞ்சு பாத்துட்டேன். ஆனா உறுதியா இதுன்னு எந்த உரையாசிரியரும் குறிப்பிடவே இல்லை. சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவைன்னும் ஒரு நூல். … Continue reading

Posted in இலக்கியம், சிலப்பதிகாரம், தமிழ் | Tagged , , , , , , , , , , , | 21 Comments