Category Archives: திருப்புகழ்

அதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்

உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் பொதுவானது ரெண்டு இருக்கு. இந்த ரெண்டும் இல்லைன்னு யாராவது சொன்னா அது பொய். 1. இடர் (துன்பம்) 2. ஐயம் (சந்தேகம்) கோடிக்கோடியா கொட்டி வைக்க இடமில்லாம இருப்பான். அவனுக்கும் எதாவது இடர் இருக்கும். சங்ககாலத்தில் கொற்கையிலிருந்த புரவிகளுக்கு ஒரு இடர் இருந்ததாம். முத்துக் குளிக்கும் கொற்கை செல்வச் செழிப்பான ஊர். … Continue reading

Posted in அகநானூறு, அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கொற்கை, தமிழ்ப் பெரியோர், திருப்புகழ், பக்தி, முருகன் | Tagged , , , , , , , | Leave a comment

ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது. கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் … Continue reading

Posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | Leave a comment

உம்பர் தருத் தேனு மணி

ஒரு நண்பர் புது முயற்சி தொடங்கப்போறதாச் சொன்னாரு. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்தைச் சொன்னேன். எந்தவொரு புதுமுயற்சியிலும் போடுகின்ற உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கனும். அப்பதான் மேல மேல உழைச்சு முன்னேறும் வேகம் வரும். அந்த வெற்றி எப்படி வரனும் தெரியுமா? தேவலோகத்துல அஞ்சு வகையான மரங்கள் இருக்கு. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வேலை. அதுல ஒன்னு … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், பிள்ளையார் | Tagged , , , , , , | 6 Comments

வசனம் மிகவேற்றி

இன்னைக்கு பழனி திருப்புகழ் பாக்கப் போறோம். சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் கோயில் பழனி முருகனுக்கு இந்தத் திருப்புகழ் கல்வெட்டப்பட்டிருக்கு. அதைப் பாத்ததும் இந்தத் திருப்புகழுக்கு விளக்கம் எழுதலாம்னு முடிவு பண்ணேன். ரொம்பவே சின்னப் பாட்டுதான். நாலே வரிகள். வசனமிக வேற்றி மறவாதே மனதுதுய ராற்றி யுழலாதே இசைபயில் சடாட்சர மதனாலே இகபரசௌ பாக்ய … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | 8 Comments

இருமலு ரோக முயகலன் – திருப்புகழ்

எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்குற மாதிரிதான் இருக்கும். திடீர்னு ஒரு பல்வலி வந்து எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுரும். பல் வலிக்கிறதால ஒழுங்காச் சாப்பிட முடியாது. ஒழுங்காச் சாப்பிடாததால அடிக்கடி வயிறு குர்குர்ருன்னு பசியை ஞாபகப்படுத்திக்கிட்டேயிருக்கும். சரியாப் பேசவும் முடியாது. நாம ஒன்னு சொன்னா அடுத்தவங்க ஒன்னு புரிஞ்சிக்குவாங்க. ஜெல் வேணும்னு கேட்டா ஜொள்ளான்னு கேப்பாங்க. அப்பப்பா.. … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , | 6 Comments

சரண கமலாலயத்தை – திருப்புகழ்

நம்ம கிட்ட என்னென்ன இருக்குன்னு பட்டியல் போடச் சொன்னா ரொம்பக் கஷ்டம். ஆனா நம்ம கிட்ட என்னென்ன இல்லைன்னு பட்டியல் போட்டுப் பாருங்க. மடமடன்னு பெரிய பட்டியல் போடுவீங்க. இல்லை இல்லைன்னு எப்பவும் கதறிக்கிட்டிருக்கோம். எதுவுமே இல்லாம இருக்குறதுப் பேர் வறுமையில்ல. அது இல்லை இது இல்லைன்னு இல்லாததை நினைச்சிக்கிட்டே இருக்குறதுக்குப் பேர்தான் வறுமை. வறுமைன்னா … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , | 4 Comments

நிறைமதி முகம்

பொதுவா அருணகிரிநாதர் திருப்புகழ்ல விலைமாதர்களைத் தாழ்த்திச் சொல்லியிருப்பாருன்னு ஒரு கருத்து உண்டு. ஒருவகைல அது உண்மைதான்னாலும், அது விலைமாதர்கள் மேல ஆசை உண்டாகாம இருக்கனும்னு வேண்டிக்கிறதாத்தான் இருக்கும். அவர் பட்டுத் தெளிஞ்சவர். அதுனால அதை வெளிப்படையாச் சொல்ல முடிஞ்சது. இப்போ பாக்கப் போற திருப்புகழிலும் அந்தக் கருத்து வருது. இது சின்ன திருப்புகழ்தான். சுவாமிமலை திருப்புகழ். … Continue reading

Posted in இறை, தமிழ், திருப்புகழ், பக்தி, முருகன் | Tagged , , , , , , , , , | 4 Comments

அல்லில் நேரும் மின்

Vampire Chronicles என்று Anne Rice எழுதிய ஆங்கிலத் தொடர் நாவல்கள் உண்டு. அதெல்லாம் ஒரு காலத்துல விழுந்து விழுந்து படிச்சிருக்கேன். அதுல வேம்பயர் கிட்ட மனிதன் ஒருத்தன் மாட்டிக்கிறான். அவனால தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு அந்த வேம்பயர் சொல்லும்,“Humans are so fragile. That is what I like about them.” … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , | 9 Comments

மாலாசை கோபம் ஓயாதென்னாளும்

கடவுள் யாருக்குச் சொந்தம்? குளிச்சு முடிச்சு தூய்மையா பக்தி நூல்களை ஓதுறவங்களுக்கா? அப்படி பக்தி நூல்களை ஓதாட்டி கடவுள் அருள மாட்டாரா? தண்டிச்சிருவாரா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலான மதநம்பிக்கையாளர்களோட விடை ஆமாம்னுதான் இருக்கும். அந்தந்த மதநூல்களை ஓதினாதான் கடவுள் நம்ம மேல கருணை காட்டுவார் என்பது பெரும்பாலானவர்களோட நம்பிக்கை. இந்த நூல்களையெல்லாம் கத்துக்கிறது நல்லதுதான்னே வெச்சுக்குவோம். … Continue reading

Posted in இறை, தமிழ், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , | 13 Comments

அணிபட்டு அணுகி – பழனி திருப்புகழ்

வணக்கம் நண்பர்களே! இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நண்பர் ரவிக்குமார் கேட்டுக்கிட்டதால இன்னொரு திருப்புகழுக்கு விளக்கம் எழுதுறேன். வழக்கம் போல எளிய நேரடியான விளக்கந்தான். தூண்டி விட்ட நண்பருக்கு நன்றி. குற்றங்குறை இருந்தா முருகனே பொறுப்பு. அணிபட்டு அணுகின்னு தொடங்குற திருப்புகழ் பழனிக்கான திருப்புகழ். நம்ம செய்ற எதாவது குற்றத்துல இருந்து … Continue reading

Posted in இறை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , | 8 Comments