Category Archives: கதை

புளியுருண்டை மலையும் சித்தரும்

புளியுருண்டைமலைன்னு ஒரு மலை இருக்கு. எங்க இருக்கு? இங்கதான். எங்க ஊர் பக்கத்துல. என்னது? எங்க ஊர் எதுவா? அதெதுக்கு இப்போ தேவையில்லாம. கேள்வி கேக்காம சொல்றதக் கேளுங்க. கொழம்புக்குக் கரைச்சு விடுறதுக்கு உருண்டை பிடிச்சு எடுத்து வெச்ச புளி மாதிரி இருக்குறதால அந்த மலைக்கு புளியுருண்டைமலைன்னு பேரு. அந்த மலை மேல ஒரு கோயில் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை, பொது | Tagged , , , , , , , | 2 Comments

வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்

வேத ஜோதிட பூஷணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள் சுதா. “இதான் மீனா சொன்ன ஜோசியர் வீடு.” சுதா சொன்னது ரமணன் காதில் விழுந்தது. கீழ்ப்பாகத்தில் இருக்கும் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாம் மாடியிலிருந்த மூன்றாவது வீட்டின் முன்னால் நான்கு மணிக்கு மேல் சுதா அந்தப் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை | 4 Comments

அமலன்

ஆழ்ந்த தூக்கம். அசையாத உடம்பு. சீரான மூச்சு. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த அமல்ராஜ் தனது மூளையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்தான். அவன் உடம்பு சூடான உப்புக் கண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ”ஆண்டவரே! நான் உம்மை வேண்டிக் கூப்பிடுவது உமக்குக் கேட்கிறதா? எனக்காக ஒருமுறை என்னிடம் வர மாட்டீரா?” மார்பு வரை நிரம்பிய கண்ணீர் நெஞ்சைக் கரித்துக் கொண்டு கொஞ்சம் … Continue reading

Posted in கதை, சிறுகதை | 8 Comments

செந்தில்நாதனும் மாடித்தோட்டமும்

சென்னையில் வெள்ளம் வந்து வடிந்து அதையெல்லாம் மறந்த பிறகு செந்தில்நாதனின் வீட்டில் ஒரு நாள் காலை. “என்னங்க இன்னைக்குப் பேப்பர்ல ஒரு முக்கியமான நியூஸ் வந்திருக்கு. பாத்தீங்களா?” திமுக-தேமுதிக-பாஜக கூட்டணிச் செய்தியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான். வந்தாளே மகராசி கண்ணில் அப்பார்ட்மெண்ட் அரசியல் தவிர வேறெந்த அரசியல் செய்தியும் தென்படாதே என்றொரு ஐயம். இந்த மாதிரியான … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் | Tagged | 4 Comments

பஞ்சா (அ) உரிமைக்குரல் (அ) நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு

ஓ……..சே ஓ……..சே பஞ்சாவின் சீரான ஓசைக்குத் தக்க உலக்கை உரலோடு பேசிக்கொண்டிருந்தது. ஓ….வில் நங்கென்று உரலில் குத்தும் உலக்கை சே..யில் உரலிலிருந்து எம்பி பஞ்சாவின் தலைக்கு மேல் எழும்பி அந்தரத்திலேயே கைமாறியது. பழக்கமானவர்கள் இரண்டு கைகளால் உலக்கை குத்துவதில்லை. கைமாற்றி மாற்றித்தான் குத்துவார்கள். இறக்கையில்லா உலக்கை பஞ்சாவின் கைக்குக் கை பறந்தது. பஞ்சா ஒரு பட்டிக்காட்டுப் … Continue reading

Posted in கதை | 8 Comments

சங்கம் சரணம் கச்சாமி

ஏழாவது நாளாக எரிகின்றது பெரு நெருப்பு. மக்கள் கொண்டு வந்து கொடுக்கும் காய்ந்த விறகுகளை வாங்கி நெருப்பில் போட்டுப் போட்டு தோள்கள் தவங்கினர் சேவகர். தீயின் மூட்டத்தில் மெய் புழுங்க சாம்பலின் தூசியில் கண்கள் காந்த, “போதும். போதும். இனி யாரும் விறகுகளைக் கொண்டு வராதீர்கள்” என்று சேவகர்களின் உள்ளம் கதறும் ஓலம் ஒருவனுடைய காதுகளில் … Continue reading

Posted in கதை | Tagged , , , | 12 Comments

செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும். மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். … Continue reading

Posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged | 2 Comments

தாயா தாரமா…

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்றும் கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான். ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண் | Tagged , | 6 Comments

தருமனும் தருமமும் – பாகம் 5

இதன் நான்காம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன். தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , , , , , , | 2 Comments

தருமனும் தருமமும் – பாகம் 4

இதன் மூன்றாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. நகுலனும் சகாதேவனும் எங்கிருக்கிறார்கள் என்று தருமனிடம் சொன்னார் குந்தி. “நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்” குந்தியை இடைமறித்தார் திருதிராட்டிரர். “குந்தி, முதலில் தருமன் … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , , , , | 5 Comments