Category Archives: செந்தில்நாதன் கதைகள்

செந்தில்நாதனும் மாடித்தோட்டமும்

சென்னையில் வெள்ளம் வந்து வடிந்து அதையெல்லாம் மறந்த பிறகு செந்தில்நாதனின் வீட்டில் ஒரு நாள் காலை. “என்னங்க இன்னைக்குப் பேப்பர்ல ஒரு முக்கியமான நியூஸ் வந்திருக்கு. பாத்தீங்களா?” திமுக-தேமுதிக-பாஜக கூட்டணிச் செய்தியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான். வந்தாளே மகராசி கண்ணில் அப்பார்ட்மெண்ட் அரசியல் தவிர வேறெந்த அரசியல் செய்தியும் தென்படாதே என்றொரு ஐயம். இந்த மாதிரியான … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் | Tagged | 4 Comments

செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும். மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். … Continue reading

Posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged | 2 Comments

செந்தில்நாதனும் கார்காலமும்

ஒரு குடும்பத் தலைவனின் விடியல் நல்ல விடியலா என்பது காப்பி டம்ளரிலேயே தெரிந்து விடும். வழக்கதை விட காப்பி நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் கணவர்களுக்கு அது எச்சரிக்கை மணி. அப்படியொரு எச்சரிக்கை மணிதான் செந்தில்நாதன் மண்டைக்குள் அடித்தது. காப்பியைக் குடுத்து விட்டு வழக்கமாக நகர்ந்து விடும் வந்தாளே மகராசி இன்று அருகிலேயே நின்றது அவன் … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged , , | 17 Comments

செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும்

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். தமிழ்நாட்டில் இருக்கும் திருமணமான ஒன்றரைக் கோடி ஆண்களின் அப்பாவிப் பிரதிநிதி அவன். குடியிருந்த கோயிலுக்கும் அவனைத் திருமணம் செய்து கொண்டு வந்தாளே மகராசிக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆணடிமைவாதி. பாவம். அந்த செந்தில்நாதனுக்கும் டீவி விளம்பரத்தில் தோன்றும் இளைஞர்களுக்கும் வரும் பிரச்சனை வந்தது. அவனுக்குப் பொருத்தமாக இருக்கும் … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged , , , , , | 33 Comments

செந்தில்நாதன் – 2 – தமிழ்க்கொழம்பு

போன வாரம் செந்தில்நாதனாகிய அடியேன் ஒரு நண்பரோடு வெட்டிப் பேச்சு பேச வேண்டியிருந்தது. பக்கத்துஅப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்தார். அவன் இவன் என்றே பேசிப் பழக்கம். பொழுது போகவில்லையென்றால் எதையாவது பேசுவது எங்கள் வழக்கம். செவிக்கு உணவோடு இடையிடையே எதையாவது அரைப்பதும் எங்கள் வழக்கம். இரண்டு வீடுகளிலிருந்தும் தொல்லை விட்டதென்று எதையாவது கொண்டு வைத்து விடுவார்கள். அரை மணி … Continue reading

Posted in இலக்கியம், கதை, குறுந்தொகை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் | 6 Comments

செந்தில்நாதன் – 1 – Working From Home

யார் இந்தச் செந்தில்நாதன்னு நீங்க கேக்குறது எனக்கு நல்லாப் புரியுது. நீங்க கண்டிப்பாத் தெரிஞ்சிக்கனும். அவனோட அனுபவங்கள இனிமே அப்பப்போ கேக்கப் போறீங்களே. அவன்னு சொன்னதும் சின்னப்பையன்னு தப்பா முடிவு பண்ணீறாதீங்க. காலாகாலத்துல எல்லாம் நடந்து ரெண்டு பிள்ளைகளுக்கும் அப்பா. நான் படைப்பாளியாச்சா, அதுனால அவன் இவன்னு கூப்டலாம். ஆனா நீங்க அவர்ர்ர்ர்ர்னு மரியாதையாக் கூப்புடனும். … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் | Tagged , , , , , | 13 Comments