Category Archives: தமிழ்

ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது. கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் … Continue reading

Posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | Leave a comment

நோதலால் காதல் செய்தார்

மு.கு : இது சும்மா பொழுதுபோக எழுதியது. இதில் உப்பு உறைப்பு குறைவாகவோ கூடவோ இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது. 🙂 கல்லில் உரசிய பசுமஞ்சளை அலையடிக்கும் குளத்து நீர் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. “அடி அமுதா, உரசிய மஞ்சளை உடம்பில் பூசிக்கொள்ளாமல் அப்படி என்ன யோசனை?” தானுரசிய மஞ்சளை வானுரசும் நிலவைப் போல பூசிக் கொண்டே … Continue reading

Posted in அண்ணாமலை ரெட்டியார், இறை, இலக்கியம், காவடிச்சிந்து, தமிழ், முருகன் | Tagged , , , , , , , , , , , | 2 Comments

நிறைமதி முகம்

பொதுவா அருணகிரிநாதர் திருப்புகழ்ல விலைமாதர்களைத் தாழ்த்திச் சொல்லியிருப்பாருன்னு ஒரு கருத்து உண்டு. ஒருவகைல அது உண்மைதான்னாலும், அது விலைமாதர்கள் மேல ஆசை உண்டாகாம இருக்கனும்னு வேண்டிக்கிறதாத்தான் இருக்கும். அவர் பட்டுத் தெளிஞ்சவர். அதுனால அதை வெளிப்படையாச் சொல்ல முடிஞ்சது. இப்போ பாக்கப் போற திருப்புகழிலும் அந்தக் கருத்து வருது. இது சின்ன திருப்புகழ்தான். சுவாமிமலை திருப்புகழ். … Continue reading

Posted in இறை, தமிழ், திருப்புகழ், பக்தி, முருகன் | Tagged , , , , , , , , , | 4 Comments

மாலாசை கோபம் ஓயாதென்னாளும்

கடவுள் யாருக்குச் சொந்தம்? குளிச்சு முடிச்சு தூய்மையா பக்தி நூல்களை ஓதுறவங்களுக்கா? அப்படி பக்தி நூல்களை ஓதாட்டி கடவுள் அருள மாட்டாரா? தண்டிச்சிருவாரா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலான மதநம்பிக்கையாளர்களோட விடை ஆமாம்னுதான் இருக்கும். அந்தந்த மதநூல்களை ஓதினாதான் கடவுள் நம்ம மேல கருணை காட்டுவார் என்பது பெரும்பாலானவர்களோட நம்பிக்கை. இந்த நூல்களையெல்லாம் கத்துக்கிறது நல்லதுதான்னே வெச்சுக்குவோம். … Continue reading

Posted in இறை, தமிழ், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , | 13 Comments

ஏறுமுத்தமிழ் ஞானவித்தக..

வழக்கமாக எழுதும் நகைச்சுவை, இலக்கியம், விமர்சனங்களிலிருந்து மாறுதலுக்கு ஒரு பக்திப் பதிவு. ”எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நெஞ்சத்தில் ஆடவில்லையே முருகா! நெஞ்சத்தில் ஆடவில்லையே” என்று டி.எம்.சௌந்தரராஜன் பாடியது ஒருவகையில் எனக்கும் பொருந்தும்தான். அப்படியிருக்கும் போது ஒரு அழகான வெண்பாவை முருகன் மீது எழுதிக் கொடுத்தால் நான் ரசிக்காமல் என்னதான் செய்ய முடியும்? வெண்பா விளையாடும் … Continue reading

Posted in இறை, தமிழ், பக்தி, முருகன் | Tagged , | 6 Comments

ஆண்டொன்று போனால்.. வயதொன்று குறையும்..

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பதுதான் பழமொழி. ஆனால் சென்ற ஞாயிறு (03-ஆகஸ்ட்-2014)ல் வயதொன்று குறையக் கண்டோம். ஆம். சென்னைக் கம்பன் கவிமன்றம் தொடங்கி ஓராண்டுகள் முடிந்தன. 2013ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி தொடங்கிய இந்தத் தமிழ்ப் பயணம் ஓராண்டைக் கடந்துள்ளது. நண்பர் நாகாவுடன் பேசும் போது தோன்றிய சிறு பொறி போன்ற எண்ணம் … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம், தமிழ் | 13 Comments

நாலு வரியிலிருந்து மூன்று புத்தகங்களுக்கு…

”என்ன சொல்றீங்க?” என்று நாகா கேட்ட போது சரி நான் சொன்ன போது தொடங்கிய பயணம் மோகனையும் கூட்டிக் கொண்டு இன்று மூன்று புத்தகங்களாக மாறியுள்ளது. சினிமாப் பாட்டுகளை வைத்து ஒரு 365 புராஜெக்ட்டா? அதுவும் இசையமைப்பாளரைப் பற்றிப் பேசாமல்… பாடகரைப் பற்றிப் பேசாமல்..வரிகளையும் கவிஞர்களையும் மட்டும் முன்னிறுத்தியா? தொடக்கத்தில் இருந்த தயக்கம் முழுமையாக மறைந்து … Continue reading

Posted in தமிழ், புத்தகங்கள் | 7 Comments

கற்பதிக்கு நற்பதியின் – விளக்கம்

தினமும் காலையில் வணக்கம் சொல்லும் போது எதையாவது எழுதிச் சேர்ப்பது வழக்கம். அம்மன் தொடர்பாக எதுவும் எழுதவில்லையே என்று தோன்றி எழுதியதுதான் கீழே உள்ள கவிதை. சரி. சரி. செய்யுள் மாதிரியான கவிதை. கற்பதிக்கு நற்பதியின் பொற்பதிக்கு மாமகள் கற்பதிக்கும் நிற்பதிக்கு வெற்பதனில் மணமகள் இற்பதிக்கு சொற்பனையில் சொற்பதிக்கும் மலைமகள் இதில் எதுகை, மோனை, அசை, … Continue reading

Posted in அம்மன், இறை, தமிழ் | 2 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு செயல்கள் தேவை. ஒன்று விளம்பரம். மற்றொன்று விநியோகம். கந்த சஷ்டிக் கவசத்துக்கான விளம்பரத்தை தேவராயசுவாமிகள் செய்தார். விநியோகத்தை இறைவன் செய்தான். விளம்பரத்தின் மூலம் ஒரு பொருளைப் பிரபலப்படுத்தலாம். ஆனால் அது தொடர்ந்து மக்களின் மனதில் இருப்பதற்கு தரம் ஒன்று மட்டுமே … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , , , | 18 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3

இந்தப் பதிவின் முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் உள்ளது. திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்திலொரு கடற்கரை ஊர். தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது திருச்செந்தூர். “சீர்கெழு செந்திலும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீரலைவாய் என்று தொல்காப்பியம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. ஊர்களில் செம்மையான ஊர் செந்தூர். அந்தச் செந்தூரிலே செம்மையான இல்லம் … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , | 12 Comments