Category Archives: திரைப்படம்

03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது … Continue reading

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 4 Comments

02. 50களில் மெல்லிசை அலையில் படகாக

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். கே.சோமு இயக்கத்தில் 1955ல் வெளிவந்தது டவுன்பஸ் திரைப்படம். இந்தப் படத்தில் அஞ்சலிதேவி பாடுவதாக அமைந்த ஒரு இனிமையான பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியை கே.வி.மகாதேவன் பாட வைத்தார். கா.மு.ஷெரிப் எழுதிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” என்ற பாட்டுதான் அது. ஒருவகையில் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கே.வி.மகாதேவன் இசையில் முதல் பெருவெற்றிப்பாடல். 1950களில் தமிழ்த் … Continue reading

Posted in எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மெல்லிசைமன்னர், Uncategorized | Tagged , , , , , , , , | 4 Comments

01. ஏவிஎம் என்னும் ஏணி

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி ஏப்ரல் 25, 2018 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்து பாடிக் கொண்டிருந்த ஒரு பாடகியின் மறைவுக்கு யாரும் சென்று மரியாதை செய்யாத நிலையில்தான் இன்றைய உலகம் இருக்கிறது. அவரைப் பற்றிய சில தகவல்களோடு அவர் பாடிய சில பாடல்களையும் இந்தப் பதிவின் வழியாக நினைவுகூர விரும்புகிறேன். எம்.எஸ்.ராஜேஸ்வரி … Continue reading

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, திரைப்படம், திரையிசை, பழைய படங்கள் | Tagged , , , , , , | 3 Comments

கொறிக்க கொஞ்சம் கொரியா

உள்ளூர்ல உழுந்தவடை திங்காதவன் வெளிநாட்டுல வெண்பொங்கல் வாங்கித் தின்ன கதைதான் இப்போ நான் சொல்லப் போறது. டிவிட்டர் மக்கள் அப்பப்ப கொரியப் படம் கொரியப் படம்னு மயிர்க்கூச்செரிஞ்சு பேசுனப்போ, அதுல என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ஒரு யோசனை வந்ததென்னவோ உண்மைதான். ஆனா நேரம்னு ஒன்னு வரனும் பாருங்க. டிவிட்டர்ல இருந்த கொரிய சிலாகிப்புகளுக்கு நடுவுல புரிஞ்ச … Continue reading

Posted in கொரிய திரைப்படங்கள், திரைப்படம், Uncategorized | Tagged , , | 6 Comments

கேபியும் மூன்று பெண்களும்

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவின் போது தமிழ் மின்னஞ்சலுக்காக எழுதியது. கேபியும் மூன்று பெண்களும் கதவு தட்டும் ஓசை கவிதாவின் ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்கத்தைக் கெடுத்தது. அன்று மட்டும்தான் அவள் பகலில் தூங்க முடியும். எரிச்சலோடு அம்மாவைக் கூப்பிடும் முன் அம்மாவே அறைக்குள் வந்தாள். “கவிதா, சிந்து வந்திருக்காங்க. ஒன்னப் பாக்கனுமாம். உள்ள அனுப்பட்டுமா?” … Continue reading

Posted in கே.பாலச்சந்தர், திரைப்படம் | Tagged , , , , , , , , , | 2 Comments

சூரியகாந்தி

ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான். பிடித்த படம் தான். புத்தம் புதிய பிரிண்ட் என்ற விளம்பரத்தோடு திரையரங்கில் பார்க்கக் கிடைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? திரையரங்கில் மொத்தம் ஆறே பேர்தான். படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்… இணையத்தில் இதை விட அருமையான பிரிண்ட்டில் படம் கிடைக்கிறது. அதை விட மோசமான பிரிண்ட்டை திரையரங்கத்தில் வெளியிடுவதற்கு … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், ஜெயலலிதா, டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், பழைய படங்கள், மெல்லிசைமன்னர், விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

பைலட் பிரேம்நாத்

இது ஒரு இந்தியா-ஸ்ரீலங்கா கூட்டுத் தயாரிப்பு என்ற விளம்பரத்தோடு 1978ல் வெளிவந்த வெற்றிப்படம் பைலட் பிரேம்நாத். இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், முள்ளும் மலரும் என்று தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை பதினாறடி பாய்ந்து கொண்டிருந்த போது நடிகர் திலகம் நடித்து மெல்லிசை மன்னர் இசையில் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் … Continue reading

Posted in திரைப்படம், பழைய படங்கள், விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 Comments

இறைவி இறைவியா?

ஒரு படம் பாத்த பிறகு அந்தப் படம் ஏன் தோத்ததுன்னு பட்டியல் போடுறது லேசு. ஆனா படத்தோட கருவை உருவாக்கி படத்தை முழுமையாக்கும் வரைக்கும் ஒரு இயக்குநருக்கு பிரசவ வேதனைதான். அதுனாலதான் இறைவி படத்துல என்னென்ன குறைகள்னு நான் இந்தப் பதிவில் பட்டியல் போடப் போறதில்லை. ஆனா டிவிட்டர்ல இறைவி படம் பத்தி நண்பர் சுதர்ஷன் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

ரஜினி முருகன் – விமர்சனம்

தைப்பூசத்தன்னைக்கு முருகன் கோயிலுக்குப் போகாம ரஜினிமுருகன் படம் பாக்கப் போனதுக்காக இதுவரைக்கும் முருகன் கோவிச்சுக்கிட்டு வேலால குத்தல. அந்த தைரியத்துல படத்துக்கு விமர்சனமும் எழுதியாச்சு. குடும்பப் பாசம் என்னும் வாணலியை  அடுப்பில் வைத்து நகைச்சுவை எண்ணெய்யை நிறைய ஊற்றி காதல் கத்திரிக்காயை அதில் நறுக்கிப் போட்டு வில்லன் என்னும் மசாலப் பொடி போட்டு அளவாக அழுகை … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , | 1 Comment

பிரேமம் – என் பார்வை

பிரேமம் – மலையாளப் படத்தோட கதை என்ன? ஆட்டோகிராப் படத்தச் சின்னச் சின்ன மாற்றங்களோட மலையாளத்துல எடுத்தா அதுதான் பிரேமம் படத்தோட கதை. ஆஆஆ… அப்புறம் ஏன் எல்லாரும் அவ்வளவு பாராட்டுறாங்கன்னு கேக்குறீங்களா? வரிசையாச் சொல்றேன் கேட்டுக்கோங்க. படம் தொடங்கும் போதே பளிச்சுன்னு ஈர்க்குது கேமரா. கேரளாவோட பசுமை. படத்துல குளோசப் ஷாட்கள். கண்ணையே பிரிஜ்ஜுல … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 5 Comments