Category Archives: நகைச்சுவை

சளிப்பெயர்ச்சி பலன்கள்

கலி கலி என்று கிலியோடு சொல்லப்படுகின்ற இந்தக் கேடுகெட்ட கலிகாலத்திலே, பகவான் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி நமக்கெல்லாம் பொழுது போக்காக இருந்திருக்கிறார். அப்படியான லீலைகளில் அனைவரிடத்திலும் ஈச்வரன் விளையாடிய விளையாடிக் கொண்டிருக்கும் இன்னும் விளையாடப் போகும் ஒரு திருவிளையாடலைத்தான் இன்று உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறேன். க்ருஹங்களிலே எப்படி ஈச்வர பட்டம் பெற்றவராக சனீச்வர பகவான் இருக்கிறாரோ, … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged | 7 Comments

புளியுருண்டை மலையும் சித்தரும்

புளியுருண்டைமலைன்னு ஒரு மலை இருக்கு. எங்க இருக்கு? இங்கதான். எங்க ஊர் பக்கத்துல. என்னது? எங்க ஊர் எதுவா? அதெதுக்கு இப்போ தேவையில்லாம. கேள்வி கேக்காம சொல்றதக் கேளுங்க. கொழம்புக்குக் கரைச்சு விடுறதுக்கு உருண்டை பிடிச்சு எடுத்து வெச்ச புளி மாதிரி இருக்குறதால அந்த மலைக்கு புளியுருண்டைமலைன்னு பேரு. அந்த மலை மேல ஒரு கோயில் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை, பொது | Tagged , , , , , , , | 2 Comments

கலகல லகலக கல்யாணம்

முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிட்ட நிகழ்வுகளும் மனிதர்களும் உண்மையாகவோ அல்லது விற்பனைக்கு வந்த வீட்டு மனை போல உண்மைக்கு மிக அருகிலோ அல்லது தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோ போல முழுக்கவே பொய்யாகவோ இருந்தால் அதற்கு இந்தக் கட்டுரையும் அதை எழுதியவரும் எழுதியதைப் படித்தவரும் படிக்கச் சொல்லிக் கேட்டவரும் பொறுப்பாகமாட்டார்கள். கட்டுரையைப் படிப்பதனால் வரும் … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , | 20 Comments

வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்

வேத ஜோதிட பூஷணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள் சுதா. “இதான் மீனா சொன்ன ஜோசியர் வீடு.” சுதா சொன்னது ரமணன் காதில் விழுந்தது. கீழ்ப்பாகத்தில் இருக்கும் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாம் மாடியிலிருந்த மூன்றாவது வீட்டின் முன்னால் நான்கு மணிக்கு மேல் சுதா அந்தப் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை | 4 Comments

ஆஸ்பித்திரி வத்தல்

ஒரு ஆஸ்பித்திரியில் கம்பவுண்டர் வத்தல் வடகம் விக்கிறதா எழுத்தாளர் பாரா சொல்லியிருந்தாரு. ஸ்பெஷல் தரிசனத்துல டாக்டரைப் பாக்குறதுக்கு டோக்கன் குடுக்குறதோட ஒரு கம்பவுண்டரோட வேலை முடிஞ்சிருச்சா என்ன! இருக்குற வேலைய விட்டுட்டு நோயாளிகளை அக்கறையோட கூட்டீட்டு வரும் மக்களுக்கு எதாச்சும் பொழுது போக வேண்டாமா? எல்லா ஆஸ்பித்திரிலயும் இப்ப டிவி போட்டு விட்டுர்ராங்க. ஆனா பாருங்க.. … Continue reading

Posted in சமையல், நகைச்சுவை | Tagged | 3 Comments

செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும். மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். … Continue reading

Posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged | 2 Comments

மாருகோ மாருகோ மார்கழி

விடியக்காலைல டிவியப் போட்டா, “மாதங்களில் நான் மார்கழின்னு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லிருக்கார்”னு உபன்யாசர் பக்திப்பழத்தப் பிழிஞ்சிட்டிருந்தாரு. சட்டுன்னு ஒன்னு தோணுச்சு. அனேகமா இந்தக் கிருஷ்ணர் தமிழ்நாட்டுலதான் பொறந்திருக்கனும். ஏன்னா எப்பவும் வெயிலடிக்கிற தமிழ்நாட்டுல மார்கழிலதான் கொஞ்சமாவது குளிரும். அந்த சமயத்துல வடக்க எல்லாம் குளிர் தாங்காம பல்லு பல்லாங்குழி ஆடுமே. அப்படியிருக்க மாதங்களில் மார்கழின்னு … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | 4 Comments

மாலே Moneyவண்ணா

மாலில்லா ஊருக்கு அழகு பாழ்னு நவீன ஔவையார்கள் பாடாதது மட்டுந்தான் மிச்சம். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஊர்லயும் எத்தனையெத்தன மால்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய மால்னு ஒரு மால் தொறப்பாங்க. அடுத்த பத்து மாசத்துல ஆசியாவிலேயே பெரிய மால்னு அடைமொழியோட இன்னொரு புதுமால் பிரசவிக்கப்படுது. நமக்கெல்லாம் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குறதுக்குள்ளயே நாக்கு மூக்கு வழியா வெளிய வந்துருது. … Continue reading

Posted in நகைச்சுவை, பொது | 6 Comments

என் கொங்கை நின் அன்பர்

கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்! வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன? வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண், நகைச்சுவை, விஷ்ணு | 2 Comments

பிரதீபாவளி – சில பிசினஸ் யோசனைகள்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். பலகாரங்களும் இனிப்புகளையும் வகைவகையாக விழுங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு ஒரு பதிவு. இதை நகைச்சுவை வகையில் சேக்கலாம்னு நெனச்சேன். ஆனா கட்டுரையில் இருக்கும் விவகாரங்கள் இப்ப நாட்டுல நடக்குறதாலே நகைச்சுவை உணர்வோட இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம்னு கேட்டுக்கிறேன். அடிச்ச புயல்ல கரைக்கு ஒதுங்குன கப்பல மறுபடி கயித்தக் கட்டி கடல்ல … Continue reading

Posted in நகைச்சுவை | 6 Comments