Category Archives: யாழ்ப்பாணம்

5. டாட்டா யாழ்ப்பாணம்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். ஒரு தாய்க்கும் தந்தைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எல்லாப் பெண் குழந்தைகளப் போலத்தான் பிறப்பு. ஆனால் அந்தக் குழந்தை தனக்குப் போட்டுக்கொண்ட பாதை மேன்மையை நோக்கியதாக இருந்தது. தமிழைப் படித்து தமிழிலேயே இதயம் துடித்து, அந்தத் துடிப்பை மாணாக்கர்களுக்கு எடுத்துச் சென்ற ஆசிரியையாகவும் விளங்கியது. தமிழ்ச் செம்மலாகவும் சிவத்தமிழ்ச்செல்வியாகவும் … Continue reading

Posted in அனுபவங்கள், தெல்லிப்பழை, பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , , , | 8 Comments

4. திருவிழாவும் தெரு உலாவும்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். அன்னைக்கு தைப்பூசம். இணுவில் கந்தசாமி கோயில்ல மஞ்சத்திருவிழா. தேர் இழுக்க ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு. பொதுவா தேர்த்திருவிழா காலைல நடக்குமாம். தைப்பூசத்துக்கு மட்டும் மாலைத் தேர். அதுவும் விளக்குகளால அலங்கரிக்கரிக்கப்பட்ட தேர். அதுனால  கோயிலுக்குப் போற வழியை போலிஸ் அடைச்சிட்டாங்க. நடந்து போகலாம். சைக்கிள் பைக்ல போகலாம். ஆனா ஆட்டோ காரெல்லாம் … Continue reading

Posted in அனுபவங்கள், இணுவில், இலங்கை, பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , , , , , , , | 4 Comments

3. வடுக்களை வருடிப் பார்த்தோம்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். நாங்க போன வரிசைப்படின்னு இல்லாம என்னென்ன எடங்கள் யாழ்ப்பாணத்துல பாத்தோம்னு சொல்றேன். சங்கிலித் தோப்பு சங்கிலி/சங்கிலியான், இவர் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர். சங்கிலி மன்னனுடைய பரம்பரைக்கு ஆரியச் சக்கரவர்த்தின்னு பேரு. இந்த அரச வம்சம் கிபி 13ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரைக்கு ஆட்சி செஞ்சிருக்காங்க. இவங்களுடைய … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , | 4 Comments

2. யாழ் மண்ணில்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். யாழ்ப்பாணத்துல எறங்குனதும் எதோ தமிழ்நாட்டுக்கே திரும்ப வந்துட்ட மாதிரி இருந்தது. ஸ்டேஷன விட்டு வெளிய வர்ரப்போ டிக்கெட்டை கொடுத்துட்டு வந்துறனும். மொபைல் புரட்சிக்கு முந்தி இந்தியாவுலயும் இப்படித்தான் இருந்துச்சு. வெளிய ஆட்டோ பிடிக்கலாம்னு போனோம். ஒரு வயசான வெள்ளைக்காரம்மா தனியா வந்து அங்க நின்னுக்கிட்டிருந்தாங்க. பொதுவாகவே வெள்ளைக்காரங்களுக்கு பயணத்துணிச்சல் நிறைய. … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, நல்லூர், பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , | 8 Comments

தென்னிலங்கை மங்கை – 1

மு.கு இந்தத் தொடர் பதிவில் கூறப்படும் தொல்லியல் வரலாற்றியல் மொழியியல் நாட்டாரியல் வெளிநாட்டியல் பௌத்தவியல் அறிவியல் நையாண்டியியல் அணுப்பிளவியல் மற்றும் பலவிதமான இயல்களில் ஐயப்பாடுகள் வருகின்ற சந்திரமோகர்கள், அவற்றை சர்வசந்தேகநிவாரணியாகிய வெற்றிமோகரிடம் கேட்டுத் தெரிந்து தெளிந்து கொள்ளவும். எனக்கு எது தெரியுமோ அதத்தான் நான் எழுதியிருக்கேன். என்னா எல்லாம் தெரிஞ்சு புரிஞ்ச பிறகுதான் எழுதனும்னா தன்னைத் … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , | 15 Comments