Category Archives: புத்தகங்கள்

Harry Potter

Harry Potter must not go to Hogwarts. மேற்கண்ட வசனம் டாபி என்னும் விசித்திர மந்திரக்குள்ளனால் ஹாரி பாட்டரிடம் சொல்வது. ஹாரி பாட்டருக்குப் பிடித்த இடமே அவனது பள்ளிக்கூடம் தான். அங்கு போகக்கூடாது என்று சொன்னால் அவனைப் போல வருத்தப்படுகின்றவர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த மனநிலையில்தான் ஹாரிபாட்டர் வாசகர்கள் கடந்த சில வருடங்களாக … Continue reading

Posted in அனுபவங்கள், புத்தகங்கள், Harry Potter | Tagged , , | 2 Comments

நாட்டுக்குள்ளே திருவிழா 2015

வழக்கமா புத்தகக் கண்காட்சின்னா ரெண்டு மூனு வாட்டியாவது போய் அள்ளிக்கிட்டு வர்ரது வழக்கம். கூடவே வலையுலக நண்பர்களையும் சந்திக்கிறதுன்னு பொழுது நல்லாப் போகும். இந்த முறை எப்படியெப்படியோ தடைப்பட்டுப் போக முடியாமப் போச்சு. நடக்குமோ நடக்காதோன்னு தடுமாறிக்கிட்டிருந்தப்போ ஒருவழியாக் கடைசி நாள் போயிட்டு வந்தேன். அதே ஒய்.எம்.சி.ஏ கிரவுண்ட். அதே கார் பார்க்கிங். அதே புழுதி. … Continue reading

Posted in அனுபவங்கள், புத்தகங்கள் | 12 Comments

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

உலகத்தில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பைபிள் என்கிறார்கள். தமிழில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பொன்னியின் செல்வன் என்று யோசிக்காமல் சொல்லலாம். அந்தப் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் படித்துப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தப் புதினம் நாடகம் ஆனால்… ஆகுமா? ஆக்கத்தான் முடியுமா? முடிந்திருக்கிறது. மேஜிக் லேண்டர்ன் குழுவினரால் சிறப்பாக முடிந்திருக்கிறது. ஆதி … Continue reading

Posted in நாடகம், புத்தகங்கள் | Tagged , | 4 Comments

நாலு வரியிலிருந்து மூன்று புத்தகங்களுக்கு…

”என்ன சொல்றீங்க?” என்று நாகா கேட்ட போது சரி நான் சொன்ன போது தொடங்கிய பயணம் மோகனையும் கூட்டிக் கொண்டு இன்று மூன்று புத்தகங்களாக மாறியுள்ளது. சினிமாப் பாட்டுகளை வைத்து ஒரு 365 புராஜெக்ட்டா? அதுவும் இசையமைப்பாளரைப் பற்றிப் பேசாமல்… பாடகரைப் பற்றிப் பேசாமல்..வரிகளையும் கவிஞர்களையும் மட்டும் முன்னிறுத்தியா? தொடக்கத்தில் இருந்த தயக்கம் முழுமையாக மறைந்து … Continue reading

Posted in தமிழ், புத்தகங்கள் | 7 Comments

புத்தகக் கண்காட்சியும் நானும் – 2013

புத்தகங்கள் மீது எனக்குத் தணியாத ஆர்வமுண்டு. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய புத்தகங்களை விரும்பிப் படிக்கின்ற நான் சமீபகாலமாக படிப்பது குறைந்துள்ளது. அதற்குக் காரணம் சங்க இலக்கியங்களிலும் தமிழ்க் காப்பியங்களிலும் சற்று ஆழமாக இறங்கியதாகக் கூட இருக்கலாம். அதுவுமில்லாமல் காலமாற்றங்களும் இடமாற்றங்களும் கூடக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போவது ஒரு பண்டிகை … Continue reading

Posted in புத்தகங்கள் | Tagged , | 5 Comments