வாராவாரம் – 1 (18-09-2011)

வணக்கம்

இந்த வாரம் நடந்தது நெறைய. படபடன்னு பாத்துருவோமா.

சென்னையில் ஒரு மழைக்காலம்னு கௌதம் (அ) கௌதம் வாசுதேவ் மேனன் ரொம்ப நாளா படம் எடுக்குறாரு. ஆனா உண்மையிலேயே ஒரு அருமையான மழைக்காலம் சென்னையில். இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் மாதிரி இரவினில் மழை. காலைல எந்திரிக்கிறப்போ ரொம்பவே நல்லாருக்கு.

சென்னை நகரமே, உன்ன யார் என்ன சொன்னாலும், உன்னை நான் விட்டுக்குடுக்க மாட்டேன். 🙂

வெளிநாட்டுல எல்லாம் மெட்ரோ ரயில்ல போறப்போ அடுத்து எந்த எடம் வருதுன்னு காமிக்கிறாங்க. சென்னைல ஒவ்வொரு ரயில்ல இருக்கு. அதுல ஆங்கிலத்திலும் தமிழிலும் வருது. அதுல பையப் பாத்துக்கோங்கன்னு அப்பப்ப அறிவிப்புகள் வேற.

சென்னையில் தமிழ்ப்படங்கள் வாங்கனும்னா நல்ல இடங்கள் செட்டியார் ஹாலில் இருக்கும் ஏவிஎம் சவுண்டு சோன் (AVM Sound Zone) மற்றும் ராஜ் வீடியோ விஷன். நேத்து போயிருந்தப்போ ராஜ் டீவி சகோதரர்களில் ஒருத்தர் அங்க இருந்தாரு. அவரு ஆளு எவரோ எப்படியோ, ஆனா வாடிக்கைக்காரங்க முதலாளிங்குற மாதிரிதான் நடந்துக்கிட்டாரு. அவரே பில் போட்டு, ஆயிரம் ரூவாய்க்கு வாங்கீருக்கங்கன்னு ராஜ்டீவி நாடகம் பதிச்ச கப் பரிசாக் குடுத்தாரு. அத அப்படியே கூட வந்த நண்பன் கிட்ட தள்ளி விட்டுட்டேன்.

சென்னைல முந்தியெல்லாம் ஸ்பென்சர் பிளாசாவுக்குப் போனா வண்டி நிறுத்த இடமிருக்காது. ஒரே நெருக்கடியா இருக்கும். நேத்து போனப்போ கூட்டமே இல்லை. காத்தாடுது. ரொம்பப் பக்கத்துலயே எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் வந்திருக்கு. அங்கதான் கூட்டம். அண்ணா நகர் பக்கத்துக் கூட்டமெல்லாம் ஸ்கைவாக் மாலுக்குப் போயிருது. அது ஸ்பென்சருக்குப் பாதகமாத்தான் ஆகியிருக்கு. மெட்ரோ வந்தப்புறம் கூட்டம் வரும்னு ரெண்டு கடைக்காரங்க பேசுனதக் கேக்கக் கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. அங்க இருக்கும் மியூசிக் வேல்டு கடைய மூடப் போறாங்க போல. ம்ம்ம்.. வாழ்ந்து கெட்ட ஸ்பென்சர். நிலை மாறட்டும்.

கலைஞர் டீவில வர்ர நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உண்மையிலேயே பல நல்ல கலைஞர்களை அடையாளம் காட்டுது. பண்ணையாரும் பத்மினியும் குறும்படத்த ஏற்கனவே பாத்திருந்தாலும் திரும்பவும் பாக்க நல்லாருக்கு. நீங்களும் பாருங்க.

சென்னையில பாட்டாக் கடைல கூட வடக்கத்திக்காரங்களும் வடகிழக்குக்காரங்களும் வேலை செய்றாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா நம்மாளுங்க வெளியூர்லயும் வெளிநாட்டுலயும் போய் வேலை செய்ற மாதிரிதானே. ஒரு சாண் வயிறு. அதுக்குத்தானே இத்தனப் பாடு.

போன வாரமெல்லாம் ஒரே மங்காத்தா கூச்சலாயிருந்தது. இந்த வாரம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம எங்கேயும் எப்போதும் நுழைஞ்சிருக்கு. டிக்கெட் கிடைக்கலை. அடுத்த வாரத்துக்கு ஒத்தி வெச்சிருக்கு. வெட்டி ஆர்ப்பாட்டத்த விட அமைதி அழகாகவே இருக்கு. தல+விஜய் ரசிகர்களே கோச்சுக்காதீங்க.

முடிவா ஒரு ஜில்பான்சியொ கில்பான்சியா. சென்னை தியாகராயா நகர்ல திருமலைப்பிள்ளை சாலையில் (அதாங்க காமராஜர் நினைவில்லம் இருக்கே) இருட்டுனதுக்கப்புறம் நிறைய காஞ்சனாக்கள். எதுக்கா? அதுக்குத்தான்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in பொது and tagged , , , . Bookmark the permalink.

16 Responses to வாராவாரம் – 1 (18-09-2011)

  1. mayooresan says:

    நன்றி அருமையான தகவல்கள். எப்பயாவது மறுபடியும் சென்னைக்கு வந்தா பார்த்துக்கலாம்.

    எங்கேயும் எப்போதும் விஜய் ரீவியில் முனோட்டம் பார்த்தேன். அருமை. கொழும்பிற்கு வரவில்லை இன்னமும். விரைவில் பார்த்திடலாம்.

  2. sundar says:

    ஸ்பென்ஸர் நிலைமை இப்படியாகும்னு நின்னைக்க்வே ஆச்சர்யமாயிருக்கு. ஒரு காலத்தில monopolyயா கொடி கட்டி பறந்தாங்க..ஹும்ம்ம்….எங்கேயும் எப்போதும் ஹிட் ஆகும்னு தோணுது….மெட்ரோ வருமா இல்ல மோனோ ரயில் தானா ??

    • gragavanblog says:

      உண்மையிலேயே ஸ்பென்சர் நிலமை அதிர்ச்சிதான். இன்னைக்கா, நேத்தா.. ஆண்டாண்டு காலமா சென்னையின் அடையாளம் அது. பழையன கழிதல் போல.

      மெட்ரோவும் வருமாம். மோனோவும் வருமாம். வரட்டும் பாத்துக்கலாம்.

  3. sudgopal says:

    ஆஹா..இது எப்போ இருந்து…??? நடாத்துங்க…

    • gragavanblog says:

      இப்பத்தான். இன்னைக்குத்தான். 🙂 எல்லாம் நீங்க சொல்ற வாழ்த்துகள் தான். 🙂

  4. வாரா வாரம் வருமா?

    சூப்பர்.

    மோனோ ரயில், மெட்ரோ ரயில் – என்ன வித்தியாசம்?

    • gragavanblog says:

      ஆமா. வாராவாரம் எழுதனும்னுதான் விருப்பம். ஆடுன காலும் பாடுன வாயும் தொடருல எழுதுன மனசையும் சேத்துக்கனும். 🙂 சும்மா இருக்காது.

      எனக்குத் தெரிஞ்சு. மெட்ரோ ரயில் தண்டவாளத்துல போறதுதான். அது பூமிக்குள்ளயும் தரையிலயும் உயரத்துலயும் போகும். சென்னைல ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ரயிலை மெட்ரோன்னு சொன்னா தப்பில்லை. பூமிக்குள்ளதான் ஓடனும்னு தேவையில்லை. பொதுவா ரெண்டு தண்டவாளங்கள் இருக்கும்.

      மோனோரெயிலுக்கு ஒரு தண்டவாளந்தான். அதுனால அளவிலும் சிறுசு. மேலதான் போகும்.

  5. அப்பறம், ஏன் திடீர்னு வேர்ட் ப்ரஸ்?

    • gragavanblog says:

      ஒரு மாறுதலுக்குத்தான். புதுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சா இருக்கட்டுமேன்னு. 🙂

  6. அட, அதே ஜிராவா? சொல்லவே இல்லை? சொல்லாமயே கண்டு புடிச்சிட்டோம்ல? வருக. வருக 🙂

    • gragavanblog says:

      அதே ஜிராதான். 🙂 வாங்க வாங்க. நீங்க சொல்லாமலே கண்டுபிடிச்சிருவீங்கன்னுதான் சொல்லவேயில்லை. 🙂 சொல்லீட்டா ஒங்க பெருமை எல்லாருக்கும் தெரியாமப் போயிருமே.

  7. ராசா says:

    இதே மாதிரி மெயிண்ட்டெயின் செஞ்சிருங்க

  8. அடடா ஜிரா,
    இங்க இப்படியெல்லாமும் நடக்குதா?

    ரொம்ப நாள் கழிச்சு படிச்சாலும் அதே இனிமையான நடை.

    நடாத்தும். வாழ்த்துஸ்.

    ஸ்பென்ஸர் மேல எனக்கு எப்பவுமே பெரிய அபிப்பிராயம் கிடையாது. அது ஒரு glorified பர்மா பஜார். அவ்ளோதான். ஒரு இடுக்குல வடக்கத்தி பானிபூரி கடை இருக்கும். ரெண்டாவது மாடியிலேனு நினைக்கிறேன். அங்க நல்லாருக்கும். கூட்டமும் இருக்கும். அந்த கடைத்தவிர ஸ்பெஷல் டாஸ்மாக் ஒண்ணு இருக்குறதாவும் கேள்வி. மத்தபடி EA வந்தப்புறம் citycentre கூட போன decadeஇன் பேஷன் ஆயிப்போச்சு.

    • GiRa says:

      இதெல்லாம் நல்லாவே நடக்குது போல. 🙂

      இனிமையான நடைன்னு சொன்னதுக்கு நன்றி. படிக்கிறவங்களுப் பிடிக்கனும். அவ்வளவுதான். 🙂

      ஸ்பென்சர் கொஞ்சம் நெருக்கடியான எடம். அதுலயும் ஒரு வாட்டி தீப்பிடிச்சு… போனா மியூசிக் வேர்ல்டு இல்லைன்னா லேண்ட்மார்க். வேற எதையும் துணிஞ்சு வாங்குற துணிச்சல் இல்ல. 🙂

      நீங்க சொல்ற பானிபூரிக்கடை இன்னமும் இருக்கு. டாஸ்மாக் தெரியலை.

  9. ungaloda ezutha thirumbavum padikaradhu romba sandosama erukku.. neraya ezudhunga..

Leave a reply to வெட்டிப்பயல் Cancel reply