Category Archives: சிறுகதை

புளியுருண்டை மலையும் சித்தரும்

புளியுருண்டைமலைன்னு ஒரு மலை இருக்கு. எங்க இருக்கு? இங்கதான். எங்க ஊர் பக்கத்துல. என்னது? எங்க ஊர் எதுவா? அதெதுக்கு இப்போ தேவையில்லாம. கேள்வி கேக்காம சொல்றதக் கேளுங்க. கொழம்புக்குக் கரைச்சு விடுறதுக்கு உருண்டை பிடிச்சு எடுத்து வெச்ச புளி மாதிரி இருக்குறதால அந்த மலைக்கு புளியுருண்டைமலைன்னு பேரு. அந்த மலை மேல ஒரு கோயில் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை, பொது | Tagged , , , , , , , | 2 Comments

வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்

வேத ஜோதிட பூஷணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள் சுதா. “இதான் மீனா சொன்ன ஜோசியர் வீடு.” சுதா சொன்னது ரமணன் காதில் விழுந்தது. கீழ்ப்பாகத்தில் இருக்கும் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாம் மாடியிலிருந்த மூன்றாவது வீட்டின் முன்னால் நான்கு மணிக்கு மேல் சுதா அந்தப் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை | 4 Comments

அமலன்

ஆழ்ந்த தூக்கம். அசையாத உடம்பு. சீரான மூச்சு. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த அமல்ராஜ் தனது மூளையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்தான். அவன் உடம்பு சூடான உப்புக் கண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ”ஆண்டவரே! நான் உம்மை வேண்டிக் கூப்பிடுவது உமக்குக் கேட்கிறதா? எனக்காக ஒருமுறை என்னிடம் வர மாட்டீரா?” மார்பு வரை நிரம்பிய கண்ணீர் நெஞ்சைக் கரித்துக் கொண்டு கொஞ்சம் … Continue reading

Posted in கதை, சிறுகதை | 8 Comments

செந்தில்நாதனும் மாடித்தோட்டமும்

சென்னையில் வெள்ளம் வந்து வடிந்து அதையெல்லாம் மறந்த பிறகு செந்தில்நாதனின் வீட்டில் ஒரு நாள் காலை. “என்னங்க இன்னைக்குப் பேப்பர்ல ஒரு முக்கியமான நியூஸ் வந்திருக்கு. பாத்தீங்களா?” திமுக-தேமுதிக-பாஜக கூட்டணிச் செய்தியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான். வந்தாளே மகராசி கண்ணில் அப்பார்ட்மெண்ட் அரசியல் தவிர வேறெந்த அரசியல் செய்தியும் தென்படாதே என்றொரு ஐயம். இந்த மாதிரியான … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் | Tagged | 4 Comments

செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும். மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். … Continue reading

Posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged | 2 Comments

தாயா தாரமா…

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்றும் கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான். ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண் | Tagged , | 6 Comments

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன். இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, விஷ்ணு | 14 Comments

என் கொங்கை நின் அன்பர்

கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்! வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன? வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண், நகைச்சுவை, விஷ்ணு | 2 Comments

செந்தில்நாதனும் கார்காலமும்

ஒரு குடும்பத் தலைவனின் விடியல் நல்ல விடியலா என்பது காப்பி டம்ளரிலேயே தெரிந்து விடும். வழக்கதை விட காப்பி நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் கணவர்களுக்கு அது எச்சரிக்கை மணி. அப்படியொரு எச்சரிக்கை மணிதான் செந்தில்நாதன் மண்டைக்குள் அடித்தது. காப்பியைக் குடுத்து விட்டு வழக்கமாக நகர்ந்து விடும் வந்தாளே மகராசி இன்று அருகிலேயே நின்றது அவன் … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged , , | 17 Comments

செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும்

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். தமிழ்நாட்டில் இருக்கும் திருமணமான ஒன்றரைக் கோடி ஆண்களின் அப்பாவிப் பிரதிநிதி அவன். குடியிருந்த கோயிலுக்கும் அவனைத் திருமணம் செய்து கொண்டு வந்தாளே மகராசிக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆணடிமைவாதி. பாவம். அந்த செந்தில்நாதனுக்கும் டீவி விளம்பரத்தில் தோன்றும் இளைஞர்களுக்கும் வரும் பிரச்சனை வந்தது. அவனுக்குப் பொருத்தமாக இருக்கும் … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged , , , , , | 33 Comments